"பச்சை குதிரை FZ-Sஐ"
அன்று சனிக்கிழமை இரவு சரியாக 10மணி. தொடர் திரை பயிற்சியில் இருந்து வந்த நான், கடந்த
சில நாட்களில் மட்டும் நாற்பதற்கும் மேற்பட்ட உலக சினிமாக்களை பார்த்து
வந்திருந்தேன். வரும் செவ்வாய் கிழமை மதுரைக்கு அவசியம் செல்ல வேண்டியிருந்ததால்
அதற்குமுன் எப்படியாவது “ஓ காதல் கண்மணி” அல்லது “காஞ்சனா” போன்ற புதிய
படங்களை பார்த்துவிட எண்ணம். இந்த எண்ணத்தில் சனிக்கிழமை இரவு முகநூலைப்
பார்த்துக்கொண்டிருந்த போது, ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக்
பேலஸில் ஒரு புத்தக வெளியீடு பற்றிய தகவலைப் பார்த்தேன். நிகழ்ச்சி மாலை 5.30
என்றிருந்ததால் திட்டமிட்டவாறு ஞாயிறன்று மதிய காட்சியாக ஏதேனும்
புது படத்திற்கு சென்றுவிட்டு மாலையில் புத்தக வெளியீடு நிகழ்வில் கலந்துகொள்ள
திட்டமிட்டேன்
ஞாயிறு காலை பத்துமணிக்குத்தான்
எனக்கு விடிந்தது. மதியம் 1 மணிக்கு தூசி படிந்த எனது FZ-S பைக்கை துடைத்தது, வண்டியில் அமர்ந்ததும், புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எதற்காக ஆர்வம்கொண்டேன் என்று
எனக்கு நானே சொல்லிப் பார்த்துக் கொண்டேன் . அந்த புத்தகம் ஒரு எழுத்தாளனின் முதல்
படைப்பு. எனக்கும் கூட என் அனுபவங்களை வைத்து புத்தகம் எழுத கரு இருந்தது. நானும்
எழுத ஆசைப்பட்டேன். அப்படி எழுதும்பட்சத்தில் அதை வெளியிடுவது எப்படி என்ற உள்மன
உந்துதல் இந்த விழாவிற்கு செல்ல தூண்டியிருக்கலாம். மேலும் எனக்கு மிகவும் பிடித்த
பாடலாசிரியர் யுகபாரதி அப்புத்தகத்தை வெளியிடுகிறார். புத்தகம் பற்றிய அவரின்
கருத்தை கேட்கவேண்டும். இடையில் சினிமா வாய்ப்பு வந்துவிட்டதால் புத்தகம் எழுத
நேரம் கிடைக்கவில்லை.
புத்தகம் எழுத நினைக்கும் எனக்கு, எழுதி புத்தகமாக்கி அதை வெளியிடும் ஒருவரை பார்ப்பதில் ஆர்வமிருந்தது.
இப்படி யோசித்துக்கொண்டே, எனது FZ-S பைக்கின்
வேகத்தைக்கூட்ட கூட்டி, நான் வசிக்கும் வேளச்சேரியில்,
பினிக்ஸ் திரைப்பட மாலை கடக்கும் போது, பீனிக்ஸ்
நமக்கு வேண்டாம் தேவி கருமாரி தான் உகந்தது என்று அந்த திரையரங்கை நோக்கி எனது
பைக்கை ஓட்டினேன் .
எனது பச்சை குதிரை FZ-Sஐ கிண்டி பாலத்தை 70 கி.மீட்டர் வேகத்தில் கடந்து,
இடையில் எந்த ஒரு போக்குவரத்துக்கு நிறுத்தமும் இல்லாதிருந்ததால்,
அடுத்த பாலத்தில் இறங்கி காசி தியேட்டர் அருகே செல்லும்போது,
அங்கே சாலையை மறைத்து காஞ்சனா படத்தைப் பார்க்கக் கூட்டம் நின்று
கொண்டிருந்தது.
பார்த்ததும் மிகவும் சந்தோஷ
மனநிலை காரணம் அங்கே நின்ற நபர்கள் எல்லாம் மணிரத்னம் என்ற தமிழ் திரைப்படம்
இயக்குனர் அதே நாளில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற படத்தின் வழியக ஒதுக்கிய,அதே சீ- கிளாஸ் மக்கள் வெள்ளம். அங்கு இருந்து உதயம் தியேட்டரை
அடையும்போது அங்கும் அதே மக்கள் கூட்டம் மற்றும் ஆரவாரம் நிலைமை.
மீண்டும் விரைந்து தேவி கருமாரி
நோக்கி சென்றேன், அங்கே ஆட்டோ, சைக்கிள்,
பைக், கார் என்று திருவிழா கலவை தான். சக்தி
நான் எசியில் ஹவுஸ்புல் என்று கவுண்டரில் ஓட்டப்பட்டிருந்தாலும், மாலை காட்சிக்கு டிக்கெட் எடுத்தவாக்கில் இருந்தனர். என்ன செய்வது என்று
தெரியவில்லை காட்சி 2:45 ற்கு தானே தொடங்கும். இன்னும் சற்று
நேரத்தில் கூட்டம் தியேட்டருக்குள் சென்றுவிடும். எதாவது கருப்புசீட்டு வாங்கி
படம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை சற்று துளிர்விட்டது. முந்தைய காட்சி
முடிவடையாவிட்டாலும், அடுத்த காட்சிக்கு நின்ற கூட்டத்தைப்
பார்த்ததும், கறுப்பு சீட்டு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று
உணர்ந்து, அங்கிருந்து கழன்று கொள்வதே மரியாதை என்று
வெளியேறினேன்
எனது FZ-S ஐ அருகிலிருந்த பங்கஜம் சினிமாஸ் நோக்கி திருப்பினேன். கூட்டமிருந்தாலும்
தேவி கருமாரியம்மன் அளவிற்கு இல்லை. FZ-S ஐ வெளியிலே
நிறுத்தி விட்டு, டிக்கட் கவுண்டரை நோக்கி ஓடினேன். சென்னை
வந்தபின் டிக்கெட் கவுன்ட்டரை நோக்கி நான் ஓடிய முதல் ஓட்டம். ஓடியும் கூட டிக்கட்
கிடைக்கவில்லை என் முயற்சியில் தளராமல் ஏ.வி.ம் ராஜேஸ்வரி நோக்கி வண்டியை
திருப்பினேன், அங்கு தான் கோச்சடையன் முதல் நாள் பார்த்த
ஞாபகம். கோச்சடையானுக்கு முதல் நாளே டிக்கட் கொடுத்த தியேட்டர், மூன்றாவது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் படத்திற்கு டிக்கட் கொடுக்காமலா
போய்விடும் என்ற அசாத்திய நம்பிக்கையில், சற்று மெதுவாகவே,
தியேட்டரின் எதிர்புறத்தில் இருக்கும் ஒரு கேரளா உணவு கடை அருகே
நிறத்திவிட்டு செல்ல நினைத்த போது, செக்குரிட்டி உடையில்
வடமாநில செக்குரிட்டி, வண்டிக்கு சைடுலாக் போடவேண்டாம் என்று
கேட்டுக்கொள்ள, நான் சாப்பிட வரல, டிக்கட்
கிடைக்குமா என்று பார்த்துவிட்டு வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று சமாதானம்
சொல்லிவிட்டு ரோட்டைக் கடந்தேன்.
தியேட்டர் வாளகத்தில்
நுழையும்போது. ஒரு வெள்ளை நிற காரும், பைக்கும் ஒன்றை
ஒன்று முட்டிக்கொண்டு, நகரமுடியாத இக்கட்டில் மாட்டிக்கொண்டு
சென்னை பாசையில் மாறி மாறி அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். சண்டையை
பொருட்படுத்தாமல் உள்ளே செல்ல நினைத்த போது, தியேட்டரிலிருந்து
வெளியே வருபவர்கள், உள்ளே நுழைய காத்திருப்பவர்கள் என்று
அலைமோதிய கூட்டத்தை பார்த்தபோது, இங்கும் டிக்கட் கிடைக்க
வாய்ப்பில்லை என்று உணர்ந்ததால், இன்னைக்கு பார்த்தா என்ன
நாளைக்கு பார்த்தா என்ன என்ற சமாதான உணர்வு ஏற்பட, பைக்கை
எடுத்துக்கொண்டு அருகிலிருந்த நண்பனின் அறைக்கு வண்டியைத் திருப்பினேன்.
நான் அணிந்திருந்த கருப்பு பணியன் தனது
உஸ்ணத்தை காட்ட ஜீன்ஸ் பேன்ட் என்னை வெட்கையால் வாதம் செய்துவிட்டது. அப்போது மணி
மூன்று நண்பனின் அறையை அடைந்தேன் சற்று நேரம் போக்கிவிட்டு புத்தக வெளியீடு
நிகழ்வில் கலந்துக்கொள்ள மனதில் தற்சமய திட்டம் தீட்டினேன். அறையுள்ளே சென்றதும்
கலைஞர் டிவியில் ஓடிய படத்தை பார்த்தவாரே அறைநண்பர்கள்
ஒன்று குடி உணவு உண்டு கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து சிரித்து விட்டு பக்கத்து
அறைக்குள் நுழைய இன்னும் இரண்டரை மணி நேரம் இருக்கின்றது அதுவரை சற்று
ஓய்வுவெடுத்த பிறகு அந்த நிகழ்வுக்கு பயணபடுவோம் என்று முடிவெடுக்க உடல் சோர்ந்து
கண் அசந்து தூங்க ஆரம்பித்தபோது மதிய உணவை முடித்த நண்பர் ஒருவர் நான் இருக்கும்
அறை நுழைந்து
என்ன தூக்கமா என்று கேட்கா?
சும்மா சாஞ்சு இருக்கேன்
சரி காஞ்சனா எப்படி இருக்காமா என்று நான் கேட்க
நன்றாக இருகின்றது என்று சொல்றாங்க என்றார்
அப்படியே பேச்சு நீண்டது சற்று நேரம் கழிந்து அலைபேசியை பார்த்தேன் 4:15 p.m என்று மிண்ணியது பேசாமல் நான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுவிடுவோமா என்று ஒருபக்க யோசனை.
என்ன தூக்கமா என்று கேட்கா?
சும்மா சாஞ்சு இருக்கேன்
சரி காஞ்சனா எப்படி இருக்காமா என்று நான் கேட்க
நன்றாக இருகின்றது என்று சொல்றாங்க என்றார்
அப்படியே பேச்சு நீண்டது சற்று நேரம் கழிந்து அலைபேசியை பார்த்தேன் 4:15 p.m என்று மிண்ணியது பேசாமல் நான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுவிடுவோமா என்று ஒருபக்க யோசனை.
மீண்டும் பேச்சு தொடர்ந்து 4:30மணிபோல எழுந்து அருகில் இருக்கும் நண்பனிடம் நிகழ்வு நடக்கும் இடம் குறித்து விலாசம் கேட்டபோது சரிவர சொல்ல தெரியவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தூக்கத்தினால் உதடின் ஓரத்தில் தேங்கிய எச்சியை குழாய் நீரில் வாய் கொப்பளித்து விட்டு அங்கே இருந்த சீப்பால் முடியை ஒதுக்கி அங்கிருந்து கிளம்பினேன்..
இன்னும் ஒருமணிநேரம் எங்கே செல்வது என்ற குழப்பத்தில் கவிஞர் யுகபாரதியா அல்லது உலக சினிமாவா என போகும் வழியில் யோசிப்போம் என எனது பைக்கில் சற்று தூரம் பயணித்தேன்.
சாலை எங்கும் அமைதி, கடைகள் பல மூடியநிலையில், அங்கே தேனீர்கடை ஒன்று தென்பட அங்கே அமர்ந்து யோசித்தால் நன்றாக இருக்கும் என்று எனது பைக்கை அக்கடை அருகே நிறுத்தி உள்ளே செல்லும் வழியில் வயதான ஒரு பாட்டி தனது தட்டில் பஜ்ஜியை தேங்காய் சட்டினியில் முக்கி உண்டுகொண்டு இருக்க கடை உள்ளே நுழைத்ததும் நான் வழக்கமகா குடிக்கும் கிரீன் டீ இங்கு இருக்காது என்பதை உணர்ந்துகொண்டு.
அண்ணன் ஒரு “டீ” என்றேன்
கவிஞர் யுகபாரதி சந்திப்பு நிகழ்வா அல்லது இரண்டு உலக படமா என்ற சிந்தனை ஓட்டம் ஆரம்பமாக டீ அருந்தியபடியே இறுதிமுடிவுக்கு வந்துவிட்டேன். கவிஞர் யுகபாரதியை கண்டுவிட வேண்டும். அதைவிட இப்புத்தகவெளியீட்டில் ஒரு புதிய எழுத்தாளர், ஒரு புதிய படைப்பை எப்படி இந்த சமூக தளத்தில் பொறுத்த போகின்றார், இந்த தளத்தை எப்படி இச்சிறப்பு அழைப்பாளர்கள் அணுகப்போகின்றனர் என்ற சிந்தனை ஓட்டம் எழ ஆரம்பித்தது காரணம் புத்தகத்தின் தலைப்பு தம்பி சோழனின் “நீங்களும் நடிக்கலாம்”..
ஒரு முடிவை எடுக்க “டீ” யின் இறுதிசொட்டு வரை யோசிக்கவேண்டிய அவசியம் ஒரு வெளியீடு நிகழ்வு என்பது நம்மோடு சரி சமமாக பயணிக்கும் மனிதர்கள் தங்கள் வாழ்வியலில் சேகரித்த அல்லது கடந்து வந்த ஒரு பல நிகழ்வை பொது மேடையில் கட்டவிழ்பதுவே அது எங்குமே கிடைக்காத ஒரு சிறந்த மேடைபாக்கியம் அதில் இருந்து கவிஞர் யுகபாரதி என்ன பேசபோகிறார் என்பதே எனது யோசனை என்னும் தேனீரின் இறுதிசொட்டு "டீ"த்துளி.
இனி எனது பயணம் டிஸ்கவரி புக் பேலஸ் நோக்கியே என்று முடிவு செய்து. எனது தொகையில் இருந்து பழைய பத்துரூபாய் நீட்டி, மீதம் இரண்டு ரூபாய்க்கு கணக்கை முடித்து அங்கு இருந்து நேராக எனது பைக்கை கே.கேநகர் எம்பதுஅடி சாலையில் பயணித்து. அங்கே வலது இடது என்று பிரியும் இடத்தில் இடதுபுறம் இறுதி செல்லவேண்டும் என்று தேடும்கருவி வரைப்படம் சொன்ன திசைநோக்கி செல்ல ஆரம்பித்தேன்.
சாலையின் இருபக்கமும் பார்த்தவாறு அந்த தெருவின் இறுதியை அடைந்தேன். எங்குமே பெயர் பலகை இல்லை,இனி விலாசம் கேட்டு போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வர, அருகில் இருக்கும் தேனீர்கடையை பார்த்தேன்.அது நாம் சொந்த ஊர்களில் உள்ள டீ கடை வடிவமைப்பில் இருந்தது. பனைமர ஓலையால் இருபுறமும் வளைத்து, வெந்தநீர் குவலையில் ஆவிபரக்க இருந்தது.
கடையின் வெளியில் இரு இரு நபர்களாக பேசிக்கொண்டிருந்தனர் ,கடைக்குள்ளே இரண்டு நபர்கள் தனி தனியாக அமர்ந்து டீ அருந்திகொண்டு இருந்தனர், உள்ளே ட்ரான்ஸ்சிஸ்டரில் இளமை என்னும் பூங்காற்று என்ற காலத்தால் அழியாத பாடல் ஓடிக்கொண்டு இருக்க..
கடைக்கு டீ அருந்தவந்த ஒரு நபரிடம் கேட்டேன்
அண்ணன் “இங்கே டிஸ்கவரி புக் பேலஸ்” எங்க இருக்கு என்று
அவரின் தோற்றமே சுருட்டைமுடியோடு அவர் அணிந்த சட்டையின் பித்தான்கள் மேலும் கீழும் ஏறஇறங்க இருந்தது அவரது பேன்ட் கரண்டைக்காலுக்கு மேல் இருக்க வெள்ளைநிற ரப்பர் செருப்புடன் அருகில் வந்து
அப்படி னா என்ன ?
அங்க என்ன இருக்கும்? என்று கேட்டார்.
அது புத்தக கடை என்றேன்
அவருக்கோ இடம் தெரியவில்லை.
தனதருகே காதுகளில் ஹெட்செட் மாட்டி இருக்கும் நபரை தொட்டு அழைத்து.
இவர் ஏதோ கேட்கிறார் என்று சொல்ல?
மீண்டும் நான் உச்சரித்தேன்
இங்க டிஸ்கவரி புக் பேலஸ் எங்க இருக்கு என்றேன்
அவரோ ஜாடையில் தெரியாது என்று கை அசைத்தார்.
எந்த தெரு என்று அந்த சுருட்டைமுடி மனிதன் மீண்டும் கேட்டார்.
எனக்கு தெரு பெயர் மறந்து போய் இருந்தது.
இங்க தான் ஏதோ கருப்பசாமியோ இல்ல பழனிச்சாமி தெருவுனு சொன்னாங்க என்றேன் .
“கொஞ்சம் இருங்க” என்று அந்த சுருட்டைமூடி மனிதர் என்னிடம் சொல்லிவிட்டு
அவர் கடைக்குள் சென்று
அண்ணன் இங்க புத்த கண்காட்சி எங்க இருக்கு என்றவுடன் அந்த டீ மாஸ்டர் கைஜாடையையில்
அந்த டி.வி கடைக்கு மேலே இருக்கும் பாரு என்று சொல்ல.
அந்த சுருட்டை முடி நபர் வெளிவந்து
இப்படிக்கா வளைஞ்சு பஸ்ட்டு ரைட், அப்படியே நேர போனா ஒரு டிவி கடை வரும் அதற்கு பக்கத்தில் போய் கேளுங்க.
அங்க ஒரு புத்தக கண்காட்சி இருக்கும், என்று சொல்லி அனுப்பி வைத்தார்.அந்த பாசமான மனிதன்,
அவர் சொன்ன பாதையில் பயணிக்க ஆரம்பித்தேன் வழக்கம்போல அவர் சொன்ன விலாசத்தை
சரியாக கவனிக்காவில்லை ஆகையால் அத்தெரு முடிவடையும் இடத்திற்கு வந்துவிட்டேன் என்பதை உணர்ந்து அருகில் இருக்கும் ஒரு அரசமரம் அதில் ஓய்வுவேடுத்த இரண்டு ஆட்டோகள் அதில் ஒருவர் ஆட்டோவில் அமர்ந்திருக்க மற்றோரு நபர் ஆட்டோவிற்கு அருகில் கலர் சட்டை அணிந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த ஆட்டோ அருகில் சென்றதும், அந்த ஆட்டோ ஸ்டீரிங்கில்
ஒரு நிட்ட அன்டிராயீடு அலைபேசி சொருகி இருந்தது
அந்த கலர் சட்டை அணிந்த நபரிடம்
அண்ணன் இங்க “டிஸ்கவரி புக் பேலஸ்னா” என்றேன்
அவர் அதை காதில் வாங்காமல் புருவம் அசைத்து மீண்டும் எந்த இடம் என்று கேட்டார்
இங்க “டிஸ்கவரி புக் பேலஸ்னா” என்றேன் .
திரும்பி பர்ஸ்ட் லெப்டு, பக்கத்தில் டீ கடை, அதற்குள்ள போனாலே தெரிந்துவிடும் என்று சொல்ல
நான் மீண்டும் கேட்டேன் அண்ணன் பர்ஸ்ட் லெப்டு,
தான என்று ஆம் என்பது போல தலையசைத்தார்.
எனது பைக்கை திருப்பி மீண்டும் பயணிக்க ஆரம்பிதேன்.
எனது வலது மற்றும் இடது கையை காண்பித்து இது ரைட் இது லெப்டு என்று சொல்லி கொண்டே அந்த முதல் லெப்டு திரும்பினேன். அங்கே நின்று எனக்கு எதிர் திசையில் பார்த்தால் டீ கடையில் பலர் நின்று பேசியவண்ணம் இருந்தனர். எனக்கு அருகில் ஒரு சிறுகடை அதில் பல டிவிகள் இருந்து ஆனால் ஒன்று மட்டும் கருப்பு வெள்ளையில் திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது.
அந்த கடைக்காரரிடம் கேட்டேன்
இங்க “டிஸ்கவரி புக் பேலஸ்” என்று முடிப்பதற்குள்
அவர் கையை மேலே நீட்டினார் அர்த்தம் புரியவில்லை
ம்ம்ம்ம் என்றேன்
மேல மேல என்றார்
ஓ மாடியா
என்று சொல்லி நேரம் பார்த்தேன் மணி 4:45. “டிஸ்கவரி புக் பேலஸ்” என்ற நீட்ட சுவரில் எழுதப்பட்டு இருந்தது. அதை ஓட்டிய நடிப்புக்கான பள்ளி விளம்பர பலகையும் இருந்தது. அங்கே மிகவும் குறைந்த வண்டிகள் நின்றுகொண்டு இருக்க, நான் கடந்துவந்த சாலையை பார்த்தபோது மிக அழகாகத்தெரிந்தது, இரண்டு புறமும் மரங்கள் அந்த நிழலில் நடந்துசெல்லும் இளம்பெண்கள், பெரியவர்கள் என்று அந்த இடமே ஒரு புதுப்பொலிவுடன் இருந்த நேரம் .டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கம் தயார் ஆகிக்கொண்டு இருந்தது. அரங்கில் இருந்து வெளியேரிய தோழர்கள் சிலர் அருகில் இருக்கும் தேனீர் கிடைக்கு டீ அருந்த வந்தனர். நானும் எனது பைக்கை நிறுத்திவிட்டு தேனீர் கடைநோக்கி நடக்க ஆரம்பிதேன். இதற்கு முந்தைய டீ அருந்தி முப்பது நிமிடம்கூட ஆகியிருக்காது. இருந்தாலும் அருந்தினேன் காரணம் தனிமைக்கு ஒரு கிளாஸ் டீ எவ்வளவோ மேல் என்ற எண்ணம்.
இந்த தனிமையும் காத்திருப்பதும் அந்த ஒற்றை கவிஞனை பார்க்க தேனீர் முடித்துவிட்டு அனைவரும் அரங்கம் நோக்கி செல்ல நானும் அவர்களோடு படியேறி அரங்கம் நுழைந்தேன். அது ஒரு மூடிய அறை அதன் மறுபக்கம் கண்ணாடி முடுகை இரண்டு சுவர் விசிறிகள் மாற்று பக்கத்தில் இரண்டு ஏசிகள். அந்த அறைக்கு வெளியே ஒரு புத்தக கடை.இருபுறமும் இருக்கைகள், நடுவில் ஒரு நபர் செல்லும் பாதை, நான் எனக்கான மறைவிடம் நோக்கி ஒளிந்து கொள்ள, எனது அருகில் ஒரு நபர் வந்து தன்னை அறிமுகம் செய்தார். அவர் எனது முகநூல் நண்பர் என்று. நல்ல அறிமுகம் இருவரும் சற்று ஆழ்ந்து சினிமாவை பற்றி பேசிக்கொண்டு இருக்க ,அரங்கத்தின் பின்னும் முன்னும் நபர்கள் நடந்துகொண்டு இருந்தனர் . அரங்கத்தில் போட்டோ கிளிக் செய்யப்பட்டது. அரங்கத்தின் மைக் சரிசெய்யபட்டது. பெண்தோழர்கள் இருந்தனர். குழந்தைகள் அழகிய சப்தமிட்டுகொண்டு இருந்தனர். அப்போது மணி 6 அரங்கம் சலசலக்க யுகபாரதி வந்ததும் ஆரம்பித்து விடுவோம் என்ற பேச்சு சப்தம் அலையடி கொண்டிருந்தது.
அந்த புத்தக எழுத்தர் தம்பி சோழன் சற்று பரபரப்பாக இருந்தார். மற்ற விருந்தினர் உள்ளே அமர்ந்தவரே அமைதியாக பேசிக்கொண்டு இருக்க, அந்த அரங்கின் பின்பக்க வாயிலில் இருந்து ஒரு நபர் கருப்பு சட்டையில் வெண்ணிற சிரிப்போடு அரங்கம் உள்ளே வர சற்றும் அமைதி கண்டு, மீண்டும் பொங்க ஆரம்பித்தது. எனக்கு மிகவும் புடித்து போன ஒரு கவிஞனை நேரில் பார்த்தேன், மிக பிரகாசமான மண்ணின் தோற்றம். இவரை பார்த்துவிட்டேன், இனி இவர் என்ன பேசுவர் என்ற எண்ணம் நோக்கி எனது சிந்தனை செல்ல ஆரம்பித்து வந்த அழைப்பாளர்களில் இவர் ஒரு தனி விமர்சகராக இருப்பர். இவர் பேச்சு மட்டுமே புத்தகத்தின் உண்மை பிரதிபளிக்கும் என்ற எண்ணம் தோன்ற காரணம் நீங்களும் நடிக்கலாம் புத்தகம் ஒரு நடிப்பு கலைஞனின் ஒரு புதுவகை அணுகுமுறை. மேடை நோக்கி விருந்தினர் அனைவரும் அழைக்கபட்டார்கள் புத்தக வெளியீட்டு விழா தொடங்கியது ....
No comments:
Post a Comment