Sunday, 27 March 2016

குறியீடு - உலக அளவில் பேசப்படக்கூடிய திரைப்படம் தான்


              "குறியீடு - உலக அளவில் பேசப்படக்கூடிய திரைப்படம் தான்"

தம்பி வினோத் மிஸ்ரா அவர்களே.. உங்கள் குறியீடு படம் பார்த்தேன். வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தீர்கள். ஆனால் சாஸ்தா கோயில் விசேஷம் என்பதாலும், சில கோயில் வரலாறு எழுத புகைப்படம் எடுக்க இந்த நாள் தான் உகந்த நான், என்பதாலும் அந்த பணி முக்கிய பணியாக மாறிவிட்டது. அதனால் உங்கள் வெளியிட்டு விழாவிற்கு வரஇயலாமல் போய் விட்டது. நல்லதொரு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தத்துக்குரிய விஷயம் தான்.

ஆனாலும் உங்கள் குறியீடு படம் பார்த்த போது, எனக்கு பிரமிப்பாக இருந்தது. தம்பி முத்து வேல் என்னிடம் வந்து நமது பகுதியில் சூட்டிங் நடைபெறுகிறது. நடிக்க ஒரு பெண் தேவை என்று கேட்டிருந்தான். நான் நாஞ்சில் நளினி பெயரை அவரிடம் கூறியிருந்தேன். அதன் பின் அதை மறந்தே போய் விட்டேன். கடந்த வருடம் பாளை சேவியர் கல்லூரியில் விஸ்காம் பிரிவு மாணவர்கள் வெளியிட்ட குறும் படத்தினை பார்க்க சென்றிருந்தேன். அப்போது குறியீடு டிரைலர் வெளியிட்டார்கள். பிரமிப்பாக இருந்தது. தமிழ் சினிமா ஒன்று உலக தரத்தில் உருவாகி உள்ளது என்பதை கணித்துக்கொண்டேன். அப்போதும் உங்களை பற்றி அறியாமலேயே இருந்துவிட்டேன். முத்துவேல் முகத்தினை காட்டிவிட்டு நீங்கள் மறைந்திருந்து உங்கள் திறமையை வெளிபடுத்திருந்தீர்கள்.

அதன் பிறகு முழுவதும் குறியீடு பற்றி மறந்தே போய் விட்டேன். தீடீரென்று ஒரு நாள் தாங்கள் என் ஸ்டுடியோவுக்கு வந்து குறியீடு படத்தினை தந்து முழுவதுமாக பார்க்க வைத்தீர்கள்.



குறியீடு பழைய கதை தான். ஆனாலும் புதிய முயற்சி.
காட்சிகளுக்கு இடையே நீங்கள் அமைத்திருக்கும் தொழில் நுட்பங்கள். நடிகர்களை தாங்கள் வாங்கியிருக்கும் வேலை. பிரமிப்பாக இருந்தது. பெரும் பாலுமே.. முத்துவேல் எங்கள் பகுதியில் பிறந்து, வாழ்ந்து, சினிமா துறையில் நுழைய முயற்சி செய்து வரும் இளவல். இவர் பிற்காலத்தில் சென்னை கோடம் பாக்கத்தில் மின்னப்போகின்ற இளம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தினை எப்படி வேலை வாங்கலாம் என்ற சூட்சுமத்தினை அறிந்து வைத்து அவனை நன்றாக வேலை வாங்கியிருக்கீறீர்கள். அவனும்.. தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறான். அதற்கு முழு காரணம் நீங்கள்தான். ஒரு நல்ல இயக்குனர்தான் ஒருவரிடம் என்ன இருக்கிறதோ.. அதை வெளிக்கொண்டு வரமுடியும். ஆகவேதான் அவனை நல்லதொரு நடிகராக வலம் வர செய்திருக்கீறீர்கள்.

நீங்கள் கண்டெத்து தூத்துக்குடி முத்து, சென்னை திரைபடத்துறையின் சொத்தாக ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அதோடு மட்டுமல்லாமல் இதில் நடித்துள்ள, வாசுகி, மக்கள் கலைஞர் முனியராஜ், ஜெசி, விமல், மகேஷ்வரி,அனுராணி (நாஞ்சில் நளினி என நினைக்கீறேன்.) ராஜீவ் ஆகியோர் நடிப்பில் பிரமாதம் படுத்தியிருந்தார்கள். 

முதல் தடவை பார்த்த போது உங்கள் இயக்கம் மட்டும் தான் என்னை கவர்ந்திருந்தது. ஆனால் நன்றாக பார்த்த போது தான் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருகீறீர்கள்( வாழ்ந்திருக்கீறீர்கள்) அபாரம்.


நாஞ்சில் நளினி எங்கள் பகுதி நாடகங்களில் காதநாயகியாகவே வலம் வந்து பார்த்தீருக்கிறேன். அவரை கொடுமையான வில்லியாக சித்திரித்திருப்பதும் சூப்பர்தான். 
அவர்களோடு பணியாற்றிய அனைத்து நண்பர்களுமே... வெளுத்து கட்டி விட்டார்கள்.
தம்பி மிஸ்ரா எங்கள் ஊருக்கு மேற்கே தான் நீங்கள் சூட்டிங் எடுத்த குன்று உள்ளது. அந்த குன்றை எவ்வளவு அழகாய், கரடுமுரடாய் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் கமரா மேனை பாராட்டியே தீர வேண்டும்.

எனக்கு திரைப்பட தொழில் நுட்பம் பற்றி அதிகம் தெரியாது. உங்கள் படத்தினை எங்கள் வீட்டில் வைத்து தனியாக அமர்ந்து பார்த்தபோது, என்னுடைய பையன் அபிசு விக்னேசு( விஸ்காம்) உங்கள் படத்தில் இருந்து அறியபடவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்றான். 

உண்மைதான். நிச்சயம் உங்கள் திரைப்படம் உலக அளவில் பேசப்படக்கூடிய திரைப்படம் தான். கதை என்னவோ.. பழைய காதல் கதைதான். ஆனால் சொல்லிய விதம்.. 25 நிமிடங்களும் நம்மை வேறு வேலையே பார்க்க முடியாமல் செய்து விட்டது.
உங்கள் குறியீடு.... நிச்சயம் வெற்றிபெறும். ஸாரி வெற்றி பெற்று விட்டது.
ஒரேஒரு சிறிய குறை மட்டும். உங்கள் வெளீயீட்டு விழாவில் நானும் கலந்து கொண்டு பேசியிருக்க வேண்டும். அது நடக்காமல் போய் விட்டது. அது மட்டுமே எனக்கு வருத்தமானதாகும்.


தொடரட்டும் உங்கள் பணி வினோத் மிஸ்ரா..

குறியீடு வெற்றி விழாவில் அல்லது குறீயீடு திரைபடமாகி வெளிவரும்வேளையில் நடைபெறும் இசை வெளியீட்டு அறிமுக விழாவில் நானும் உங்களோடு இருப்பேன்.
வினோத். மிஸ்ரா. நன்றி..

இலக்கியவாதி முத்தாலாம்குறிச்சி காமராசு அவர்களின் பாராட்டு மழையில் "குறியீடு" ....பட குழுவின் நெஞ்சார்ந்த நன்றிகளை ஐயா காமராஜ் அவர்களுக்கு சமர்பிக்க கடமைப் பட்டுள்ளோம்



No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...