ஜோதி மகாலட்சுமி (ஜோ) என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் .
ஜோவின் தந்தை தான் எவ்வளவு கேவளமான படிநிலையில் இருந்து வந்திருக்கிறேன். எப்படி உன்னால் அந்த கேவளத்தை சகித்துக் கொள்ள முடிகிறது என்கிறார். பரியன், நீங்கள் கேவளத்தை கட்டிக்காப்பாத்த நினைக்கிறீர்கள் .அந்த கேவளமே வேண்டாம் என நான் நினைக்கிறேன் என்கிறான் பரியன்.
ஜோ என்ற திராசு சுமக்கும் இரண்டு சரிசம படிகற்களில் இருக்கும் .நீயும் நானும் இரண்டு தண்டவாளத்தை இனைத்து வரும் அந்த ரயிலை இனி, சேர்ந்து தொடங்குவோம் வா ரயில் விட போலாம் என அழைத்து செல்கிறார் மாரி செல்வராஜ் .!
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்னும் கூலி தொழிலாளர்கள்
வசிக்கும் கிராமத்தில் இருந்து வெளியேறும் முதல் பட்டதாரி பரியேரும் பெருமாள்.தனது கிராம மக்கள் பாதுகாப்பு வேண்டி சட்டம் படிக்க செல்கிறேன்.ஆகவே பரியேரும் பெருமாள் பிஎ.பில். மேல ஒரு கோடு என்ற அடைமொழியும் அவனை தொடர்கிறது.
நீலக்கடலில் சென்று நீந்துவதற்காக மடை வழியாக நீர் வெளியேறி பொது நீரோட்டத்தில் கலந்துக்கொள்ள காலங்கரை வழியாக வந்து சட்டக்கல்லூரியில் தேங்குகின்றான் பரியேரும் பெருமாள் .அவன் தொடர் பயணத்தை மணல் மேடுகள், குப்பைகள் என எதுவும் நிறுத்தாமல் இருக்க இருக்க ஆனந்த் என்ற நண்பனும். அந்த நீரோட்டம் கடலில் கலக்க திசை காட்டியும், அதன் வேகத்தை கூட்டவும் ஜோதி (ஜோ) மகாலெட்சுமி என்ற தோழியும் பரியேரும் பெருமாளுக்கு கிடைக்கிறார்கள்.
கிராமத்தில் தேக்கிவைக்பட்ட கம்மாய் நீர், கடை மடையில் இருந்து
கடலில் கலக்கி நீலக்கடலாக மாற்றம் கொள்ளும் நேரத்தில் . நடுகடலில்
நங்கூறம் போட்டு நிறுத்தப்பட்டு இருக்கும் எண்ணை கப்பல் ஒன்று
வெடித்து அதில் இருந்து வெளியான ரசாயனம் கடலில் படர்ந்து கொண்டே இருந்தது. அந்த ரசாயனம் கடலை மட்டுமே நம்பி வாழக்கூடிய பல லட்சம்
அப்பாவி உயிர்களை கொன்று ஒழித்துக்கொண்டு இருந்தது. அந்த ரத்த வாடை கொண்ட கழிவு நீரும் , மடையில் இருந்து வெளியேறிய நன்னீரும் சந்திக்கும்
பொது நீரோட்டத்தில் நம்பிக்கைகளுக்கு மத்தியிலும் , இழிவுகளுக்கு மத்தியிலும் கலந்து நீலக்கடலில் சென்று சேர்ந்தானா பரியேரும் பெருமாள் என்பதே படத்தின் கதை
(உன்னோட அப்பனும் தாத்தானும் எப்போ அடுத்தவன் நிலத்தில் வேலை செய்றத நிறுத்துறானோ அப்ப தான் இது ஒழியும் என்று படத்தில் வரும் உரையாடல் நமக்கு எடுத்து கூறுவது இதை தான்)அதன் காரணமாக சொந்த இடத்திலே கூலித்தொழிலாளியாக மாற்றம் கொண்டனர். இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டின் பின்னர் என கூற முடியும் .அதே காலகட்டத்தில் தான் சொந்த நிலத்தை இழந்து நிராயுதபானியாக இருக்கும் மக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் என அழைக்க துவங்கினர்கள்.நான்கு வர்ணத்தின் கீழ் தங்களை நிறுவிக்கொள்ளாத அம்மக்கள் மீது பல பழிசுமத்தும் கதையாடல்களை உருவாக்கி அவர்களை படுகொலைகள் செய்ய ஒரு கூட்டத்தை வர்ணாசிரம சாதிகள் உருவாக்கியது .அன்று வரலாற்றில் தொடங்கிய வர்ணாசிரம மறுக்கும் சாதிகளுக்கும் , வர்ணாசிரம சாதிகளுக்குமான போர் இன்று வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
ஏன் இந்த போர் அன்று தொட்டு இன்று வரை நடந்து வருகிறது. இதற்கு பின் இருக்கும் மிகப்பெரிய வரலாற்று பின்னணியை உணர்ந்துக்கொள்ள பாபாசாகேப் என்ற அனையாத விளக்கை அனுகினால் மட்டுமே தீர்வை எதிர்நோக்க முடியும். வடுகர் காலம் முடிந்தது ,ஆங்கிலேயர் காலம் முடிந்து ,தேசியவாத அரசியல் காலம் முடிந்து, இன்றைய திராவிட காலத்திலும் இந்த மோதல் அரங்கேறி வருகிறதா என்றால்
ஒரு சில நடந்த வரலாற்று நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்க முடியும் .தமிழ்நாட்டை சூழ்ந்த தேசியவாத அரசியல் காலகட்டத்தில் முதுகுளத்தூர் கலவரமும்.இன்றைய திராவிட அரசியல் காலகட்டத்தில் நடந்த தென் மாவட்ட கலவரமும் அதை ஒட்டி எழுந்த ஒரு உரையாடல் அன்றைய காலகட்டத்தில் (1996_2001) முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்ற கருணாநிதி அவர்களை சந்திக்க பட்டியலின மக்கள் தலைவர்கள் சென்று தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும் அளவில் பொருள் சேதம் நடந்து இருக்கிறது என்ற புகாருக்கு இணையாக கலைஞர் அவர்கள் ஒரு புகாரை பட்டியலின மக்கள் மீது கூறினார் பட்டியலின மக்கள் மத்தியில் பொருளாதார இழப்பு என்றால் சாதி இந்துகள் தரப்பில் பெரும் உயிரிழப்பு .பொருளை ஈட்டிவிட முடியும் உயிரை ஈடு செய்ய முடியுமா என்ற கேள்வியை கேட்டு அத்தலைவர்களை அனுப்பினார் .அந்த சூழ்நிலையிலும் கலைஞரை முதலமைச்சராக கொண்ட திராவிட கட்சி பட்டியலின மக்களின் ஆதரவாகவே நின்றது என்பதற்கு சாட்சியாக சாதி இந்துக்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் பட்டியலின மக்களை பெரும்
சுமையற்ற வழக்குகளில் கைது செய்தனர்.
ஆகவே இதே போல் தான் முதுகுளத்தூர் கலவரத்திலும் துப்பாக்கி சூடு பட்டியலின மக்களுக்கு ஆதரவாக இருந்தது.இந்த இரண்டு கலவரம் தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் பட்டியலின மக்களை திரும்பி பார்க்க வைத்து.ஒடுக்கப்பட்ட மக்களின் போர் குனம் வெளிக்கொணர அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் காரணமா இருந்தது.ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இவ்வகை திணிப்பை உண்டாக்க
ஆகவே இதே போல் தான் முதுகுளத்தூர் கலவரத்திலும் துப்பாக்கி சூடு பட்டியலின மக்களுக்கு ஆதரவாக இருந்தது.இந்த இரண்டு கலவரம் தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் பட்டியலின மக்களை திரும்பி பார்க்க வைத்து.ஒடுக்கப்பட்ட மக்களின் போர் குனம் வெளிக்கொணர அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் காரணமா இருந்தது.ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இவ்வகை திணிப்பை உண்டாக்க
காரணமாக இருந்தது யார் என்று உற்று நோக்க முன்னர் கூறியது போல இங்கும் பாபாசாகேப் எழுத்துகளே தேவைப்படுகின்றது. இப்படி
ஆதிக்க சாதி வெறி தோல்வி கண்டதன் விளைவாக தான் குழு குழுவாக மோதுவதை விட
ஒரு குழுவாக தனி நபரிடம் பலி தீர்க்க மோத தொடங்கினர். அதன் பின்னணியில்
தான் தனி மனித சாதிய கொலை , இனக்கலப்புக்கு எதிரான ஆணவ கொலை, உரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான கொலை, சுரண்டல்வாத கொலை என அனைத்தும் சாதியை தூய்மைப்படுத்தும் (purity) கொலையாக
நடக்க தொடங்கியது.
இந்த மனநிலை எப்படி பட்டது என்றால் ஏதோ ஒரு காரணியில்
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபர் உட்பட்டு இருந்தால் கூலியே வாங்காமல் கொலை செய்யும் நிலையை எட்டி நின்றது.இதை இனத்தூய்மை என கருதி தங்களின் குலசாமிக்கு ஆற்றும் பலி கடனாக பார்க்கப்படுகிறது. இதன் வெளிப்பாடு தான் படத்தில் நுனுக்கமான முறையில் பல அப்பாவி உயிர்களை காவு வாங்கிய மேஸ்தரி என்ற வயதான கதாப்பாத்திரம் .
இந்த அரசியல் கட்சிகளின் பட்டியலின மக்கள் மீது செலுத்திய ஆதரவு கதிர் வீச்சே பள்ளியில் தொடங்கி கல்லூரிகளையும் விட்டு வைப்பது இல்லை.
கொடியங்குளம் கலவரத்தின் அடிப்படை வேர் பள்ளியில் இருந்து தான் தொடங்கியது.கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் இருந்து, கல்லூரி இருக்கை வரை தொடரும் சாதிய மனநிலை. கல்லூரியில் படிக்கும் தனது சாதி பெண்ணிற்கு அவளை
அறியாமலே காவலனாக மாறுவதில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. அத்தோடு
நின்றுவிடாமல் ஒரு படி மேலே சென்று சாதிக்கு உன்மையாக இருப்பதாக நினைத்து முன்னுக்கு பின் உண்மை நிலை அறியாமல் . சாதி என்ற 1000 வாட்ஸ் மின்சார வேலி கம்பியை அப்பெண் தாண்டி விட கூடாது என்ற நிலையை உருவாக்குதல்.இப்படி சாதிக்கு ஆதரவாக இருந்து தனது சுயசாதி பெண்களின் கல்வியை அழித்தொழித்த கதைகளை சாதி இந்துக்களின் குடி வரலாறு பேசிக்கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட குடி வரலாறு பெண் இனத்திற்கு எதிராக பெண்ணையே முன்னிறுத்தும் தன்மையை கொண்டது .ஆகவே தான் பெரும்பாலான ஆணவப் படுக்கொலைகள் பெண்களை பகடிகாய்கலாக வைத்தோ , பெண்ணின் உறவினர்களான சித்தப்பா (மகன்) , பெரியப்பா (மகன்), முன்னிலைப்படுத்தி நடக்கிறது . இதை பரியேரும் பெருமாள் படத்தில் வரும் சங்கரலிங்கம் கதாப்பாத்திரம் நமக்கு உறுதிப்படுத்தும்.
இப்படிப்பட்ட குடி வரலாறு பெண் இனத்திற்கு எதிராக பெண்ணையே முன்னிறுத்தும் தன்மையை கொண்டது .ஆகவே தான் பெரும்பாலான ஆணவப் படுக்கொலைகள் பெண்களை பகடிகாய்கலாக வைத்தோ , பெண்ணின் உறவினர்களான சித்தப்பா (மகன்) , பெரியப்பா (மகன்), முன்னிலைப்படுத்தி நடக்கிறது . இதை பரியேரும் பெருமாள் படத்தில் வரும் சங்கரலிங்கம் கதாப்பாத்திரம் நமக்கு உறுதிப்படுத்தும்.

.
முதுகுளத்தூர் கலவர நேரங்களில் சாதி இந்துகள் ஒடுக்கப்பட்ட
மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட ஒரு சில இச்சையான
எச்சரிக்கைளை கொடுப்பது வழக்கம் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலக்குவதும் , விச
மருந்தை கலக்குவது,ஆள் இல்லாத நேரம் பார்த்து குடிசைக்கு தீயிட்டு
கொழுத்துவது, வரலாற்றில் நிரை கவர்வது வழியாக திருடிய மாடை யாகத்தில் சுட்டு பொசுக்குவது போல, திருடிய கருப்பியை தண்டவாளத்தில் வைத்து பொசுக்குவது. நீரில் மலத்தை கலக்குவதற்கு பதிலாக சிறுநீர் கழிப்பது என ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமத்தை எந்த நேரம் வேண்டுமானாலும் வன்முறை கவ்விக்கொண்டு, தேம்பி நிற்கும் கேணியில் சாதி இந்துகள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் உடல் மிதந்து ரத்த ஆறு ஒட முன்னுரை தரும் முதல் காட்சிகள்.
தன்னை விட வயது அளவில் உயர்ந்த நிலையில் இருக்கும் நபரையும், தனக்கு நகிரான நபரை சாதிய வன்மத்தோடு அனுகும் உளவில் எங்கு இருந்து
தோன்றி இருக்க முடியும் . வரலாற்று இந்த சாதிய வன்மம் கடந்து வர எது
காரணமாக இருக்க முடியும் .மனு சாஸ்திரத்தின் பெயரில் தன்னை உயர்த்திக்கொண்டும் பிறறை தாழ்த்திக்கொள்ளும் மனநிலையும் பிறப்பில் இருந்தே குடும்பங்கள் அளவில் உரையாடப்படுகிறது.தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருகிறது. தனது வீடுகளுக்குள் ஆண் வரிசை வன்மம் என்ற விதை தூவியும் .பெண் வாரிசுகளை புறச்சூழலுக்கு ஏற்றார் போல வளர்ப்பதும் என பாலின வகைப்பாடு வளர்ப்பு இருந்தாலும்
சாதி என்ற கட்டிடத்தின் செங்கல்லாக மட்டுமே இருக்க வேண்டும் . அவ்வகை வன்மம் தான் எளிய மனிதனின் வெளிப்பாடு தனக்கு நிகரான மனிதன் மீது சிறுநீர் கழிக்கும் காட்சியும்..
சாதிய வர்ணம் அரசு இயந்திரத்தில் கலந்து வர்ண இயந்திரமாக மாற்றம் கொள்ளும் போது அதில் முதல் பலிகடாக்களாக சூத்திரர்கள் இருந்தாலும். .வர்ணத்தின் கடை நிலை சூத்திர சாதிகள் இயந்திரத்தை கையகப்படுத்தும் போது சாதிய வன்மம் கடத்தப்பட்ட தலைமுறைகளாக வெளிக்கொணரும் போது தலையில் அணியும் தொப்பியல் இருந்து காலில் அணியும் பூட்ஸ் வரை வன்மம் அரங்கேற துவங்கி பட்டியலின மக்களை குறிப்பார்க்க துவங்கிவிடுகிறது. சாதி சங்கங்களால் எந்த ஆதாயமும் அடையாமல் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தான் சாதிய இயந்திரம் தொத்தி ஏறிக்கொள்ளும் குதிரை சவாரி.தான் புளியங்குளம் குரலாக இருக்கும் R.K ராஜா காவல் துறை அதிகாரியால் வயது வேறுபாடு இல்லாமல் தாக்குப்படும் காட்சி.
பொது ஒடுக்குமுறையில் இருந்து தனிமனித ஒடுக்குமுறைக்கு உட்படும்
ஒருவன் அவ்வளவு ஒடுக்குமுறைகளையும் தாங்கிக்கொள்ளும் நெஞ்சமாக ஏன் மாற வேண்டும்.? அனைத்து சாதிகளுக்கும் கிடைத்த கல்வியை முதல்தலைமுறையான தான் (பரியன்) தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையாக மட்டுமே இருக்க வேண்டும் .ஒரு வேலை ஜோதி மகாலெட்சுமி ( ஜோ) என்ற சாதிய கட்டுமானத்திடம் உறவாட வாய்ப்பு இல்லாமல் போயிருந்தால். தனக்கான ஜாதிய ஒடுக்குமுறைக்கு போராடி இருக்க மாட்டான். பிறருக்கான ஜாதி ஒடுக்குமுறைக்கு போராடி இருப்பான். பரியேரும் பெருமாள் தன்னை சுயஜாதி வட்டத்தில் இணைத்துக் கொள்ளாதவன். ஆகவே தான் அவனுக்கு தெரிந்து முறையில் பரியன் என்று எழுதுகிறான்,உயிரற்ற மேஜயை போட்டு உடைக்கிறான், தன்னை
தண்டவாளத்தில் கடத்தி கொலை செய்ய நினைத்த கூட்டத்தை கூட உயிரோடு விட்டு விடுகிறான். இதுவே அவனது எதிர்வினையாக கருதுகிறான்.
ஒருவேலை பரியன் தன்னை ஜாதிய வட்டத்தில் இனைத்து
இருப்பானாயின் *எத்தனையோ ரத்த பலிகளை எங்கள் முதுகினில் தந்தவனே,
அத்தனையும் வட்டி கடனுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம்" என்பது போல அவமாணப்பட்ட ஜோதி மகாலெட்சுமியின் வீட்டில் ஒரு உயிர்பலியோ, அல்லது திரும்ப செய்தலுக்கு சான்றாக ஜோதி மகாலெட்சுமியை திருமணம் செய்து இருப்பான்.அப்படி இருந்திருந்தால் பரியனின் தந்தை வேட்டி காற்றில் பறந்திருக்காது . இந்த நிலையில் இருந்து பரியன் மாறுபட்டு நின்ற காரணத்தால் தான் பரியன் பொது சமூகத்திடம் வென்று . தமிழ் சினிமாவின் அகராதியாக மாறி இருக்கிறான். இது எப்படி என்றால் அஞ்ஞாடி நாவலில் சுயசாதியில் மாட்டிக்கொள்ளாத ஆண்டியை போலவும்.மாகர் என்ற சாதி இழிவை விமர்சனம் செய்த பாபாசாகேப் அம்பேத்கர் போலவும் .ஆகவே தான் தன்னை டாக்டர் அம்பேத்கர் ஆக வேண்டும் என ஆசைக்கொள்கிறான்.தனது கல்லூரி தலைமை ஆசிரியரை பாபாசாகேப் அம்பேத்கராக நினைத்து தன்னை போராடி படிக்கச்சொன்னதாக கருதி கடுமையான ஜாதி நெருக்கடிகளுக்கு மத்தியில் படிப்பை தொடர்கிறான்.
கதிர் பரியேரும் பெருமாள் என்னும் கதாப்பாத்திரத்தில் (Nativity psychology) கிராம் உளவியலை நன்கு உணர்ந்து நடித்து இருக்கிறார். மதயானை கூட்டத்தை விட மிகவும் சுதந்திரமாக நடித்து இருக்கிறார்.வாழத்தாரை தலையில் தூக்கிவைத்து நடந்து வரும்போதும் ,ஜோ வின் வீட்டின் திருமண நிகழ்வில் அவமானம் அடைந்த நிலையில் வெறுப்பின் உச்சத்தில் கதிரின் நடையும் , கருப்பியை காப்பாற ஓடும்போது ஒட்டமும் .ஜோவிடம் முதல் முறை பேசும் போதும் கருப்பி போல பெஞ்சுகளுக்கு மத்தியில் தாவி தாவி செல்வதும்.ஜோ தனது சகோதரியின் திருமணம் அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுக்கும் போது ஆனாந்தமாக ஒடி குதித்து அவளிடம் வாங்குவதும். கோட்டா என்னும் பெயரில் வினவும் ஆசிரியரை கடினமாக மிரட்டி சாடுவதும்,சங்கரலிங்கத்தோடு முட்டி மோதுவதும், யோகி பாபுவோடு நட்பின் அடிப்படையில் உரையாடுவதும் என நடிப்புக்கு தனி ராஜ்ஜியமே அமைத்து கொண்டு நடிக்க தொடங்கிவிட்டார்.
கதிர் பரியேரும் பெருமாள் என்னும் கதாப்பாத்திரத்தில் (Nativity psychology) கிராம் உளவியலை நன்கு உணர்ந்து நடித்து இருக்கிறார். மதயானை கூட்டத்தை விட மிகவும் சுதந்திரமாக நடித்து இருக்கிறார்.வாழத்தாரை தலையில் தூக்கிவைத்து நடந்து வரும்போதும் ,ஜோ வின் வீட்டின் திருமண நிகழ்வில் அவமானம் அடைந்த நிலையில் வெறுப்பின் உச்சத்தில் கதிரின் நடையும் , கருப்பியை காப்பாற ஓடும்போது ஒட்டமும் .ஜோவிடம் முதல் முறை பேசும் போதும் கருப்பி போல பெஞ்சுகளுக்கு மத்தியில் தாவி தாவி செல்வதும்.ஜோ தனது சகோதரியின் திருமணம் அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுக்கும் போது ஆனாந்தமாக ஒடி குதித்து அவளிடம் வாங்குவதும். கோட்டா என்னும் பெயரில் வினவும் ஆசிரியரை கடினமாக மிரட்டி சாடுவதும்,சங்கரலிங்கத்தோடு முட்டி மோதுவதும், யோகி பாபுவோடு நட்பின் அடிப்படையில் உரையாடுவதும் என நடிப்புக்கு தனி ராஜ்ஜியமே அமைத்து கொண்டு நடிக்க தொடங்கிவிட்டார்.
ஜோவான ஆனந்தியின் கதாப்பாத்திரம் சற்று மாநிறமாக பெண் செய்திருந்தால் இன்னும் திறம்பட இருக்கும் . ஜோவை பார்ப்பன பெண்ணாக தான் பார்க்க முடிகிறது.அப்பா சாமி போதும் என்று பேசும் வசனம் தொட்டு, சங்கரலிங்கமும் பரியானும் மோதிக்கொள்ளும் காட்சியில் இரண்டு கண்களை பொத்தி அழுவது என அனைத்து மரபோடு ஒட்டாத கதாப்பாத்திரம் , ஆனாலும் ஜோ என்ற ஆனந்தி கடினமாக நடித்து இருக்கிறார்.
யோகிபாபு வழக்கம் போல கதாநாயகனின் நண்பன் என்றாலும் பரியனை தன் கண்முன்னே தெரியும் அனைத்து அக்கிரமங்களில் இருந்து காத்து வருகிறான். எப்படி சொல்லி பாராட்ட அந்த எதார்த்த நடிப்பை.மேஸ்தரி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வயதான முதியவர் முதுமையை நுனுக்கமான கொலைகளை செய்ய கையாளும் யுத்தியும் .தான் சாதிய கொடுங்கோன்மையாக வெளிப்படுத்திய விதம் சிறப்பு.குறுகிய காட்சி என்றாலும் படம் முழுவதும் திரைக்கு பின் வாழ்வது போல கதைக்கு பின் உயிரோட்டமாக வாழ்கிறார். சங்கரலிங்கம் சாதி வக்கிரப் புத்திக்கொண்ட கதாப்பாத்திரமாக படம் நெடுக எங்குமே தொய்வு இல்லாமல் நடித்து இருப்பது. தமிழ் சினிமாவுக்கு ஒரு எதிர்மறை கதாப்பாத்திரம் உதிக்க தொடங்கிவிட்ட நிலை . பரியனை
புளியங்குளம் கிராமத்தில் இருந்து நகர்த்தி கல்லூரி வரை கொண்டு செல்ல
காரணமாக இருந்த ஒவ்வொரு கிராமத்து மக்கள் முகம் மனதில் நீங்காத ஒன்று.
சந்தோஷ் நாராயணன் இசையை அனுகும் போது தென் தமிழக இசையை அவரால் ஒப்புசெய்ய முடியமா என்று நிலை தோன்றியது அதற்கு காரணம் கருப்பி பாடலை (RAP) ரப் பாணியில் அனுகிய முறை . இவ்வகையில் வணக்கம் வணக்கம் என்ற பாடல் லைவ் எடுத்தாலும், எங்கும் புகழ் துவங்கும் பாடல் ஸ்டியோவில் ரெக்காடு செய்யப்பட்டது ஆக ஒட்டுமொத்த ஆறு பாடலையும் கதை களத்திற்கு ஏற்றார் போல நவீன இசையில் கட்டமைத்து கொடுத்து இருப்பது அழகு நிறைந்த இதம் .
ஸ்ரீதர் ஒளிப்பதிவு இதுவரை தமிழகம் கண்டிடாத நெல்லையை கொடுத்து இருக்கிறது .இடைவேளை முடிந்து தொடங்கும் முதல் காட்சியில் top angel இல் வரண்ட நிலத்தின் கோடுகளை உலக வரைப்பட கோடுகளாக காட்டுவதும். பரியன் பதரி ஒடும் இரண்டு காட்சிகளும். .Fixed frame's பதிவு செய்யப்படும் பரியன் பெண்கள் கழிப்பறையில் தள்ளிவிடப்படும் காட்சியும், ஜோ வீட்டில் நடக்கும் திருமணத்தில் பரியனை தாக்கும் காட்சிகள் தான் சாதி எவ்வளவு கோர முகம் கொண்டது என அனைத்து தரப்பு மக்கள் மனசாட்சியும் இதுநாள் வரை தாங்கள் தங்களை அறியாமலே ஏதோ தவறு செய்து வந்துகொண்டே இருக்கின்றோம் என்று கேட்க வைத்து தங்கள் வருங்கால தலைமுறைக்கு சாதியே நமக்கு வேண்டாம் என தங்கள் தலைமுறைக்கு சாதியை கடத்த கூடாது எண்ணும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது .மனம் நிறைந்த வாழ்த்துகள் ஸ்ரீதர், நீங்கள் மாரி செல்வராஜ் அவர்களின் கண்ணாக செயல்பட்டமைக்கு.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு இதுவரை தமிழகம் கண்டிடாத நெல்லையை கொடுத்து இருக்கிறது .இடைவேளை முடிந்து தொடங்கும் முதல் காட்சியில் top angel இல் வரண்ட நிலத்தின் கோடுகளை உலக வரைப்பட கோடுகளாக காட்டுவதும். பரியன் பதரி ஒடும் இரண்டு காட்சிகளும். .Fixed frame's பதிவு செய்யப்படும் பரியன் பெண்கள் கழிப்பறையில் தள்ளிவிடப்படும் காட்சியும், ஜோ வீட்டில் நடக்கும் திருமணத்தில் பரியனை தாக்கும் காட்சிகள் தான் சாதி எவ்வளவு கோர முகம் கொண்டது என அனைத்து தரப்பு மக்கள் மனசாட்சியும் இதுநாள் வரை தாங்கள் தங்களை அறியாமலே ஏதோ தவறு செய்து வந்துகொண்டே இருக்கின்றோம் என்று கேட்க வைத்து தங்கள் வருங்கால தலைமுறைக்கு சாதியே நமக்கு வேண்டாம் என தங்கள் தலைமுறைக்கு சாதியை கடத்த கூடாது எண்ணும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது .மனம் நிறைந்த வாழ்த்துகள் ஸ்ரீதர், நீங்கள் மாரி செல்வராஜ் அவர்களின் கண்ணாக செயல்பட்டமைக்கு.
மாரி செல்வராஜ் - பூனைகளுக்கு எலியை விரட்டி கொன்று உன்னும் உரிமையை யார் கொடுத்து ?. சிங்கங்ளுக்கு அனைத்து மிருகத்தை வேட்டையாடும் உரிமையை யார் கொடுத்து ?.ஒரு சிங்கத்தை சிங்கம் இனம் வேட்டையாடத போது கூட, ஒரு மனிதனை மனிதன இனம் ஒடுக்குவதற்கும் கொள்வதற்கு யார் உரிமையை கொடுத்தது.? இந்த மண்ணில் நீ யார் ,
இம்மண்ணில் "நான் யார்" ? என்ற கேள்வியை தான் பரியேரும் பெருமாள் படத்தின் அடினாதம். தென்கோடியில் இருந்து நகரத்தை நோக்கி
(PUSH FACTORS - தள்ளப்பட்ட காரணிகள்) நகர்ந்து சென்ற பலரில் ஒருவர் மாரி செல்வராஜ்.
ஆனால் அந்த நகர்வுக்கு ஒரு வீரியம் இருக்கிறது. தான் பூர்விக மண்ணில் இருந்து ஜாதிய சுரண்டல்வாதத்தின் பெயரால் துறத்தப்படும் ஒருவன்
வெகுஜன மக்கள் வாழும் நீதிமன்றத்தில் சொல்ல நினைக்கிறான். தாமிரபரணி
யில் கொல்லப்படாத நான் ஏன் துறத்தப்பட வேண்டும் ? என்று .
இது வரை தமிழகம் மறந்த அல்லது விடுப்பட்டு போன ஒரு களத்தை நோக்கி கேமாராவை திருப்புகிறார். இன்று வெகுஜன மக்கள் வாழும் நீதிமன்றத்தில்
குற்றவாளி கூண்டில் பாசிசத்தால் நிறுவப்பட்ட "ஜாதியம்" தனது இறுதி தீர்ப்பை கேட்க காத்துக்கொண்டு இருக்கிறது. அப்போது நீதிபதிகள் கேட்கிறார்கள் மனிதனும் மனிதனும் ஒர் இனம் தான் ஒரே நிலை தான் என ஏற்றுக்கொள்கிறாயா என்று. ஆம் என ஒற்றை குரலில் ஒட்டுமொத்த ஜாதிய சமூகமும் கண்ணீர் விட்டு சொல்கிறது , அது தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கொண்டாடி வரும் பரியேரும் பெருமாளின் வெற்றி .
ஒரு இயக்குனர் என்ன மாய மந்திரம் செய்து ஆங்காங்கே பாடலை வைத்து புதுப்பித்து கொண்டு இருந்தாலும்.அவரின் திரை அனுபவம் , அவரின் காட்சி அமைப்பு , அவரின் நிலையை சொல்ல
தகுதியான இடம் இரண்டே. அதுவே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானம்
செய்கிறது.அவ்வகையில் மாரிசெல்வராஜ் மிகவும் துனிவான இயக்குனர்.
அவ்விடங்களில்
கம்பீரமான ஒரு முடிவை தருகிறார் .அதில் ஒன்று பரியனின் தந்தை அறிமுகம் .மற்றொன்று நீங்களே தேடிக்கொள்ளவும்.அனைவரும்
மூர்க்கமான ஒரு நபரை அறிமுகம் செய்யும் இடத்தில் அதற்கு மாறாக (எதிராக அல்ல)
ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி கண்ணில் கண்ணீரை பொங்க வைத்து விடுகிறார். இதில்
இருந்து நாம் பொங்கி வெளிவரும் போது சரிசமமாக இருந்த இரண்டு தேநீர் குவளையை
காண்பித்து அதன் ஒரு பக்கம் பரியனும் ( தண்டவாளத்தில் )ஒரு பக்கம் ஜோதி
மகாலெட்சுமி (தண்டவாளத்தில் ) இருக்க . எனது தனி மனித மோதலால் உனக்கு பின்னே இருக்கும் ஜாதிய கட்டுமானத்தை உடைத்து விட்டேன். இனி என் தோழியாக நீ எப்போது வேண்டுமானாலும் என்னோடு பேசலாம் பழக்கலாம் ..இனி நாம் சேர்ந்து ரயில் விடலாம்.என்று கூறி படத்தையே .முடித்துவிடுகின்றார்.
ஒட்டுமொத்ததில், பரியன் படி படியாக ஏறி சென்று பாசிசத்தை எதிர்காமல் தனது கையில் இருக்கும் குதிரையினால் பிறந்து சென்று தன்னிடம் இருக்கும் சுருள் போன்ற ஆயூதத்த்தால் மீண்டும் மீண்டும் ஜாதிய
மின் கம்பிகளால் உயிரோட்டம் அடையும் கருவியை மொத்தமாக
செயலிழக்க செய்கிறான் . இந்த முறை அவனை நாம் யாரும் தடுக்க வேண்டாம் .