நேற்று இரண்டு மராத்திய படைப்புகளில் பயணித்தேன்.
எனக்கு தெரிந்த உலக சினிமா தரம் என்பது விளிம்புநிலையாளர்கள் கலாச்சாரம் அதன் அழகியல் தன்மை படைப்பாக உருமாறும் சமயம் என்று சொல்லத் தோன்றும். அது போல் இன்றைய இந்தியாவில் உலக தர சினிமாவிற்கான பண்பாடு அன்றில் இருந்து இன்று வரை மண்ணின் பூர்வகுடிகள் மத்தியில் மட்டும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் உலக சினிமா தாகத்தில் இருந்து வெளிவரும் இயக்குனர்கள் தங்களுக்கான ஆரம்ப படைப்பின் வெளிப்பாடுகளை உலகம் முழுவதும் தேடி வருவர். அத்தேடலில் வெற்றிபெறும் இயக்குனர்களின் படைப்பு பல இடங்களில் மொழிக்கான தன்மைய இழந்து மாற்று படைப்பின் அடி நாதம் தொட்டு மக்கள் மத்தியிலே சென்றடையும். .
உலக சினிமாவின் உச்சம் என்பதை ஈரானிய படைப்புகளாகவே மட்டும் பார்க்கும் படைப்பாளர் அதன் ஆரம்பத்தை அலசிப் பார்க்கமறந்து விடுவது வழக்கம்.ஈரானிய படைப்பாக இன்று நாம் பார்த்து கற்றுக்கொள்ளும் அனைத்தும் மண்ணுக்கான மக்களின் வாழ்வியில் மற்றும் பண்பாட்டை பாதுகாப்பவையே .
அதைச் சற்று தமிழ் நாட்டு திரைப்பட படைப்புகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தமிழ் உலகத்தரம் அளவுகோல்கள் வெளிநாட்டு படிப்புகளின் இறக்குமதி என்று சொல்வதே மிக சரியாக இருக்கும்.காரணம் ஏதேனும் உலக தர தமிழ் சினிமா காட்சிகள் மண்ணின் மக்கள் தங்களை அடையாளப்படுத்திய தலைவனுக்கு மாலையிடும் காட்சிகள் திரைப்படத்தில் இருந்தால் அக்காட்சி நீக்கப்பட வேண்டும் அல்லது படம் வெளியாவது "தமிழ் குதிரைக்களுக்கு கொம்பு வளர்ந்தால் எப்படி இருக்கும்" என்று நினைப்பதற்கு சமம்.
அந்த வகையில் நேற்று பார்த்த பன்ட்ரி, கோர்ட்
இரண்டு மராத்திய திரைப்படங்கள்.
பன்ட்ரி- தொழில் ரீதியாக பிரித்து வைக்கப்பட்ட மனிதனை மானமற்ற , உணர்வற்ற நிராயுதபாணியாக இச்சமூகம் உருவாக்கி வைத்து கொள்கின்றது.
அம்மனிதனின் தலைமுறைகளும் அத்தொழிலை மீண்டும் தொடர வேண்டும் என்று சமூகம் அவனிடம் திணிக்க அதை தாங்கிக்கொள்ள முடியாத வளர்பிறை கவரி மான் தன்மான இழப்பின் ஆதிக்கத்திடம் முட்டி மோதி விடுதலை அடைகின்றது.
அம்மனிதனின் தலைமுறைகளும் அத்தொழிலை மீண்டும் தொடர வேண்டும் என்று சமூகம் அவனிடம் திணிக்க அதை தாங்கிக்கொள்ள முடியாத வளர்பிறை கவரி மான் தன்மான இழப்பின் ஆதிக்கத்திடம் முட்டி மோதி விடுதலை அடைகின்றது.
கோர்ட் - மக்கள் கலைஞனை, மலக்குழி இறப்போடு தொடர்பிட்டு முடக்கும் அதிகார அரசியல்.அவருக்காக போராடும் ஒரு உண்மை வழக்கறிஞரின் செயலாக்கம்.
இவ்விரண்டும் மராத்தி மொழி படமே, மாநிலம் கடந்து எந்த தழுவலும் இப்டங்களில் இடம்பெறவில்லை. இரண்டும் உணர்வோடு ஒட்டி செல்கின்றது. மக்களின் தேவைகளை பேசிய படமே இன்று உலகஅரங்கம் போற்றுகின்றது குறிப்பாக கோர்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான தேர்வில் இடம் இடம்பெற்றுள்ளது என்பது தனி சிறப்பு .
தமிழுக்கான உலக சினிமா என்பது தேவைகள் உள்ள மக்களின் எதார்த்த வாழ்வியலே அதை அம்மக்களிடம் மட்டுமே தேடுங்கள் அதன் பின்னரே தமிழனின் படைப்பை உலகம் அறியும்.
No comments:
Post a Comment