பூர்வக்குடிகளின் தாய்மத வரலாற்றைத் தந்த 2015 கனமழை
சமீப நாட்களாகவே இராமநாதபுரத்தை ஒருங்கிணைத்து பல பௌத்த எச்சங்கள் வெளிவர ஆரம்பமாகின்றன அவற்றை நான் வரைபடத்தோடு பொருத்திப் பார்க்கும்போது பல தகவல்களை நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
*அவற்றில் டிசம்பர் 1ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள ஆனந்தூரில் புத்தர் அமர்ந்த நிலையில் 5 அடி உயரமுள்ள 11ஆம் நூற்றாண்டுச் சிலைக் கிடைத்துள்ளது.
புகைப்படம் : புத்தர் சிலையின் வரலாற்று வரையறை
* டிசம்பர் 12 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை நகரம் வணிக விவசாயத்தில் சிறந்து விளங்கியுள்ளது மற்றும் அவ்வணிக நகரம் சங்க காலத்திற்கு முந்தையதாக இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்களால் சொல்லப் படுகின்றது.
 |
புகைப்படம் : லாந்தை வணிக நகரமாக என்று சொல்லப்பட்ட வரலாற்று வரையறை |
இந்தத் தகவல்களை நாம் வரைபடத்தில் பொருத்திப் பார்க்கும்போது புத்தர் சிலை கிடைத்த ஆனந்தூர் மற்றும் லாந்தை நகரம் நேர்கோட்டில்(vertical line ) இருக்கின்றன அதே போல் சங்க காலத்திற்கு முந்தைய வணிக விவசாய நகரமாக லாந்தை இருந்துள்ளது என்ற தகவலோடு ஒப்பிடும்போது 11ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலமே சங்க காலம் என்றும் நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியும்..இதுபோன்ற பல ஓப்பிடுகளை வைத்து இராமநாதபுரம் ஒரு பௌத்த செழித்த ஆன்மிக தளம் என்று தமிழ் மண்ணில் பௌத்தம் வீழ்ந்தபோது இங்கே ஆதி விவாசயகுடிகளும் வீழ்ந்தனர் என்று சொல்லமுடியும்.
 |
புகைப்படம் : வரைப்படத்தில் நான் பொருத்திய இடங்கள்.
|
தெற்கே பெய்துவரும் கனமழை இன்னும் எத்தனை எத்தனை வரலாற்றை வெளிக்கொண்டுவரும் என்று ஆர்வமோடு காத்திருகின்றேன்.
-மழை தொடரட்டும்