Thursday, 25 June 2015

திரைப்பட விமர்சனம் "காக்கா முட்டை"






* எனது பார்வையில் சேரிகளும் (SLUMS) அதில் உருவான வாழ்வாதார போராட்ட கதைகளும் 

நான் கண்ட சேரிக்கு இரண்டு வாசல், இந்த வாசல்கள் இரண்டு புறமும் நீண்ட பாதையை கொண்டுள்ளது அவ்வகை சேரிகளில் பயணிக்கும்போது ஒரு புறத்தில் மாட்டு இறைச்சி வெட்டப்பட்டுகொண்டும் , மறு புறத்தில் ஒருமரத்தின் அடிவாரத்தில் பழசு என்று சொல்லப்படும் உணவை ஒருவர் சேரிகளுக்கு அருகில் இருக்கும் பெரிய கடைகளில் குறைவான விலைக்கு வாங்கி அதாவது முந்தையநாள் மிஞ்சிய தோசையை மூன்று ரூபாய்க்கும் இரண்டு இட்லி ஐம்பது காசுகளுக்கும் விற்றுக் கொண்டும் இருப்பர் அவ்வகை உணவே பழசு என்று சொல்லப்படும்.

அந்த சேரிகளில் குறைந்தது நான்கு அல்லது ஏழு காட்சிகொடிகள் பறந்தவண்ணத்தில் இருக்கும் அதில் இரண்டு கொடி உள்ளாட்சி தேர்தலுக்கும், அடுத்த இரண்டு கொடி மாநில தேர்தலுக்கும், அந்த கடைசி இரண்டு கொடி மத்திய தேர்தலுக்கும் நடப்பட்டு இருக்கும். அந்த ஓட்டுமொத்த சேரிக்கும் ஒரு பொதுகழிப்பறை இருக்கும் அதை பாதுகாக்கும் பொறுப்பு அந்த சேரியின் பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கபட்டு இருக்கும். முடிக்கமுடியாத வழக்குகளை முடிக்க காவல்துறை சேரிபக்கம் வருவர் அவர்களிடம் இருந்து இந்த இளைஞர்களை பாதுக்காக்க அங்கே அம்பேத்கர் இயக்கங்கள் இருக்கும்.

இவர்கள் அருகாமையில் இருக்கும் கிராமத்தில் இருந்து நகர்புறம் நோக்கி வாழ்வாதார ஜீவனத்தை தேடிக்கொள்ள அல்லது தக்கவைத்து கொள்ளவே நகர்புரங்களில் இயங்கும் பேருந்து நிலையங்களில், மாநகராட்சி மன்றங்களில் துப்பரவு தொழிலாளியாக தங்களை இணைத்துக்கொண்டும் அல்லது பல நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டு தொழில் செய்வதும் அதில் ஆண்கள் செருப்பு தைப்பதும் பெண்கள் பணவோளை மடிப்பது,கம்ப்யூட்டர் சம்புரணி தயாரிப்பது இப்படி தங்களது வாழ்க்கையை கௌரவமாக நடத்தி வருவர்.

மதுரை ரயில்வே தண்டவாளத்தையும், மதுரை ரயில்நிலையத்தையும் ஒட்டியிருக்கும் மேலவாசல் பகுதி அம்மக்களுக்கு சீதனமாக எம்பதுகளில் தமிழக முதல்வர் எம் ஜி ராமசந்திரன் அவர்களால் மதுரையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு சமயத்தில் பரிசாக கொடுக்கப்பட்து.

இவை அனைத்தையும் விட சேரிகள் மட்டுமே இன்றுவரை பெண்களின் பாதுகாப்பது கூடாரமாக செயல்பட்டு வருகின்றது. இதுவே நான் கல்லுரி மாணவனாக 2011களில் பயணித்த 208 மதுரையில் சேரிகளில் எதார்த்தம் நிலை.

இப்படியான பயணத்தில் சேரியை ஒட்டிய சாலைகளில் நான் நடந்துவந்த சமயம் சாலையோரம் தங்கி இருக்கும் மூன்று பெண்களை எனது கைகளில் இருந்த டிஜிட்டல் கேமராவால் பதிவுசெய்து கொண்டேன்

அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த மூதாட்டி அருகில் இருக்கும் இடங்களில் பழைய துணிகளை சேகரித்து வாழ்கையை நடத்தும் நபர். மதியம் இரண்டுமணி வெயிலில் ஒரு தாய் தனது குழந்தையோடு அந்த சாலையோரம் படுத்துரங்கி கொண்டு இருகின்றாள் இன்னொரு பெண் இவர்களுக்கு உணவு சேகரிக்க மற்றும் தனக்கான உதியத்தை வழுபடுத்திக்கொள்ள அருகில இருக்கும் விடுகளில் ஒரு நாள் வேலைகாரியாக செல்லும் நபர்.

இவர்கள் வாழும் இடமருகே டொமினோஸ் பீசா கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கே தினம் தினம் விற்றது போக மீதுமுள்ள காய்ந்து போன பீசாகளை அடுத்தநாள் மதியம் சென்று வாங்கிவந்து இவர்களுக்கு மதிய உணவு சேகரித்து தருவதே இந்த முன்றாவது பெண்ணின் வேலை.இதை ஒரு நான்கு நிமிட திரையோட்டமாக பதிவுசெய்துள்ளேன்

https://www.facebook.com/vinoth.ambedkar.1/videos/vb.100001553595132/163549980373454/?type=3&theater

(இந்த வீடியோ நானே டிஜிட்டல் கேமராவில் எடுத்து, எடிட் செய்து திரைப்பட இசையை பொருத்தி இருப்பதால் அவ்வளவு தெளிவாக இருக்குமா என்பது சந்தேகமே ஆனால் இந்த வீடியோ சர்வதேச தொண்டு நிறுவனத்தில் shelter management என்ற செயல்திட்டத்தில் விவாதிக்கபட்டுள்ளது)

இப்படிப்பட்ட ஒரு பார்வையில் இருந்தே சேரிகளை குறித்தும் அவர்களின் உணவான பீசாவின் தலையீடு குறித்தும் “காக்க முட்டை” திரைப்படத்தின் விமர்சனத்தோடு எழுதுகின்றேன்.


தன் கண்ணில் பட்ட எந்த ஒரு பொருளுக்கும் பிரமாண்ட அடையாளம் கிடைத்துவிட்டால் அதை வாங்க ஆசைப்படும் குழந்தைகளின் கதையே இந்த காக்கா முட்டை

இரவில் ஆரம்பமாகின்றது திரைப்படத்தின் முதல் காட்சி சிறுவனின் ஆடையில் இருந்து கசிகின்றது சிறுநீர் அருகில் படுத்துறங்கும் தாயிடம் செல்கின்றது கண்விழித்த சிறுவன் தனது தாயிடம் வேகமாக பரவிச்செல்லும் சிறுநீரை தனது காலால் அணைகட்டி திருப்பிவிட்டு அசுத்தமான அந்த ஆடையை அருகில் இருக்கும் அந்த வட்டைக்குள் வைத்து மூடிவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர்கின்றான் .அடுத்த நாள் விடிகின்றது. இதில் இருந்து கதை ஆரம்பம் .

ஒரு சேரியில் மிக நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கும் சிறு குடும்பம். அக்குடும்பத்தை வழிநடத்தும் தாய், சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, இவர்களின் வீட்டை பாதுகாக்கும் பாட்டி, இந்த மூவரின் சொத்தான இரண்டு தங்க முட்டைகள் இவர்களின் பெயர் சின்ன காக்க முட்டை, பெரிய காக்கா முட்டை.

தந்தை சிறையில் அடைக்கப்பட்டதால் அவரை மீட்டேடுத்து வழக்குகளை சந்திக்கும் பொறுப்பு மற்றும் முதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் பாட்டியை பாதுகாக்கும் பொறுப்பும், பாரமும் தாயின் மீதும் குழந்தைகள் மீதும் விழுகின்றது. அதன் காரணமாக தாய் பாத்திரம் தீட்டும் பட்டறைக்கும் இந்த காக்கை முட்டைகள் தண்டவாளத்தில் பயணிக்கும் குட்சு வண்டிகளில் இருந்து விழுகும் நிலகரிகளை எடுத்து அருகாமையில் இருக்கும் கடைகளில் விற்று அதில் வரும் பணத்தை வைத்து தங்கள் குடும்பத்தை வழிநடத்தி வருகின்றனர்.

ரயிலில் படிகளில் அமர்ந்து பயணிக்கும் ஒரு நபரின் அலைபேசியை தன் கண்முன்னால் திருடிசெல்லும் நண்பர்களை பார்க்கும்போது காக்கா மமுட்டைகளுக்கும் அலைபேசி மீது ஆசை வருகின்றது. ஆனால் அவர்களின் வீட்டிக்கோ இரண்டு அரசு தொலைக்காட்சி வந்து சேர்கின்றது . இக்காக்கா முட்டைகளின் சந்தோசம் ரெக்கைகட்டி பறகின்றனது.

இந்த வாழ்வாதார ஜீவனம் எடுக்கும் இடத்தில் காக்கா முட்டைகளுக்கு கிடைக்கும் ஒரு நண்பரும் எடுத்த ஜீவனத்தை விற்கும் இடத்தில் அக்கடைகாரர்களும், அதே கடையில் தெருக்களில் திருடிய பொருட்களை விற்கவரும் நபர்களும்,நிலகரி எடுத்துவரும்போது அடிக்கடி ஒரு மேட்டுகுடி நண்பனும் நித்தம் நித்தம் அன்பு உருவாகிகொள்ள இந்த முட்டைகள் சேர்த்த உறவுகள்.

இப்படி செல்லும் இடமெல்லாம் அன்பையும், ஆதரவையும் திரட்டி தன்னோடு எடுத்துசெல்லும் காக்க முட்டைகளுக்கு, பீசா என்ற உண்ணும் பொருளின்மீது கொள்ளை ஆசை வர காரணம்.இப்பீசா கடை கட்டப்பட்ட இடம் தான். தங்கள் சொந்தபெயரே இல்லாமல், புனைபெயரோடு சுற்றி தெரியும் இந்த குழந்தைகளுக்கு, தன் முட்டையில் பங்குகொடுத்து, அடைமொழி பொருத்திய அந்த காகம் வாழ்த்த மரம். தான் வேர்கள் பரப்பி நின்றது. இவ்விடதில் மற்றொரு காரணம் தான் திரையில் பார்த்து பழகிய ஒரு நபர், தன் வசிக்கும் இடமருகே வருகை தந்து. இவர்களின் கண்முன்னே அந்த பீசாவை உண்ணூம் போது காக்கமுட்டைகளுக்கு அதன் மீது ஆசைவந்து விடுகின்றது.

தனக்கு எட்டாத இடத்தில் (பொருளாதரத்தில்) இருக்கும் இந்த பீசாவை உண்ண காக்கா முட்டைகள் அதை வென்றடுக்க ஒரு அமைதிபோரை அரம்பிக்கின்றனர் .மூடப்பட்ட இடத்தில் இருக்கும் நிலக்கரியை தங்கள் நண்பனின் உதவியோடு தினம் கடையில் விற்று ததங்களுக்கான நிதியை சேகரிக்கின்றனர்.ஆனால் அந்த மனித தோற்றம் கொண்ட அந்த காக்க முட்டைகளுக்கு தடை வந்துவிடுகின்றது.




இந்த முதல் தடைக்கு காரணம் தாங்கள் வகிக்கும் இடத்தின் தோற்றம் என்பதற்காக தங்கள் மீது வண்ணத்தை பூசிக்கொள்ள முடிவெடுகின்றனர் இந்த காக்கா முட்டைகள். நண்பன் முடக்கப்பட்டதன் விலைவாக வேறு வழித்தேடும் இவர்களுக்கு கிடைக்கும் புது புது சிந்தனைகளும் அதில் கிடைக்கும் பணத்தில் சிட்டி சென்டருக்கு அருகில் நின்று “சத்தியமா நமள உள்ள விட மாட்டங்க டா" என்று சின்ன காக்கா முட்டை சொல்லும்போது அனல் விசில் பறக்கின்றது தியேட்டரில்.

இந்த புது வண்ணம் பூசிய காக்கா முட்டைகள் தங்களின் வெற்றியை கொண்டாட மீண்டும் அந்த பீட்சா கடையில் கால் வைக்க இரண்டு ரெட்கையை வெட்டுவது போல விழுகின்றது ஒரு பளார். இதை தனது அலைபேசியில் படம் புடிக்கின்றான் ஒரு சிறுவன். உடல் அளவில் வலிகண்ட, அந்த முட்டைகளுக்கு மனதளவில் தோல்வி ஒன்று சடைபின்னி மாலை அணித்து காத்துகிடந்தது . பீட்சாவை தனது வீட்டில் தோசையாக மாற்றியமைத்த அந்த அன்பான பாட்டி பாடையில். மீண்டும் அந்த வண்ணம் பூசபட்ட இறகுகள் பழைய நிலை அடைந்து தனது தோல்வியை ஒத்துகொள்கின்றது இந்த காக்கா முட்டைகள் . அந்த தோல்வியின் அடையாளமே நீரில் நனைகபட்ட அந்த புது ஆடைகளும் சேகரித்துவைத்த அந்த பணமும்.

பீசா கடையில் வாங்கிய அடியின் வீடியோ பதிவு அந்த சேரி நபர்களின் கையில் மாட்டிகொள்ள. அதில் லாபம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்கள் அந்த செயல்திட்டத்தில் தோல்வி கண்டு அதை அரசியலாக மாற்ற ஒரு திட்டம் திட்டி வருகின்றனர். இந்த வீடியோ ஆவணம் ஒரு மீடியாவின் கைகளில் கிடைக்க அது பரப்பரப்பு நிலையை அடைகின்றது. இந்த காக்கா முட்டைகள் வாங்கி பளார் வீடியோ.ஒருபக்கம் மீடியவின் விஸ்வருப அரசியல் மறுபக்கம் இந்த நிகழ்வை வைத்து அரசியல் லாபம் செய்ய துடிக்கும் அரசியல் காட்சிகள் .இங்கு என்ன நடகின்றது என்றே தெரியாத காக்கா முட்டைகளும் அதன் தாயும்

வழக்கம்போல காப்பரேட்களுக்கு சலாம் அடிக்கும் காவல்துறை இந்த வீடியோ நிகழ்வை பெரிதுபடுத்த விரும்பாமல் மூடிமறைக்கும் வேலைகளை செய்து வர.இந்த நிலையை உணர்ந்த அந்த காக்கா முட்டைகள் தங்களுக்கான ஒரு கூடு தேடி பறக்கின்றது தனது தாயை மறந்து .அப்போது தான் தெரிகின்றது அந்த தாய்க்கு அதன் காக்கா குஞ்சுகள் தாக்கப்பட்ட நிகழ்வு .

ஊரு முழுவதும் தேடி பார்க்கும் அந்த தாய்க்கு அழுகை கொப்பளிக்கும் சமயம் வீட்டிற்கு வருகின்றது காவல் துறை. இருவரும் சேர்ந்து தேட ஆரம்பிக்க அந்த காக்கா முட்டைகளோ தனக்கான ஒரு இடத்தில் பதுங்கி தனது பழைய தோழனோடு விளையாடி கொண்டிருக்க அவ் இடம் நோக்கி வரும் காவல்துறையை கண்டு ஓட்டம் புடிக்க ஆரம்பிக்கும் அந்த காக்கா குஞ்சுகள் வாகனத்தில் இருந்து இறங்கிய தனது தாயின் கூகுரல் கேட்டதும் “டேய் நம் அம்மா டா “என்று சொல்லும் இடத்தில் இயக்குனர் தமிழ் சினிமாவை தனது கரங்களில் தாங்கி பிடிக்கின்றார்.

தாய் தனது காக்கா குஞ்சுகளை தூக்கிக்கொண்டு செல்லும்போது போது அதிர்ச்சி மிகுந்த ஆச்சரியம் காத்துகிடந்தது. எந்த இடத்தில் உரிமையும் மறுக்கப்பட்டதோ அங்கே ஒரு புதிய மானுடம் பிறக்கின்றது.இந்த காய்ந்த ரொட்டியை நாய் கூட திங்காது இதுக்கு நம்ம ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை என்ற வசனத்தோடு முடிகின்றது இந்த காக்கா முட்டையின் அத்தியாயம்..

-தொடரும்

*திரைமொழியில் காக்கா முட்டையின் பங்கு. (Contribution to Tamil film language) .

*படவிவாதமும் அதில் எழும் கேள்விகளும்.
(Film critic's) .

*மனித வாழ்வியலில் காக்கா முட்டையின் பங்களிப்பு.
(Life style registration in context of THE CROW EGG).



No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...