குறியீடு விமர்சனம் -7
தோழர் பிரபு ஜீவன் அவர்களின் பதிவில் இருந்து
வினோத்மிஸ்ரா இயக்கத்தில் "குறீயிடு" குறும்படம் பார்த்தேன்!
குறியீடு அரைமனி நேரம் ஓடுகிறது. அரைமனிநேர மிரட்டல் என சொல்லலாம். அவ்வளவு நேர்த்தியான திரைமொழியில் செதுக்கப்பட்டுள்ளது இக்குறும்படம்.
தரமான சினிமாவிற்கான மொழியில் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.குறியீடு படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. அதுமட்டுமல்ல மனிதர்களின் ஓசை கூட கிடையாது.ஆக்காட்டி என்ற பறவையின் குரல் மட்டும் ஒரே ஒரு இடத்தில் கேட்கிறது.
ஆனால் ஒவ்வொரு ஷாட்டுகளும் நம்மிடம் பேசுகிறது. காட்சியமைப்புகள் கதை மட்டும் சொல்லாமல் வரலாறும் பேசுகின்றது. பிரேம்கள் அனைத்தும் மிஷ்கினிசம் ஸ்கொயராக தெரிவது எனக்கு மட்டுமா எனத்தெரியவில்லை, உலகத்தரம்.
அமெச்சூர் நடிகர்களை வைத்துக்கொண்டு எப்படி இப்படி பிரமாதப்படுத்தினார் வினோத்? மிகமிக மதித்திறன் கொண்ட கலைநுட்பம்.பின்னனி இசை குறியீட்டை உலகத்தரத்திற்கு தூக்கி நிறுத்துகிறது
ஜாதிஆணவக்கொலைக்கு எதிராக போராடுகிற இடதுசாரிகளே,பு.த,விசிக,ஆதித்தமிழர் கட்சி தோழர்களே!உங்களின் நூறு பொதுக்கூட்டங்களுக்கு நிகர் "குறியீடு.
அழகான அரசியல் சினிமா இது.
உங்களின் விமர்சனம் பல நுணுக்க வார்த்தைகள் கொண்டது மிகவும் நன்றி தோழர் பிரபுஜீவன் அவர்களுக்கு .
No comments:
Post a Comment