2015 ஜூன் 15 இருந்து 19 வரை தொடர் பௌத்த வரலாற்று ஆய்வின் நிமித்தமாக மூன்று பள்ளியம்பதிகளுக்கு (மலைகளுக்கு) பயணித்து வந்தேன். இவ்வகை ஆய்வுகளுக்கு நான் எடுத்துக்கொண்ட செயல்முறை: "ஒருங்கினைந்த கிராம செயலாக்க முறை" (Participatory Rural Appraisal). எனது செயலாக்க முன்னோடியாக (Review of doctorates) ஐயா அயோத்திதாஸ பண்டிதர் அவர்களையும், பேராசிரியர் தருமராஜ் ஆவணங்களை தொடக்க கருவியாக ஏற்றுகொண்டேன்.
‘பள்ளியம்பதிகள்’ என்றால் என்ன.
’பதி’என்றால் குன்று, பள்ளிகள் நடைபெறும் குன்றுகளுக்குப் பெயர் ‘பள்ளியம்பதிகள்!’
- அயோத்திதாஸ பண்டிதர்
பேராசிரியர் தருமராஜ் அவர்களின் ஆய்வில் இருந்து வெளிப்படும் பள்ளியம்பதிகளின் விளக்கம்
விவசாயக் கிராமங்களின் கல்வித் தேவைகளையும் மருத்துவத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள குன்றுகளில் கற்படுக்கைகளைத் தயார் செய்து பௌத்தத் துறவிகள் வந்து தங்கலானார்கள். குழந்தைகளுக்கான கல்வி இங்கு கற்பிக்கப்பட்டது;மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது. இதனால் இக்குன்றுகளுக்குப் பொதுவாகப் ‘பள்ளி’ என்ற பெயர் வழங்கப்பட்டது.இப்படியே தமிழகமெங்கும் வேளாண்மையை மையப்படுத்திய ‘பள்ளியம்பதிகள்’ எராளம் தோன்றின.
இத்தகைய பள்ளியம்பதிகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டபத்துப்பதினைந்து கிராமங்கள் இணைந்து பள்ளியம்பதிகள் உருவகப்பட்டு இருக்கின்றது. இவற்றையெல்லாம் இணைக்கிற கண்ணியாக பௌத்த பள்ளிகள் இருந்திருக்கின்றது.
-பேராசிரியர் தருமராஜ்.
இவ்வகை ஆய்வுகளில் நான் தொகுத்த ஆவணமாக நான் கிளிக் செய்த புகைபடங்களும், அங்கே மக்களிடம் திரட்டிய பேச்சுவழக்கு வரலாறுகளும். இது முதல் ஆரம்ப பயணம், பல இடங்களுக்கு பயணப்பட இருகின்றேன். இந்த ஆய்வில் நான் உணர்துகொண்ட உண்மை "மலைகள் மீது செல்லுங்கள்,உங்கள் வரலாறு உங்களுக்கு புரியும் ".இன்று எனது பயணம், தமிழ் சமூகத்தின் முன்னோடிகளை தேடி. அதில் நான் சொல்ல வருவது, "நாங்கள் பௌத்த-சமண வம்சா வழி விவசாய பழங்குடியினர்" என்ற வரலாற்று உண்மையை உணர்த்த.
நான் ஏன் பௌத்த சமண தத்துவத்தை நம்புகின்றேன்.
தத்துவ மதங்களான பௌத்தமும் சமணமும் தீர்க்கதரிசிகளால் தத்துவத்தையே முன்வைத்தாலும் அவர்களின் பகுப்பாய்வு நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. நமது சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் பௌத்த- சமண தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே முன்வைக்கின்றன. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க தயாரக இருக்கின்றது தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். .பௌத்த சமணர்கள் எந்த எல்லைக்குள் நின்றுகொண்டும் அவர்களின் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.பௌத்தம் –சமணம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம் அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை.
எம்மை யார் என்று அடையாளப்படுத்திய, குலதெய்வங்களை சைவம் என்ற வர்ணத்தில் வைத்து அழித்தொழிந்து போக செய்யாமல். எம் மக்களை பாதுகாத்து, எம் பாரம்பரியத்தை பாதுகாத்து, எம் கலாச்சரத்தை பாதுகாத்து, எம் குலத்தொழிலை பாதுகாத்து, எம் குலதெய்வங்களை பாதுகாத்த காரணத்தினால். எமது வாழ்நாள் நன்றிகடனாக பௌத்த சமண தத்துவத்தை நான் எற்றுகொள்கின்றேன்.
புகைப்படம் : கழகுமலையில் உள்ள பௌத்த சமணர்கள் பள்ளி . எமது மூதாதையர்கள் வாழ்வியில் பாடம் படித்த இடம் .
பௌத்த- சமண வரலாற்று அடையாளம் உள்ள கழுகு மலையில் இருக்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவில்
வெட்டுவான் கோவில் ஒரே கல்லீல் [MONOLITHIC]
செதுக்கப்பட்டுள்ளது.பெரிய மலைப் பறையில் ஏறக்குறைய 7.50 மீட்டர் அழத்திற்குச் சதுரமாக வெட்டியடுத்து அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியுள்ளனர்.இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கற் கோவிலாகும்.கோயிற்பணி முற்றுப் பெறவில்லை சிகரம் மட்மே முற்றுப் பெற்றுள்ளது. இதன் காலம் கிபி 8ஆம் நூற்றாண்டாகும்.
குறிப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்த சமண பள்ளிகள்
இங்கே நடத்தப்பட்டுள்ளது இந்த பள்ளிகளில் படித்தவர்களே பள்ளர்கள்(தேவேந்திர குல வேளாளர்கள் * குடும்பர்கள்) என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கழகுமலையை சுற்றி விவசாய பூமி அறுவடை செய்யப்பட்டுள்ளது இங்கே விவசாய குடிகள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பதை இந்த அடையாளத்தை வைத்து சொல்லிவிட முடியும்...
சங்கரன் கோயிலுக்கு வடமேற்கே பத்துமைல் தொலைவில் பூர்விக விவசாயகுடிகள் அதிகம் வாழும் வீரசிகாமணி கிராமத்தில் உள்ள புத்தர் பாதம்.
No comments:
Post a Comment