அறிவியலில் கரையார்கள்
சங்க காலத்தில் இருந்தே ஒட்டுமொத்த மன்னர்கள்,வனிகர்கள், நிலச்சுவான்தார்கள் என அனைவரும் கடையர்களை (கரையார்) மையமாக வைத்தே இயங்க வேண்டிய நிலை வரலாற்றில் இருந்தது. அதற்கு காரணம் நாட்டின் நீர்நிலைகள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது
புதிய_நீர்_பகீர்வு_முறை
வரலாற்று ரீதியாக கரையார் , மருத நிலத்தின் நீர் நிலைகளில் மீன் புடித்தல் மற்றும் மடை திறப்பத்து போன்ற மரபு தொழிலை செய்து வந்தனர். ஒரு நாடு என்பது மன்னன், வணிகன் ,வேளார்களை உட்கொண்ட கட்டமைப்பு.நீர் ஆதாரம் என்பது ஒரு நாட்டின் அடிப்படை தேவையாக இருந்தது .
ஓடும் நதியில் இருந்து கால்வாய் வெட்டி அதை நாட்டின் அகழியோடும்,
நீர் இயற்கையால் அமைந்த நீர் நிலைகளோடு இணைக்க அவ்வகை நீர் நிலைகளை பேணி பராமரிக்க கரையார்கள் நாட்டின் நீர் துறையில் இருந்து வந்தனர்
![]() |
நீர் நிலைகளில் பணியாற்றும் கரையார்களுக்குவழங்கப்படும்கெளரவம் |
கரையார்கள் நீர் நிலைகளில் இருக்கும் மடைகளை திறப்பதன் வசம் நாட்டுக்கு சொந்தமான பல பெரிய நிலபரப்புகளில் இருக்கும் உழவு நிலத்திற்கு நீரை பாய்ச்சிவிட்டு அடுத்த நிலபரப்புகளுக்கு செல்லும்.
வறைமுறைகள் நாட்டில் இருந்தது. நீர் பாசனத்தில் இருந்து மடை
வழியாக வெளியேறும் நீர் தங்கு தடையில்லமல் அனைத்து உழவு நிலங்களுக்கு சென்றுக்கொண்டு இருக்கும். ஆகவே தான் வைகை
ஆற்று நீர் பாண்டிய நாட்டு உள்ள அனைத்து நீர் நிலைகளில் தங்கிக் கொள்ளும் என்றும் .பெரிய அளவில் கடலில் கலந்து இல்லை என்று வரலாற்று பக்கங்கள் இன்றும் கூறி வருகின்றது .
இப்படி வரலாறுகள் பல இருந்தும் ஒரு நிலபரப்பு உழவு நிலத்தில்
நீர் பாய்ச்சிவிட்டு அடுத்த இடங்களுக்கு நீர் பாதை செல்வதால் நிலச்சுவான்தார்கள் மத்தியிலே பல மோதல்கள் வந்துள்ளது ,
அதில் நீரை பகிர்ந்து கொடுக்கும் நபர் ஒருவர் நிலச்சுவான்தார்களால் கொலைச் செய்யப்பட்டும் இருக்கிறார் . அந்த
பிரச்சினை தீர்த்துவைக்க
ஒரு வரலாற்று சிறப்புவாய்ந்த சிற்றரசர் வந்துள்ளார் என்பது நான் களப்பணி வழியாக நான் திரட்டிய வரலாற்று தகவல்களில் இருந்து வெளிக்கொணரும் உண்மைகள்.
இனி நாட்டின் நெல் வனிகத்திற்கு தடையாக இருக்கும் இவ்வகை மோதல்கள் ஒருபோதும் வராமல் இருக்க .சங்க கால நீர்நிலை நிபுணர்களான கரையார்கள் (கடையர்) உருவாக்கி
நீர் பகிர்வு முறையே
![]() |
நீர் பகிர்வு முறை |
நாம் கரை மேடுகள் வழியாக நமது கிராமத்தில் இருந்த வெளியேறும் போது அதிகமாக
பார்த்து இருப்பது மடையில் இருந்த வெளிவரும் நீர் ஒருதொட்டியில் தேங்கி அதில் இருக்கும் ஒரு(one way) நுழைவாயில் வழியாக நீர் வெளியறுவதை பார்த்திருக்க கூடும்.
ஆனால் சங்க காலத்தில் மடையில் இருந்து வெளியாகும் நீர் (three way) மூன்று புறமாக வெளியேறி இருக்கிறது.
.
இதில் நாம் உற்றுநோக்க வேண்டியது ஒரு(கண்) வழியாக நிலத்திற்கு நீர் செல்லும் வழிப்பாதைக்கும், மூன்று (கண்) வழியாக நீர்
செல்லும் வழிப்பாதைக்கும். ஒரே அளவில் எவ்வளவு வேகம் மடையில் இருந்து நீர் வெளிவந்து
இருக்கும் என்பதை வேறுபடுத்தி சிந்தித்தோமாயின்
அவ்வகை மடைகளை திறந்தும் , அடைக்கவும் செய்யும் கரையார்கள்,. நீரோடு முட்டி மோதும் எவ்வளவு பெரிய மாவீர்ர்களாக இருந்திருக்க வேண்டும் , எவ்வளவு தெளிவாக நீரின் நுணுக்கத்தை அனு அனுவாக படித்திருக்க வேண்டும் .
இவர்களை பற்றி ஒரு வீ்ரமான வரலாறு கூடவா இம்மண்ணி்ல் இருந்திருக்காது.
கலையில் கரையர்கள்
கரையார்கள் மருதநில
மீனவர்கள் என்பதற்கு அதிகம் வெளிப்படும் சான்றாக. மருதம் - நெய்தல் தினை இனைக்கும் கம்பராமாயண
பாடல்
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
மருத நிலத்தில்
*கடைசியர் - மருத நில மகளிர்
(பெண் பால்)
*கடையர் - ஆண் பால்
நெய்தல் நிலத்தில்
*நுளைச்சியர்-நெய்தல்
நில மகளிர்
கடைசியர் குரவை - மருத
நில மாதர்களின் குரவைக் கூத்துப் பாடல்;
கொன்றை வேய்ங்குழல் கோவலர்
முன்றிலில்-கொன்றையாலும் மூங்கிலாலும்
ஆகிய குழல்களை உடைய இடையர்களின் வீட்டு முற்றங்களில்;
கன்று உறக்கும்- கன்றுகளை உறங்கச் செய்யும்;
நுளைச்சியர் செவ்வழி- நெய்தல்
நில மகளிர்
பாடும் செவ்வழிப் பண்
கொண்ட பாடல்;
புன் தலைப் புனம்-
சிற்றிடம் கொண்ட புனங்களிலும்;
காப்புடைப் பொங்கரில்; -காவல்
உடைய சோலைகளிலும்;
சென்று இசைக்கும்- பரந்து
சென்று ஒலிக்கும்.
முல்லையும் (கொன்றை) மருதமும் (கடைசியர்) நெய்தலும் (நுளைச்சியர்) கலந்த திணை மயக்கம்
குரவைக்
கூத்து
குரவைக்
கூத்தே கைகோர்த்தாடல்
காமமும் வெற்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கை பிணைந்தாடுவது - என்று அடியார்க்கு நல்லார்
உரை எழுதுகிறார்.
ஒருவரை
ஒருவர் தழுவி ஆடுவது. தலைவியை அழைத்து ‘கொண்டு நிலை’ பாடும்படி கூறுகிறாள். கொண்டு நிலைக்கு
நச்சினார்க்கினியர் உரை செய்யும் போது,
‘ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுதலிற் கொண்டு நிலையாயிற்று’ என்கிறார். பல்வேறு
குரவைகள் சுட்டப்படுகின்றன.
·போர்வீரரின் போர்க்களக் குரவை (புறம்: 22)
·பரதவர் கள்ளுண்டு ஆடும் குரவை (புறம்: 24)
·கள்ளுண்ட குறவரின் குரவை (புறம்: 129)
·நெய்தல்
மகளிர் குரவை (அகம்: 20, பதி. ப: 73) நெய்தல் நிலப்
பெண்கள் தங்கள் ஆட்டத்தின்போது,
தங்கள் கணவன் மார்களின் நேர்மையற்ற
தன்மையினைப் பாடியுள்ளனர் (அகம்: 339)
·ஆயர் குரவை (கலி: 102,
103, 104...)
எனப்
பலவகையான குரவை சுட்டப்படுகிறது.
தைந் நீராடல் ஊர்வலத்தின் இறுதியில் ஆடப் பட்டது போல், குரவை ஆட்டம் பல்வேறு சூழல்களில் ஆடப்பட்டுள்ளது. குரவை என்பதை முன்தேர்க் குரவை என்று புறம்.371 ஆம் பாடலை உதாரணம் காட்டி விளக்குகிறார் இளம்பூரணர். அதே
பாடலைப் பின்தேர்க் குரவைக்கு நச்சினார்க்கினியர் உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். அதாவது,
தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற
வேந்தன் வெற்றிக் களிப்பாகத் தேர்த்தட்டிலே நின்று போர் வீரரோடு கை
பிணைந் தாடும் குரவை என்கிறார் நச்சினார்க்கினியர். தேரின் முன்னே நின்றாடிய
குரவை என்கிறார் இளம்பூரணர். ஆக,
ஆட்டம் என்பது ஒன்றாகவே இருந்துள்ளது. அது ஆடப்படும் களத்தைக் கொண்டு ‘முன்தேர்’, ‘பின்தேர்’ என்பதாக வரையறுத்துக்
கொள்ளப்படுகிறது.
ஒரு
சூழலில் போர்க்களம் - அமர்க்களம் என்பது குரவைக்கான ஆடுகளமாகவும்
வெற்றிபெற்ற வேந்தனின் புகழுரை என்பது அதன் பனுவலாகவும் இருந்திருக் கிறது.
சமகாலத்தில் வெற்றிக்களிப்பு கொண்டாட்ட ஊர்வலங்கள், தெய்வச்சிலை
ஊர்வலங்கள், வாழ்க்கை
வட்டச் சடங்கு ஊர்வலங்களில் முன்னும்
பின்னும் ஆட்டங்கள் நிகழ்வதைக்
காணலாம். திவாகர நிகண்டு குறிப்பிடுவது
போல, “குரவைக் கூத்தே கை கோர்த் தாடல்” என்கிற ஆடல் மரபு
இன்றளவும் பழங்குடி மக்கள் தொடங்கிப் பலராலும் ஆடப்பட்டு வருவதைக்
காணமுடிகிறது.
ஆடுகளம் சார்ந்து மட்டுமல்லாது ஆடப்பட்ட சமூகம் சார்ந்தும் குரவை
ஆட்டம் பெயர் பெற்று உள்ளது. கலித்தொகை 39
ஆம் பாடல், பெண் ஒருத்தியைக்
கணவனுடன் சேர்ப்பிக்க மலைத் தெய்வத்தை வேண்டி குறத்தி, குரவை ஆடியதாகக் குறிப்பிடுகிறது.
‘வேட்டுவர் குரவை’ பற்றித் திரு
முருகாற்றுப்படை (194 -7) கூறுகிறது. கானவர் கள் குடித்து சிறுபறை முழங்கி குரவை
நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது.
‘ஆயர்கள் குரவை’
ஆடியதைக் கலித்தொகை (102, 106) பதிவு
செய்துள்ளது. ஏறு தழுவிய பின்
ஆண்களும் பெண்களும் சேர்ந்து
குரவையாடியுள்ளனர். இங்குப் பாடலும்
பாடியதாகச் சொல்லப்படுகிறது.
சிலம்பிலும் ஆய்ச்சியர் குரவை இடம்
பெற்றுள்ளதைப் பார்க்கலாம். குரவை
எருமன்றத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மருத நிலத்தின் தோன்றிய குரவை கூத்து பாலை தவிர அனைத்து தினைகளில் பாடப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. இந்த
கலையில் கரையார் தொடரில் கொடுக்கப்பட்ட கம்பராமாயண பாடல் கம்பர் முல்லை தினை சார்ந்து பாடல்
வருடும் போது மருதம் மற்றும் நெய்தல் நில மகளிர்களை ஒப்பிட்டு எழுதுகின்றார்
கடைசியர் என்ற மருத நில மீனவர்கள் உருவாக்கிய குரவைக் கூத்து வரலாறு கூட இன்று
அவர்களிடம் ஏன் இல்லை ?
வரலாற்றில் கரையார்
மூதறிஞர் தேவ
ஆசீர்வாதம் தரும் தரவுகள்
மருத நில மீனவர்களும்
, நீர் நிலைகளை
பாதுகாத்து வந்த
இந்து மத கோட்பாடுகளை
எற்காதவர்களாக இருந்துள்ளார்கள்
இதன் அடிப்படையில்
சங்ககாலத்தில் பௌத்தர்களும், சமணர்களும், இருந்தனர் என்று ஆய்வாளர்கள்
நிறுபித்து இருக்க. .இடைகாலத்தில்
வந்த வைதிக கோட்பாட்டை ஏற்க்கத காரணத்தால்
கடையர், கடை(சி)யர் ,கடையோர் என்ற சங்க கால பெயரை கடைஞர் என்று மாற்றினர்.
நீர் நிலைகளை குறித்து அறிவியல் நுட்பம் கொண்ட
கடை(சி)யர் ,கடையோர் ரை மடையர் , மடையர்கள்
என்று இடைகாலத்திலே பெயரை மாற்றி மருத நில நீர் நிலைகள் வரலாறை, தொல்காப்பியத்தில் ஏற்பட்ட இடைச்சருகள் போல அழித்து இருக்கிறார்கள் என்பதை மூதறிஞர் தேவ ஆசீர்வாதம் தரும் தரவுகள் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது.
கரையார்களின் கலை, அறிவியல், வரலாறு அனைத்தும் இவர்கள் வைதீகம் ,சைவம்,வைனவம் என்ற இந்து மத கோட்பாட்டை ஏற்காத காரணத்தை ஒட்டியே அழித்தொழிக்க பட்டாத என்றால் சங்க காலத்திலும் ,இடைக்காலத்திலும் சென்றுதேடவேண்டும்,
உதவிய குறிப்புகள்
*உழவர் யார் -மூதறிஞர் தேவ ஆசீர்வாதம்
*பழந்தமிழ் இலக்கியத்தில் கதை தழுவிய கூத்து -எழுத்தாளர்: கோ.பழனி (கீற்று)
* கம்பரின் கம்பராமாயணம்