Friday, 18 March 2016

குறியீடு விமர்சனம்: 1

குறியீடு  விமர்சனம்: 

நான் இயக்கிய குறியீடு படம் குறித்து பன்முக ஆளுமையின் வற்றா, சமுக பொருளியல் ஆர்வலர் அண்ணன் பிரபு ராஜ் அவர்களின் பதிவு.
மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கருப்பு பணத்திலோ கந்துவட்டி பணத்திலோ மதுரை சினிமா எடுக்கும் வழக்கம் இருக்கும் நிலையில் மதுரையிலிருந்தே ஒரு நல்ல மதுரை சினிமாவை உருவாக்கியிருக்கிறார் தம்பி வினோத் மலைச்சாமி.

அவர் எழுதி இயக்கியிருக்கும் குறியீடு படக்காட்சிகளை கோர்த்து ஒரு மாண்டாஜாக ஒரு குறும்படத்தை அனுப்பியிருந்தார்.வசனங்களோ சுற்றுப்புற ஒலிகளோ இல்லாமல் பின்னனி இசை மட்டும் ஒலிக்கும் இப்படத்தை பார்க்கும்போது ஐசண்டைனின் கிளாசிக்கான பாட்டில்ஷிப் பொடம்கினை பார்ப்பது போன்றதொரு பிரமிப்பு.மிகையில்லை.

ஜாதி ஆணவக்கொலையை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறார்.இப்படிப்பட்ட சமூக இழிவை எதிர்த்து குரல் கொடுக்க வினோத் போன்ற இளைஞர்கள் சரியான நேரத்தில் வந்திருக்கிறார்கள்.

தேர்ந்த ஒளிப்பதிவு,ஷாட்களை வினோத் கம்போஸ் செய்திருக்கும் விதம் ஒரு முக்கியமான படைப்பாளியின் வருகையை உறுதி செய்கிறது.நிலையான ஷாட்களில் கதாபாத்திரங்களின் நகர்வை பதிவு செய்திருக்கும் நேர்த்தியில் அசந்து விட்டேன்.

வெறும் dslr கேமராவில் ரெட் எபிக்கின் துல்லியத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.சபாஷ்.

ஒரு காலத்தில் காரைக்குடியிலும்,சேலத்திலும்,கோயமுத்தூரிலும் தான் தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டன.எல்லாவற்றையும் பிரித்து சென்னைக்கு கொண்டு போனார்கள்.இப்போது மறுபடியும் மதுரையிலும், காரைக்குடியிலும், பண்ருட்டியிலும் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன.இந்த decentralization காலத்தின் கட்டாயம்.

குறியீடு படத்தின் மூலம் வினோத் மலைச்சாமி எனும் படைப்பாளியின் வருகை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

சினிமா எனும் சக்திமிக்க போர்வாளை வைத்து பலர் முதுகு சொறிந்துகொண்டிருக்க,வினோத் மலைச்சாமி போன்ற நுண்ணுணர்வு மிக்கவர்கள் சமூக மாற்றத்தையும்,மக்களிடம் உறைந்து கிடக்கும் பொதுப்புத்தியை மாற்றவும் வந்திருப்பது மகிழ்வாக இருக்கிறது.

மிக்க நன்றி அண்ணன் 

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...