Thursday 25 June 2015

திரைப்பட விமர்சனம் "காக்கா முட்டை"






* எனது பார்வையில் சேரிகளும் (SLUMS) அதில் உருவான வாழ்வாதார போராட்ட கதைகளும் 

நான் கண்ட சேரிக்கு இரண்டு வாசல், இந்த வாசல்கள் இரண்டு புறமும் நீண்ட பாதையை கொண்டுள்ளது அவ்வகை சேரிகளில் பயணிக்கும்போது ஒரு புறத்தில் மாட்டு இறைச்சி வெட்டப்பட்டுகொண்டும் , மறு புறத்தில் ஒருமரத்தின் அடிவாரத்தில் பழசு என்று சொல்லப்படும் உணவை ஒருவர் சேரிகளுக்கு அருகில் இருக்கும் பெரிய கடைகளில் குறைவான விலைக்கு வாங்கி அதாவது முந்தையநாள் மிஞ்சிய தோசையை மூன்று ரூபாய்க்கும் இரண்டு இட்லி ஐம்பது காசுகளுக்கும் விற்றுக் கொண்டும் இருப்பர் அவ்வகை உணவே பழசு என்று சொல்லப்படும்.

அந்த சேரிகளில் குறைந்தது நான்கு அல்லது ஏழு காட்சிகொடிகள் பறந்தவண்ணத்தில் இருக்கும் அதில் இரண்டு கொடி உள்ளாட்சி தேர்தலுக்கும், அடுத்த இரண்டு கொடி மாநில தேர்தலுக்கும், அந்த கடைசி இரண்டு கொடி மத்திய தேர்தலுக்கும் நடப்பட்டு இருக்கும். அந்த ஓட்டுமொத்த சேரிக்கும் ஒரு பொதுகழிப்பறை இருக்கும் அதை பாதுகாக்கும் பொறுப்பு அந்த சேரியின் பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கபட்டு இருக்கும். முடிக்கமுடியாத வழக்குகளை முடிக்க காவல்துறை சேரிபக்கம் வருவர் அவர்களிடம் இருந்து இந்த இளைஞர்களை பாதுக்காக்க அங்கே அம்பேத்கர் இயக்கங்கள் இருக்கும்.

இவர்கள் அருகாமையில் இருக்கும் கிராமத்தில் இருந்து நகர்புறம் நோக்கி வாழ்வாதார ஜீவனத்தை தேடிக்கொள்ள அல்லது தக்கவைத்து கொள்ளவே நகர்புரங்களில் இயங்கும் பேருந்து நிலையங்களில், மாநகராட்சி மன்றங்களில் துப்பரவு தொழிலாளியாக தங்களை இணைத்துக்கொண்டும் அல்லது பல நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டு தொழில் செய்வதும் அதில் ஆண்கள் செருப்பு தைப்பதும் பெண்கள் பணவோளை மடிப்பது,கம்ப்யூட்டர் சம்புரணி தயாரிப்பது இப்படி தங்களது வாழ்க்கையை கௌரவமாக நடத்தி வருவர்.

மதுரை ரயில்வே தண்டவாளத்தையும், மதுரை ரயில்நிலையத்தையும் ஒட்டியிருக்கும் மேலவாசல் பகுதி அம்மக்களுக்கு சீதனமாக எம்பதுகளில் தமிழக முதல்வர் எம் ஜி ராமசந்திரன் அவர்களால் மதுரையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு சமயத்தில் பரிசாக கொடுக்கப்பட்து.

இவை அனைத்தையும் விட சேரிகள் மட்டுமே இன்றுவரை பெண்களின் பாதுகாப்பது கூடாரமாக செயல்பட்டு வருகின்றது. இதுவே நான் கல்லுரி மாணவனாக 2011களில் பயணித்த 208 மதுரையில் சேரிகளில் எதார்த்தம் நிலை.

இப்படியான பயணத்தில் சேரியை ஒட்டிய சாலைகளில் நான் நடந்துவந்த சமயம் சாலையோரம் தங்கி இருக்கும் மூன்று பெண்களை எனது கைகளில் இருந்த டிஜிட்டல் கேமராவால் பதிவுசெய்து கொண்டேன்

அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த மூதாட்டி அருகில் இருக்கும் இடங்களில் பழைய துணிகளை சேகரித்து வாழ்கையை நடத்தும் நபர். மதியம் இரண்டுமணி வெயிலில் ஒரு தாய் தனது குழந்தையோடு அந்த சாலையோரம் படுத்துரங்கி கொண்டு இருகின்றாள் இன்னொரு பெண் இவர்களுக்கு உணவு சேகரிக்க மற்றும் தனக்கான உதியத்தை வழுபடுத்திக்கொள்ள அருகில இருக்கும் விடுகளில் ஒரு நாள் வேலைகாரியாக செல்லும் நபர்.

இவர்கள் வாழும் இடமருகே டொமினோஸ் பீசா கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கே தினம் தினம் விற்றது போக மீதுமுள்ள காய்ந்து போன பீசாகளை அடுத்தநாள் மதியம் சென்று வாங்கிவந்து இவர்களுக்கு மதிய உணவு சேகரித்து தருவதே இந்த முன்றாவது பெண்ணின் வேலை.இதை ஒரு நான்கு நிமிட திரையோட்டமாக பதிவுசெய்துள்ளேன்

https://www.facebook.com/vinoth.ambedkar.1/videos/vb.100001553595132/163549980373454/?type=3&theater

(இந்த வீடியோ நானே டிஜிட்டல் கேமராவில் எடுத்து, எடிட் செய்து திரைப்பட இசையை பொருத்தி இருப்பதால் அவ்வளவு தெளிவாக இருக்குமா என்பது சந்தேகமே ஆனால் இந்த வீடியோ சர்வதேச தொண்டு நிறுவனத்தில் shelter management என்ற செயல்திட்டத்தில் விவாதிக்கபட்டுள்ளது)

இப்படிப்பட்ட ஒரு பார்வையில் இருந்தே சேரிகளை குறித்தும் அவர்களின் உணவான பீசாவின் தலையீடு குறித்தும் “காக்க முட்டை” திரைப்படத்தின் விமர்சனத்தோடு எழுதுகின்றேன்.


தன் கண்ணில் பட்ட எந்த ஒரு பொருளுக்கும் பிரமாண்ட அடையாளம் கிடைத்துவிட்டால் அதை வாங்க ஆசைப்படும் குழந்தைகளின் கதையே இந்த காக்கா முட்டை

இரவில் ஆரம்பமாகின்றது திரைப்படத்தின் முதல் காட்சி சிறுவனின் ஆடையில் இருந்து கசிகின்றது சிறுநீர் அருகில் படுத்துறங்கும் தாயிடம் செல்கின்றது கண்விழித்த சிறுவன் தனது தாயிடம் வேகமாக பரவிச்செல்லும் சிறுநீரை தனது காலால் அணைகட்டி திருப்பிவிட்டு அசுத்தமான அந்த ஆடையை அருகில் இருக்கும் அந்த வட்டைக்குள் வைத்து மூடிவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர்கின்றான் .அடுத்த நாள் விடிகின்றது. இதில் இருந்து கதை ஆரம்பம் .

ஒரு சேரியில் மிக நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கும் சிறு குடும்பம். அக்குடும்பத்தை வழிநடத்தும் தாய், சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, இவர்களின் வீட்டை பாதுகாக்கும் பாட்டி, இந்த மூவரின் சொத்தான இரண்டு தங்க முட்டைகள் இவர்களின் பெயர் சின்ன காக்க முட்டை, பெரிய காக்கா முட்டை.

தந்தை சிறையில் அடைக்கப்பட்டதால் அவரை மீட்டேடுத்து வழக்குகளை சந்திக்கும் பொறுப்பு மற்றும் முதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் பாட்டியை பாதுகாக்கும் பொறுப்பும், பாரமும் தாயின் மீதும் குழந்தைகள் மீதும் விழுகின்றது. அதன் காரணமாக தாய் பாத்திரம் தீட்டும் பட்டறைக்கும் இந்த காக்கை முட்டைகள் தண்டவாளத்தில் பயணிக்கும் குட்சு வண்டிகளில் இருந்து விழுகும் நிலகரிகளை எடுத்து அருகாமையில் இருக்கும் கடைகளில் விற்று அதில் வரும் பணத்தை வைத்து தங்கள் குடும்பத்தை வழிநடத்தி வருகின்றனர்.

ரயிலில் படிகளில் அமர்ந்து பயணிக்கும் ஒரு நபரின் அலைபேசியை தன் கண்முன்னால் திருடிசெல்லும் நண்பர்களை பார்க்கும்போது காக்கா மமுட்டைகளுக்கும் அலைபேசி மீது ஆசை வருகின்றது. ஆனால் அவர்களின் வீட்டிக்கோ இரண்டு அரசு தொலைக்காட்சி வந்து சேர்கின்றது . இக்காக்கா முட்டைகளின் சந்தோசம் ரெக்கைகட்டி பறகின்றனது.

இந்த வாழ்வாதார ஜீவனம் எடுக்கும் இடத்தில் காக்கா முட்டைகளுக்கு கிடைக்கும் ஒரு நண்பரும் எடுத்த ஜீவனத்தை விற்கும் இடத்தில் அக்கடைகாரர்களும், அதே கடையில் தெருக்களில் திருடிய பொருட்களை விற்கவரும் நபர்களும்,நிலகரி எடுத்துவரும்போது அடிக்கடி ஒரு மேட்டுகுடி நண்பனும் நித்தம் நித்தம் அன்பு உருவாகிகொள்ள இந்த முட்டைகள் சேர்த்த உறவுகள்.

இப்படி செல்லும் இடமெல்லாம் அன்பையும், ஆதரவையும் திரட்டி தன்னோடு எடுத்துசெல்லும் காக்க முட்டைகளுக்கு, பீசா என்ற உண்ணும் பொருளின்மீது கொள்ளை ஆசை வர காரணம்.இப்பீசா கடை கட்டப்பட்ட இடம் தான். தங்கள் சொந்தபெயரே இல்லாமல், புனைபெயரோடு சுற்றி தெரியும் இந்த குழந்தைகளுக்கு, தன் முட்டையில் பங்குகொடுத்து, அடைமொழி பொருத்திய அந்த காகம் வாழ்த்த மரம். தான் வேர்கள் பரப்பி நின்றது. இவ்விடதில் மற்றொரு காரணம் தான் திரையில் பார்த்து பழகிய ஒரு நபர், தன் வசிக்கும் இடமருகே வருகை தந்து. இவர்களின் கண்முன்னே அந்த பீசாவை உண்ணூம் போது காக்கமுட்டைகளுக்கு அதன் மீது ஆசைவந்து விடுகின்றது.

தனக்கு எட்டாத இடத்தில் (பொருளாதரத்தில்) இருக்கும் இந்த பீசாவை உண்ண காக்கா முட்டைகள் அதை வென்றடுக்க ஒரு அமைதிபோரை அரம்பிக்கின்றனர் .மூடப்பட்ட இடத்தில் இருக்கும் நிலக்கரியை தங்கள் நண்பனின் உதவியோடு தினம் கடையில் விற்று ததங்களுக்கான நிதியை சேகரிக்கின்றனர்.ஆனால் அந்த மனித தோற்றம் கொண்ட அந்த காக்க முட்டைகளுக்கு தடை வந்துவிடுகின்றது.




இந்த முதல் தடைக்கு காரணம் தாங்கள் வகிக்கும் இடத்தின் தோற்றம் என்பதற்காக தங்கள் மீது வண்ணத்தை பூசிக்கொள்ள முடிவெடுகின்றனர் இந்த காக்கா முட்டைகள். நண்பன் முடக்கப்பட்டதன் விலைவாக வேறு வழித்தேடும் இவர்களுக்கு கிடைக்கும் புது புது சிந்தனைகளும் அதில் கிடைக்கும் பணத்தில் சிட்டி சென்டருக்கு அருகில் நின்று “சத்தியமா நமள உள்ள விட மாட்டங்க டா" என்று சின்ன காக்கா முட்டை சொல்லும்போது அனல் விசில் பறக்கின்றது தியேட்டரில்.

இந்த புது வண்ணம் பூசிய காக்கா முட்டைகள் தங்களின் வெற்றியை கொண்டாட மீண்டும் அந்த பீட்சா கடையில் கால் வைக்க இரண்டு ரெட்கையை வெட்டுவது போல விழுகின்றது ஒரு பளார். இதை தனது அலைபேசியில் படம் புடிக்கின்றான் ஒரு சிறுவன். உடல் அளவில் வலிகண்ட, அந்த முட்டைகளுக்கு மனதளவில் தோல்வி ஒன்று சடைபின்னி மாலை அணித்து காத்துகிடந்தது . பீட்சாவை தனது வீட்டில் தோசையாக மாற்றியமைத்த அந்த அன்பான பாட்டி பாடையில். மீண்டும் அந்த வண்ணம் பூசபட்ட இறகுகள் பழைய நிலை அடைந்து தனது தோல்வியை ஒத்துகொள்கின்றது இந்த காக்கா முட்டைகள் . அந்த தோல்வியின் அடையாளமே நீரில் நனைகபட்ட அந்த புது ஆடைகளும் சேகரித்துவைத்த அந்த பணமும்.

பீசா கடையில் வாங்கிய அடியின் வீடியோ பதிவு அந்த சேரி நபர்களின் கையில் மாட்டிகொள்ள. அதில் லாபம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்கள் அந்த செயல்திட்டத்தில் தோல்வி கண்டு அதை அரசியலாக மாற்ற ஒரு திட்டம் திட்டி வருகின்றனர். இந்த வீடியோ ஆவணம் ஒரு மீடியாவின் கைகளில் கிடைக்க அது பரப்பரப்பு நிலையை அடைகின்றது. இந்த காக்கா முட்டைகள் வாங்கி பளார் வீடியோ.ஒருபக்கம் மீடியவின் விஸ்வருப அரசியல் மறுபக்கம் இந்த நிகழ்வை வைத்து அரசியல் லாபம் செய்ய துடிக்கும் அரசியல் காட்சிகள் .இங்கு என்ன நடகின்றது என்றே தெரியாத காக்கா முட்டைகளும் அதன் தாயும்

வழக்கம்போல காப்பரேட்களுக்கு சலாம் அடிக்கும் காவல்துறை இந்த வீடியோ நிகழ்வை பெரிதுபடுத்த விரும்பாமல் மூடிமறைக்கும் வேலைகளை செய்து வர.இந்த நிலையை உணர்ந்த அந்த காக்கா முட்டைகள் தங்களுக்கான ஒரு கூடு தேடி பறக்கின்றது தனது தாயை மறந்து .அப்போது தான் தெரிகின்றது அந்த தாய்க்கு அதன் காக்கா குஞ்சுகள் தாக்கப்பட்ட நிகழ்வு .

ஊரு முழுவதும் தேடி பார்க்கும் அந்த தாய்க்கு அழுகை கொப்பளிக்கும் சமயம் வீட்டிற்கு வருகின்றது காவல் துறை. இருவரும் சேர்ந்து தேட ஆரம்பிக்க அந்த காக்கா முட்டைகளோ தனக்கான ஒரு இடத்தில் பதுங்கி தனது பழைய தோழனோடு விளையாடி கொண்டிருக்க அவ் இடம் நோக்கி வரும் காவல்துறையை கண்டு ஓட்டம் புடிக்க ஆரம்பிக்கும் அந்த காக்கா குஞ்சுகள் வாகனத்தில் இருந்து இறங்கிய தனது தாயின் கூகுரல் கேட்டதும் “டேய் நம் அம்மா டா “என்று சொல்லும் இடத்தில் இயக்குனர் தமிழ் சினிமாவை தனது கரங்களில் தாங்கி பிடிக்கின்றார்.

தாய் தனது காக்கா குஞ்சுகளை தூக்கிக்கொண்டு செல்லும்போது போது அதிர்ச்சி மிகுந்த ஆச்சரியம் காத்துகிடந்தது. எந்த இடத்தில் உரிமையும் மறுக்கப்பட்டதோ அங்கே ஒரு புதிய மானுடம் பிறக்கின்றது.இந்த காய்ந்த ரொட்டியை நாய் கூட திங்காது இதுக்கு நம்ம ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை என்ற வசனத்தோடு முடிகின்றது இந்த காக்கா முட்டையின் அத்தியாயம்..

-தொடரும்

*திரைமொழியில் காக்கா முட்டையின் பங்கு. (Contribution to Tamil film language) .

*படவிவாதமும் அதில் எழும் கேள்விகளும்.
(Film critic's) .

*மனித வாழ்வியலில் காக்கா முட்டையின் பங்களிப்பு.
(Life style registration in context of THE CROW EGG).



திரைப்பட விமர்சனம் "புறம்போக்கு என்ற பொதுவுடைமை"

புறம்போக்கு என்ற பொதுவுடைமை  திரைப்பட விமர்சனம்

இந்தியா விடுதலைக்கு பின்னர் 1980களில் தேசிய அளவில் "உழுதவனுக்கே நிலம் சொந்தம்" என்ற கொள்கையை தலித் பேந்தர்கள் மற்றும் நக்சல்பாரி இயக்கங்கள் பேசிவந்த சமயம்.அச்சமயத்தில் தமிழகத்தில்நிலப் பிரபுத்து வாதிகளுக்கு, காங்கிரஸ் விரித்த சிவப்பு கம்பளத்தை மிஞ்சுவதற்காக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இறந்தார்க்கு பின்னர் தமிழ்நாட்டு நிலப் பிரபுத்து வாதிககளுக்குதங்க கம்பளம் விரித்து கட்சியை வளர்த்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள்.

உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற முர்கதனமான தலைமறைவு அரசியல், தங்களது ஆட்சி அதிகாரத்தை அசைத்துவிட கூடும் என்று அதனை அணுவணுவாக அழிக்கும் வேலையை செய்யத்தொடங்கினர்.
அதன் மூலமாக ஓட்டுவங்கியை தக்கவைக்க, ஒரு ஜாதிக்கு ஒரு தலைவன் என்ற முறையை நிறுவி, மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு அயராது உழைத்த தலைமறைவு வாழ்கையில் இடுபட்ட தோழர்களை தனிமைபடுத்தி, அழித்தொழித்து. அவ்அரசியலுக்கு உதவிகரமாக இருந்த தோழர்களுக்கு உயிர்பலிகளை காணிக்கையாக மாற்றியமைத்து.

எந்த ஒரு தருணத்திலும் பெரியமாற்றம் செய்யமுடியத வலக்கை,இடக்கை கம்யூனிஸ அரசியலை கையில் வைத்துகொண்டு. அரசியல் விருட்சம் கண்ட தமிழ் நாட்டு திராவிட அரசியலும், மற்ற மாநிலத்து ஆட்சி அதிகார அரசியலும், தங்கள் கைவசம் வைத்துள்ள அரசு இயந்திர தோட்டா மற்றும் தூக்குகயிற்றால். அழித்தொழிந்த, லட்சம் தோழர்களிளில் ஒருவரது கதையே, புறம்போக்கு என்ற பொதுவுடைமை.

தூக்கு தண்டனை என்ற அரசின் பயங்கரவாத கொலையை நோக்கி சுழற்றபடும் நான்கு தனிமனித உளவியல் மற்றும் செயல் நகர்வே புறம்போக்கு என்ற பொதுவுடைமை. இப்படத்தை இயக்கிய தோழர் ஜனநாதன்,மக்களுக்கான எதார்த்த அழகியல் கலவையை உலகசினிமா வரிசையில் நிறுத்தியதற்கு செவ்வணக்கம்(RED SALUTE) பொருந்திய நன்றியை சொல்லவேண்டும்.

ஷியாம் அரசுக்கு எதிராக எந்த நிகழ்வு நடந்தாலும் அது தீமை என்று, அவை அனைத்திற்கு ஒரே தீர்வு கொடூர தண்டனைகள் மட்டுமே என்று, தனது வாழ்நாளில் எப்படியும் ஒரு தேச விரோத குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிரைவேற்றிய பெருமை தனக்கு இருக்கவேண்டும் என்ற கௌரவர அதிகாரப்பிடியில் உள்ள போலீஸ் அதிகாரி மெக்கலேய் .

கார்த்திகா வறுமையின் பிடியில் சிக்கிய கிராமத்திற்கு உதவி செய்யவந்த, தோழர்களின் கொள்கையில் தன்னை இனைத்துக்கொண்ட பெண் இயக்கவாதி குயிலி. (பிறந்த நாட்டிற்காக தன்னையே மாய்த்துக்கொண்ட முதல் பெண் தற்கொலை படை போராளி குயுலி) .

விஜய் சேதுபதியின் தந்தை இளம்வயதில் இறந்துவிட, அவர் செய்துவந்த தூக்குதண்டனை என்ற அரசின் கௌரவ கொலையை செய்யும் பொறுப்பை ஏற்கின்ற சேரிவாழ் இளைஞனான எமலிங்கம்.

ஆர்யா மக்களுகான தேவைகளில் போராடி, மக்களுக்காகவே இறுதி மூச்சு வரை வாழ்ந்து மார்சிய அரசியலே மக்களின் தீர்வு என்று ஓங்கிஒலிக்கும் மக்கள் தோழனாக. அரசு இயந்திரந்தின் அடக்குமுறைக்கு, ஒரு போதும் அஞ்சி தனது பாதையை மாற்றிக்கொள்ளா மக்கள் விடுதலைக்காக தன்னை மாய்த்துக்கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட ஒரு தோழனான பாலுவாகவும் கதை முழுவதும் பயணிக்கின்றனர். 




இந்த நான்கு கதாபாத்திரத்தை வைத்து, வெள்ளைகாரர்கள் ஆட்சி காலத்தில் இருந்துவந்த தூக்குத்தண்டனை முறையை, இந்தியா தேசத்தை விட்டு அப்புறபடுத்த. இதுவரை யாருமே எடுக்காத ஒரு முயற்சியை இயக்குனர் தனது சொந்த தயாரிப்பில் எடுத்திருப்பதே, தான் பிறந்த மண்ணுக்கு, வளர்ந்த நாட்டிற்கும் ஆற்றும் சிறந்த பங்கு , காலத்தால் அழியாத தமிழ் உலக திரைப்படம் என்று நம்மை சொல்லவைக்கின்றது.

படத்தில் வரும் வசனங்கள், தங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் பணமே வாழ்க்கை என்று வாழும் சாமனிய மனிதனுக்கு, காவல்துறை அடக்குமுறைகளை ஆர்யா மற்றும் ஷியாம் வைத்து பேசியிருப்பதும், மீடியாவுக்கு ஒரு தலைவனை உருவாக்கும் தமிழ் தேசிய அரசியலால் , தீர்வே இல்லை என்ற வசனத்தை கார்த்திகா தான் தோழர்களோடு விவாதிப்பதே. இப்படத்தின் வசனம் எவ்வளவு கூர்மையானது என்று நாம் உணரமுடியும்.

திரைக்கதை காட்சி (SCREENPLAY) ஒருவரின் வழியை கண்கூடாகப் பார்க்காமல், அவற்றை யாரும் உணரமுடியாது என்பதற்காக பொருத்தப்படும் காட்சிகள் மட்டுமே, ஒரு பெரும் தாகத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படை உளவியலை இயக்குனர் பல கட்சிகளில் தெளிவுபடுத்தி இருகின்றார். “தம்பி நான் நிரபராதி” என்று தூக்குமேடையில் வைத்து ஒரு கைதி சொல்வது, ஆரியாவின் தூக்கு பரிசோதனை, தூக்கு தண்டனை நிறைவேறும் சமயம்,தான் நம்பிக்கை துரோக கொலை செய்தவிட்டோம் என்று விஜய் சேதுபதி கதறி அழுகும் காட்சி, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட நபராக மாறுவது போன்ற இடங்களில் திரைக்கதை உருவகம் நாம் உணர்வோடு பயணிக்கின்றது.

படத்தின் பக்கபலமாக: இயக்குனர் ரசனையோடு கலை இயக்குனர் காட்சி நகர்வுக்காக தேர்ந்தேடுத்த இடங்கள்(locations ) மிக அருமை. விஜய் சேதுபதியின் வீடு,தூக்கு மேடை,சிறைச்சலை உருவாக்கம் போன்ற காட்சியமைப்பு ரசித்து பார்க்க வைகின்றது. கதை களத்தை கேமரா தெளிவாக பதிவுசெய்துள்ளது. நமது கண்ணில் எங்கு கண்ணீர் வரவேண்டும் என்று தீர்மாணிக்கும் பொறுப்பு ஒளிப்பதிவு வசம் சென்றுள்ளது.பிண்ணனி இசை எந்த காட்சியிலும் காட்சியமைப்பை மிஞ்சாமல், தூக்கு தண்டனையின் வலியை நமக்கு தூவிவிட்டு சென்றுள்ளது. நடணங்கள் மனதில் நின்ற அளவு, பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

மீண்டும் அழகா வந்துவிட்டார் ஷியாம், போலீஸ்காரர் தோற்றத்திற்கான உடல் வடிவாக்கம், கோபம் என்று படம் முழுவதும் கம்பீரமாக வருகின்றர். இருப்பினும் விஜய் சேதுபதிக்கே இந்த களத்தில் வெற்றி, ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபிக்க இறுதி காட்சி ஒன்றுபோதும்.. ஏன்னா ஒரு நடிப்பு விஜய்சேதுபாதி.......ப்பா.

இயற்கை, ஈ, பேராண்மைக்கு போன்ற படங்களுக்கு பிறகு, தேசியம் தழுவிய ஒடுக்குமுறையை இரண்டரை மணி நேரம் மக்களுக்கு அரசியல் படமாக இயக்குனர் எடுத்த கம்யூனிஸ் பாதை. இன்று பல திரைவடிவங்களில் நம்மோடு பேசப்பட்டு வருகின்றது,, இருப்பினும் அதை முதலில் பேச ஆரம்பித்த தோழர் ஜனநாதன் அவர்களுக்கு மணிமகுடம் சூட்டியே ஆகவேண்டும்.

திரைப்பட விமர்சனம் "36 வயதினிலே"

36 வயதினிலே திரைப்பட விமர்சனம் 

மலையாள படமான HOW OLD ARE YOU என்ற படத்தின் தழுவலே 36 வயதினிலே திரைப்படம் 

தனது எதார்த்த வாழ்வில் இருந்து, குடும்ப கட்டமைப்பு என்ற கோர்வைக்குள் செல்லும் ஒரு பெண்ணுக்கு எல்லா வகையிலும் அவர்களது சுதந்திரத்தை உளவியால் ரீதியாகவும்,சுயமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவிடாமல் அவர்களின் அன்பான உணர்வையும் வெளிகாட்ட முடியாமல் 
இருக்கும் ஒரு பெண்ணை. ஏதோ ஒரு புது துண்டுதல், அந்த பெண்ணின் கடந்த காலத்தை ஞாபகம் படுத்துவதாள். அவளின் மறுஎழுச்சியால், இந்த சமூகம் அடையும் ஒரு சிறு பயனை (அல்லது) மாற்றத்தை, காய்கறிகளில் பயன்படுத்தப்படும் ரசாயன் கலவையை அரசியலோடு கைகோர்த்து பேசும் அழகிய திரைப்படம் “36 வயதினிலே”




இதை பெண்ணியம் பேசும் திரைப்படம் என்று, பெண்கள் தினம் போல ஆண்கள் தினம் கொண்டாடும் ஆண்கள் யாரும் இந்த படத்தை ஒதுக்கிவிட முடியாத. காரணம் வசந்தியாக ஜோதிகா பேசும் வசனம், ஒரு பெண் மனைவி என்ற அவதாரம் எடுக்கும் நிலையில் , தங்கள் சுதந்திரத்தை ஓடுக்கிவைத்த தந்தை, கணவன், தாய்களுக்கு பளார் பளார்களே.

யார் பெண்கள் கலாவதியாகி விட்டார்கள் என்று தீர்மானிப்பது
Who decide Expire date of women?

முந்தைய காலத்தில் குழந்தையை தாய் மட்டும் வளர்க்கவில்லை, இயற்கையும் சேர்த்து வளர்த்து ஆனா இப்போ

போன்ற வசனம் "ஜோ" பேசும்போது சூப்பர் சூப்பர் என்றே சொல்ல தோன்றுகின்றது

படத்தின் பக்கபலமாக "ஜோதிகா" சந்திரமுகியில் சோபனாவை தனது நடிப்பால் ஓரம்கட்டியது போல, 36 வயதினிலேவில் மஞ்சு வாரியரை ஓரம்கட்டி மீண்டும் வென்றுவிட்டார் “WELCOME BACK JO“.சந்தோஷ் நாராயணன் பிண்ணனி இசை அருமை, கேமராவின் நகர்வு காட்சி அமைப்பை ரசித்து பார்க்க வைக்கின்றது, கலை இயக்குனர் கைவண்ணம் படம் முழுவதும் அழகை சுமந்து செல்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஒரு சிறந்த இயக்குனர் (CAPTION OF THE SHIP) மலையாள திரையில் இருந்து, தமிழ் திரை நோக்கி வந்துள்ளார்.இதுபோல் பல ஆரோக்கியமான படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம்

சமிப நாட்களில் வந்த திரைப்படங்களில் தனி அங்கிகாரம் தந்து
கவணிக்கப்படவேண்டிய ஒரு படமே “36 வயதினிலே”.

சிறுகதை "பச்சை குதிரை FZ-Sஐ".

                                       "பச்சை குதிரை FZ-Sஐ"

அன்று சனிக்கிழமை இரவு சரியாக 10மணி. தொடர் திரை பயிற்சியில் இருந்து வந்த நான், கடந்த சில நாட்களில் மட்டும் நாற்பதற்கும் மேற்பட்ட உலக சினிமாக்களை பார்த்து வந்திருந்தேன். வரும் செவ்வாய் கிழமை மதுரைக்கு அவசியம் செல்ல வேண்டியிருந்ததால் அதற்குமுன் எப்படியாவது ஓ காதல் கண்மணிஅல்லது காஞ்சனாபோன்ற புதிய படங்களை பார்த்துவிட எண்ணம். இந்த எண்ணத்தில் சனிக்கிழமை இரவு முகநூலைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு புத்தக வெளியீடு பற்றிய தகவலைப் பார்த்தேன். நிகழ்ச்சி மாலை 5.30 என்றிருந்ததால் திட்டமிட்டவாறு ஞாயிறன்று மதிய காட்சியாக ஏதேனும் புது படத்திற்கு சென்றுவிட்டு மாலையில் புத்தக வெளியீடு நிகழ்வில் கலந்துகொள்ள திட்டமிட்டேன்
ஞாயிறு காலை பத்துமணிக்குத்தான் எனக்கு விடிந்தது. மதியம் 1 மணிக்கு தூசி படிந்த எனது FZ-S பைக்கை துடைத்தது, வண்டியில் அமர்ந்ததும், புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எதற்காக ஆர்வம்கொண்டேன் என்று எனக்கு நானே சொல்லிப் பார்த்துக் கொண்டேன் . அந்த புத்தகம் ஒரு எழுத்தாளனின் முதல் படைப்பு. எனக்கும் கூட என் அனுபவங்களை வைத்து புத்தகம் எழுத கரு இருந்தது. நானும் எழுத ஆசைப்பட்டேன். அப்படி எழுதும்பட்சத்தில் அதை வெளியிடுவது எப்படி என்ற உள்மன உந்துதல் இந்த விழாவிற்கு செல்ல தூண்டியிருக்கலாம். மேலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் யுகபாரதி அப்புத்தகத்தை வெளியிடுகிறார். புத்தகம் பற்றிய அவரின் கருத்தை கேட்கவேண்டும். இடையில் சினிமா வாய்ப்பு வந்துவிட்டதால் புத்தகம் எழுத நேரம் கிடைக்கவில்லை.
புத்தகம் எழுத நினைக்கும் எனக்கு, எழுதி புத்தகமாக்கி அதை வெளியிடும் ஒருவரை பார்ப்பதில் ஆர்வமிருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே, எனது FZ-S பைக்கின் வேகத்தைக்கூட்ட கூட்டி, நான் வசிக்கும் வேளச்சேரியில், பினிக்ஸ் திரைப்பட மாலை கடக்கும் போது, பீனிக்ஸ் நமக்கு வேண்டாம் தேவி கருமாரி தான் உகந்தது என்று அந்த திரையரங்கை நோக்கி எனது பைக்கை ஓட்டினேன் .
எனது பச்சை குதிரை FZ-Sஐ கிண்டி பாலத்தை 70 கி.மீட்டர் வேகத்தில் கடந்து, இடையில் எந்த ஒரு போக்குவரத்துக்கு நிறுத்தமும் இல்லாதிருந்ததால், அடுத்த பாலத்தில் இறங்கி காசி தியேட்டர் அருகே செல்லும்போது, அங்கே சாலையை மறைத்து காஞ்சனா படத்தைப் பார்க்கக் கூட்டம் நின்று கொண்டிருந்தது.
பார்த்ததும் மிகவும் சந்தோஷ மனநிலை காரணம் அங்கே நின்ற நபர்கள் எல்லாம் மணிரத்னம் என்ற தமிழ் திரைப்படம் இயக்குனர் அதே நாளில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற படத்தின் வழியக ஒதுக்கிய,அதே சீ- கிளாஸ் மக்கள் வெள்ளம். அங்கு இருந்து உதயம் தியேட்டரை அடையும்போது அங்கும் அதே மக்கள் கூட்டம் மற்றும் ஆரவாரம் நிலைமை.
மீண்டும் விரைந்து தேவி கருமாரி நோக்கி சென்றேன், அங்கே ஆட்டோ, சைக்கிள், பைக், கார் என்று திருவிழா கலவை தான். சக்தி நான் எசியில் ஹவுஸ்புல் என்று கவுண்டரில் ஓட்டப்பட்டிருந்தாலும், மாலை காட்சிக்கு டிக்கெட் எடுத்தவாக்கில் இருந்தனர். என்ன செய்வது என்று தெரியவில்லை காட்சி 2:45 ற்கு தானே தொடங்கும். இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் தியேட்டருக்குள் சென்றுவிடும். எதாவது கருப்புசீட்டு வாங்கி படம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை சற்று துளிர்விட்டது. முந்தைய காட்சி முடிவடையாவிட்டாலும், அடுத்த காட்சிக்கு நின்ற கூட்டத்தைப் பார்த்ததும், கறுப்பு சீட்டு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உணர்ந்து, அங்கிருந்து கழன்று கொள்வதே மரியாதை என்று வெளியேறினேன்
எனது FZ-S ஐ அருகிலிருந்த பங்கஜம் சினிமாஸ் நோக்கி திருப்பினேன். கூட்டமிருந்தாலும் தேவி கருமாரியம்மன் அளவிற்கு இல்லை. FZ-S ஐ வெளியிலே நிறுத்தி விட்டு, டிக்கட் கவுண்டரை நோக்கி ஓடினேன். சென்னை வந்தபின் டிக்கெட் கவுன்ட்டரை நோக்கி நான் ஓடிய முதல் ஓட்டம். ஓடியும் கூட டிக்கட் கிடைக்கவில்லை என் முயற்சியில் தளராமல் ஏ.வி.ம் ராஜேஸ்வரி நோக்கி வண்டியை திருப்பினேன், அங்கு தான் கோச்சடையன் முதல் நாள் பார்த்த ஞாபகம். கோச்சடையானுக்கு முதல் நாளே டிக்கட் கொடுத்த தியேட்டர், மூன்றாவது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் படத்திற்கு டிக்கட் கொடுக்காமலா போய்விடும் என்ற அசாத்திய நம்பிக்கையில், சற்று மெதுவாகவே, தியேட்டரின் எதிர்புறத்தில் இருக்கும் ஒரு கேரளா உணவு கடை அருகே நிறத்திவிட்டு செல்ல நினைத்த போது, செக்குரிட்டி உடையில் வடமாநில செக்குரிட்டி, வண்டிக்கு சைடுலாக் போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள, நான் சாப்பிட வரல, டிக்கட் கிடைக்குமா என்று பார்த்துவிட்டு வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லிவிட்டு ரோட்டைக் கடந்தேன்.
தியேட்டர் வாளகத்தில் நுழையும்போது. ஒரு வெள்ளை நிற காரும், பைக்கும் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு, நகரமுடியாத இக்கட்டில் மாட்டிக்கொண்டு சென்னை பாசையில் மாறி மாறி அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். சண்டையை பொருட்படுத்தாமல் உள்ளே செல்ல நினைத்த போது, தியேட்டரிலிருந்து வெளியே வருபவர்கள், உள்ளே நுழைய காத்திருப்பவர்கள் என்று அலைமோதிய கூட்டத்தை பார்த்தபோது, இங்கும் டிக்கட் கிடைக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்ததால், இன்னைக்கு பார்த்தா என்ன நாளைக்கு பார்த்தா என்ன என்ற சமாதான உணர்வு ஏற்பட, பைக்கை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த நண்பனின் அறைக்கு வண்டியைத் திருப்பினேன்.

நான் அணிந்திருந்த கருப்பு பணியன் தனது உஸ்ணத்தை காட்ட ஜீன்ஸ் பேன்ட் என்னை வெட்கையால் வாதம் செய்துவிட்டது. அப்போது மணி மூன்று நண்பனின் அறையை அடைந்தேன் சற்று நேரம் போக்கிவிட்டு புத்தக வெளியீடு நிகழ்வில் கலந்துக்கொள்ள மனதில் தற்சமய திட்டம் தீட்டினேன். அறையுள்ளே சென்றதும் கலைஞர் டிவியில் ஓடிய படத்தை பார்த்தவாரே அறைநண்பர்கள் ஒன்று குடி உணவு உண்டு கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து சிரித்து விட்டு பக்கத்து அறைக்குள் நுழைய இன்னும் இரண்டரை மணி நேரம் இருக்கின்றது அதுவரை சற்று ஓய்வுவெடுத்த பிறகு அந்த நிகழ்வுக்கு பயணபடுவோம் என்று முடிவெடுக்க உடல் சோர்ந்து கண் அசந்து தூங்க ஆரம்பித்தபோது மதிய உணவை முடித்த நண்பர் ஒருவர் நான் இருக்கும் அறை நுழைந்து 

என்ன தூக்கமா என்று கேட்கா?
 

சும்மா சாஞ்சு இருக்கேன்
 

சரி காஞ்சனா எப்படி இருக்காமா என்று நான் கேட்க
 

நன்றாக இருகின்றது என்று சொல்றாங்க என்றார்

அப்படியே பேச்சு நீண்டது சற்று நேரம் கழிந்து அலைபேசியை பார்த்தேன் 4:15 p.m என்று மிண்ணியது பேசாமல் நான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுவிடுவோமா என்று ஒருபக்க யோசனை.

மீண்டும் பேச்சு தொடர்ந்து 4:30மணிபோல எழுந்து அருகில் இருக்கும் நண்பனிடம் நிகழ்வு நடக்கும் இடம் குறித்து விலாசம் கேட்டபோது சரிவர சொல்ல தெரியவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தூக்கத்தினால் உதடின் ஓரத்தில் தேங்கிய எச்சியை குழாய் நீரில் வாய் கொப்பளித்து விட்டு அங்கே இருந்த சீப்பால் முடியை ஒதுக்கி அங்கிருந்து கிளம்பினேன்..
 

இன்னும் ஒருமணிநேரம் எங்கே செல்வது என்ற குழப்பத்தில் கவிஞர் யுகபாரதியா அல்லது உலக சினிமாவா என போகும் வழியில் யோசிப்போம் என எனது பைக்கில் சற்று தூரம் பயணித்தேன்.

சாலை எங்கும் அமைதி, கடைகள் பல மூடியநிலையில், அங்கே தேனீர்கடை ஒன்று தென்பட அங்கே அமர்ந்து யோசித்தால் நன்றாக இருக்கும் என்று எனது பைக்கை அக்கடை அருகே நிறுத்தி உள்ளே செல்லும் வழியில் வயதான ஒரு பாட்டி தனது தட்டில் பஜ்ஜியை தேங்காய் சட்டினியில் முக்கி உண்டுகொண்டு இருக்க கடை உள்ளே நுழைத்ததும் நான் வழக்கமகா குடிக்கும் கிரீன் டீ இங்கு இருக்காது என்பதை உணர்ந்துகொண்டு.

அண்ணன் ஒரு டீஎன்றேன்
 

கவிஞர் யுகபாரதி சந்திப்பு நிகழ்வா அல்லது இரண்டு உலக படமா என்ற சிந்தனை ஓட்டம் ஆரம்பமாக டீ அருந்தியபடியே இறுதிமுடிவுக்கு வந்துவிட்டேன். கவிஞர் யுகபாரதியை கண்டுவிட வேண்டும். அதைவிட இப்புத்தகவெளியீட்டில் ஒரு புதிய எழுத்தாளர், ஒரு புதிய படைப்பை எப்படி இந்த சமூக தளத்தில் பொறுத்த போகின்றார், இந்த தளத்தை எப்படி இச்சிறப்பு அழைப்பாளர்கள் அணுகப்போகின்றனர் என்ற சிந்தனை ஓட்டம் எழ ஆரம்பித்தது காரணம் புத்தகத்தின் தலைப்பு தம்பி சோழனின் நீங்களும் நடிக்கலாம்”..

ஒரு முடிவை எடுக்க டீயின் இறுதிசொட்டு வரை யோசிக்கவேண்டிய அவசியம் ஒரு வெளியீடு நிகழ்வு என்பது நம்மோடு சரி சமமாக பயணிக்கும் மனிதர்கள் தங்கள் வாழ்வியலில் சேகரித்த அல்லது கடந்து வந்த ஒரு பல நிகழ்வை பொது மேடையில் கட்டவிழ்பதுவே அது எங்குமே கிடைக்காத ஒரு சிறந்த மேடைபாக்கியம் அதில் இருந்து கவிஞர் யுகபாரதி என்ன பேசபோகிறார் என்பதே எனது யோசனை என்னும் தேனீரின் இறுதிசொட்டு "டீ"த்துளி.

இனி எனது பயணம் டிஸ்கவரி புக் பேலஸ் நோக்கியே என்று முடிவு செய்து. எனது தொகையில் இருந்து பழைய பத்துரூபாய் நீட்டி, மீதம் இரண்டு ரூபாய்க்கு கணக்கை முடித்து அங்கு இருந்து நேராக எனது பைக்கை கே.கேநகர் எம்பதுஅடி சாலையில் பயணித்து. அங்கே வலது இடது என்று பிரியும் இடத்தில் இடதுபுறம் இறுதி செல்லவேண்டும் என்று தேடும்கருவி வரைப்படம் சொன்ன திசைநோக்கி செல்ல ஆரம்பித்தேன்.

சாலையின் இருபக்கமும் பார்த்தவாறு அந்த தெருவின் இறுதியை அடைந்தேன். எங்குமே பெயர் பலகை இல்லை,இனி விலாசம் கேட்டு போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வர, அருகில் இருக்கும் தேனீர்கடையை பார்த்தேன்.அது நாம் சொந்த ஊர்களில் உள்ள டீ கடை வடிவமைப்பில் இருந்தது. பனைமர ஓலையால் இருபுறமும் வளைத்து, வெந்தநீர் குவலையில் ஆவிபரக்க இருந்தது.
 

கடையின் வெளியில் இரு இரு நபர்களாக பேசிக்கொண்டிருந்தனர் ,கடைக்குள்ளே இரண்டு நபர்கள் தனி தனியாக அமர்ந்து டீ அருந்திகொண்டு இருந்தனர், உள்ளே ட்ரான்ஸ்சிஸ்டரில் இளமை என்னும் பூங்காற்று என்ற காலத்தால் அழியாத பாடல் ஓடிக்கொண்டு இருக்க..
 

கடைக்கு டீ அருந்தவந்த ஒரு நபரிடம் கேட்டேன்

அண்ணன் இங்கே டிஸ்கவரி புக் பேலஸ்எங்க இருக்கு என்று

அவரின் தோற்றமே சுருட்டைமுடியோடு அவர் அணிந்த சட்டையின் பித்தான்கள் மேலும் கீழும் ஏறஇறங்க இருந்தது அவரது பேன்ட் கரண்டைக்காலுக்கு மேல் இருக்க வெள்ளைநிற ரப்பர் செருப்புடன் அருகில் வந்து
 

அப்படி னா என்ன ?
 

அங்க என்ன இருக்கும்? என்று கேட்டார்.
 

அது புத்தக கடை என்றேன்
 

அவருக்கோ இடம் தெரியவில்லை.
 

தனதருகே காதுகளில் ஹெட்செட் மாட்டி இருக்கும் நபரை தொட்டு அழைத்து.

இவர் ஏதோ கேட்கிறார் என்று சொல்ல?

மீண்டும் நான் உச்சரித்தேன்

இங்க டிஸ்கவரி புக் பேலஸ் எங்க இருக்கு என்றேன்
 
அவரோ ஜாடையில் தெரியாது என்று கை அசைத்தார்.
 
எந்த தெரு என்று அந்த சுருட்டைமுடி மனிதன் மீண்டும் கேட்டார்.

எனக்கு தெரு பெயர் மறந்து போய் இருந்தது.
 
இங்க தான் ஏதோ கருப்பசாமியோ இல்ல பழனிச்சாமி தெருவுனு சொன்னாங்க என்றேன் .
 

கொஞ்சம் இருங்கஎன்று அந்த சுருட்டைமூடி மனிதர் என்னிடம் சொல்லிவிட்டு
 

அவர் கடைக்குள் சென்று

அண்ணன் இங்க புத்த கண்காட்சி எங்க இருக்கு என்றவுடன் அந்த டீ மாஸ்டர் கைஜாடையையில்
 
அந்த டி.வி கடைக்கு மேலே இருக்கும் பாரு என்று சொல்ல.
 

அந்த சுருட்டை முடி நபர் வெளிவந்து
 

இப்படிக்கா வளைஞ்சு பஸ்ட்டு ரைட், அப்படியே நேர போனா ஒரு டிவி கடை வரும் அதற்கு பக்கத்தில் போய் கேளுங்க.
 

அங்க ஒரு புத்தக கண்காட்சி இருக்கும், என்று சொல்லி அனுப்பி வைத்தார்.அந்த பாசமான மனிதன்,
 

அவர் சொன்ன பாதையில் பயணிக்க ஆரம்பித்தேன் வழக்கம்போல அவர் சொன்ன விலாசத்தை
 
சரியாக கவனிக்காவில்லை ஆகையால் அத்தெரு முடிவடையும் இடத்திற்கு வந்துவிட்டேன் என்பதை உணர்ந்து அருகில் இருக்கும் ஒரு அரசமரம் அதில் ஓய்வுவேடுத்த இரண்டு ஆட்டோகள் அதில் ஒருவர் ஆட்டோவில் அமர்ந்திருக்க மற்றோரு நபர் ஆட்டோவிற்கு அருகில் கலர் சட்டை அணிந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
அந்த ஆட்டோ அருகில் சென்றதும், அந்த ஆட்டோ ஸ்டீரிங்கில்
 

ஒரு நிட்ட அன்டிராயீடு அலைபேசி சொருகி இருந்தது
 
அந்த கலர் சட்டை அணிந்த நபரிடம்
 

அண்ணன் இங்க டிஸ்கவரி புக் பேலஸ்னாஎன்றேன்

அவர் அதை காதில் வாங்காமல் புருவம் அசைத்து மீண்டும் எந்த இடம் என்று கேட்டார்

இங்க டிஸ்கவரி புக் பேலஸ்னாஎன்றேன் .

திரும்பி பர்ஸ்ட் லெப்டு, பக்கத்தில் டீ கடை, அதற்குள்ள போனாலே தெரிந்துவிடும் என்று சொல்ல
 

நான் மீண்டும் கேட்டேன் அண்ணன் பர்ஸ்ட் லெப்டு,
 
தான என்று ஆம் என்பது போல தலையசைத்தார்.

எனது பைக்கை திருப்பி மீண்டும் பயணிக்க ஆரம்பிதேன்.
 
எனது வலது மற்றும் இடது கையை காண்பித்து இது ரைட் இது லெப்டு என்று சொல்லி கொண்டே அந்த முதல் லெப்டு திரும்பினேன். அங்கே நின்று எனக்கு எதிர் திசையில் பார்த்தால் டீ கடையில் பலர் நின்று பேசியவண்ணம் இருந்தனர். எனக்கு அருகில் ஒரு சிறுகடை அதில் பல டிவிகள் இருந்து ஆனால் ஒன்று மட்டும் கருப்பு வெள்ளையில் திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது.
 

அந்த கடைக்காரரிடம் கேட்டேன்
 


இங்க டிஸ்கவரி புக் பேலஸ்என்று முடிப்பதற்குள்
 

அவர் கையை மேலே நீட்டினார் அர்த்தம் புரியவில்லை
 

ம்ம்ம்ம் என்றேன்
 

மேல மேல என்றார்
 

ஓ மாடியா
 

என்று சொல்லி நேரம் பார்த்தேன் மணி 4:45. “டிஸ்கவரி புக் பேலஸ்என்ற நீட்ட சுவரில் எழுதப்பட்டு இருந்தது. அதை ஓட்டிய நடிப்புக்கான பள்ளி விளம்பர பலகையும் இருந்தது. அங்கே மிகவும் குறைந்த வண்டிகள் நின்றுகொண்டு இருக்க, நான் கடந்துவந்த சாலையை பார்த்தபோது மிக அழகாகத்தெரிந்தது, இரண்டு புறமும் மரங்கள் அந்த நிழலில் நடந்துசெல்லும் இளம்பெண்கள், பெரியவர்கள் என்று அந்த இடமே ஒரு புதுப்பொலிவுடன் இருந்த நேரம் .டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கம் தயார் ஆகிக்கொண்டு இருந்தது. அரங்கில் இருந்து வெளியேரிய தோழர்கள் சிலர் அருகில் இருக்கும் தேனீர் கிடைக்கு டீ அருந்த வந்தனர். நானும் எனது பைக்கை நிறுத்திவிட்டு தேனீர் கடைநோக்கி நடக்க ஆரம்பிதேன். இதற்கு முந்தைய டீ அருந்தி முப்பது நிமிடம்கூட ஆகியிருக்காது. இருந்தாலும் அருந்தினேன் காரணம் தனிமைக்கு ஒரு கிளாஸ் டீ எவ்வளவோ மேல் என்ற எண்ணம்.

இந்த தனிமையும் காத்திருப்பதும் அந்த ஒற்றை கவிஞனை பார்க்க தேனீர் முடித்துவிட்டு அனைவரும் அரங்கம் நோக்கி செல்ல நானும் அவர்களோடு படியேறி அரங்கம் நுழைந்தேன். அது ஒரு மூடிய அறை அதன் மறுபக்கம் கண்ணாடி முடுகை இரண்டு சுவர் விசிறிகள் மாற்று பக்கத்தில் இரண்டு ஏசிகள். அந்த அறைக்கு வெளியே ஒரு புத்தக கடை.இருபுறமும் இருக்கைகள், நடுவில் ஒரு நபர் செல்லும் பாதை, நான் எனக்கான மறைவிடம் நோக்கி ஒளிந்து கொள்ள, எனது அருகில் ஒரு நபர் வந்து தன்னை அறிமுகம் செய்தார். அவர் எனது முகநூல் நண்பர் என்று. நல்ல அறிமுகம் இருவரும் சற்று ஆழ்ந்து சினிமாவை பற்றி பேசிக்கொண்டு இருக்க ,அரங்கத்தின் பின்னும் முன்னும் நபர்கள் நடந்துகொண்டு இருந்தனர் . அரங்கத்தில் போட்டோ கிளிக் செய்யப்பட்டது. அரங்கத்தின் மைக் சரிசெய்யபட்டது. பெண்தோழர்கள் இருந்தனர். குழந்தைகள் அழகிய சப்தமிட்டுகொண்டு இருந்தனர். அப்போது மணி 6 அரங்கம் சலசலக்க யுகபாரதி வந்ததும் ஆரம்பித்து விடுவோம் என்ற பேச்சு சப்தம் அலையடி கொண்டிருந்தது.

அந்த புத்தக எழுத்தர் தம்பி சோழன் சற்று பரபரப்பாக இருந்தார். மற்ற விருந்தினர் உள்ளே அமர்ந்தவரே அமைதியாக பேசிக்கொண்டு இருக்க, அந்த அரங்கின் பின்பக்க வாயிலில் இருந்து ஒரு நபர் கருப்பு சட்டையில் வெண்ணிற சிரிப்போடு அரங்கம் உள்ளே வர சற்றும் அமைதி கண்டு, மீண்டும் பொங்க ஆரம்பித்தது. எனக்கு மிகவும் புடித்து போன ஒரு கவிஞனை நேரில் பார்த்தேன், மிக பிரகாசமான மண்ணின் தோற்றம். இவரை பார்த்துவிட்டேன், இனி இவர் என்ன பேசுவர் என்ற எண்ணம் நோக்கி எனது சிந்தனை செல்ல ஆரம்பித்து வந்த அழைப்பாளர்களில் இவர் ஒரு தனி விமர்சகராக இருப்பர். இவர் பேச்சு மட்டுமே புத்தகத்தின் உண்மை பிரதிபளிக்கும் என்ற எண்ணம் தோன்ற காரணம் நீங்களும் நடிக்கலாம் புத்தகம் ஒரு நடிப்பு கலைஞனின் ஒரு புதுவகை அணுகுமுறை. மேடை நோக்கி விருந்தினர் அனைவரும் அழைக்கபட்டார்கள் புத்தக வெளியீட்டு விழா தொடங்கியது ....


Tuesday 23 June 2015

நிலவையும் வளர்த்த தாய்


நிலவையும் வளர்த்த தாய்

பிறர் தொட்டுபார்க்க ஆசைப்படும்
குழந்தை கண்ணத்தின் அழகு.
நித்தம் நித்தம் தாய்க்கு
மட்டும் கிடைக்கின்றது.
தாயிடம் பேசும் மொழி
இல்லா குழந்தைக்கு.
அன்னையின் உடல் வாசம்
எப்படி தெரிகின்றது.
அவள் பாலுட்டியாக
இருப்பதினால் இந்த வரமோ
தாய் என்பவள் புனித பிறவி
என்று சொல்ல குழந்தை மொழி போதாதா
ங் ங் ங் கக்க்க்கக்க்க்..............
*குறிப்பு:இதை யாரும் திருடிவிட வேண்டாம் இது சொந்த படைப்பு

Wednesday 17 June 2015

"அதுவரை......? "


2015 சாகித்யா அகடமி விருது பெற்ற ஐயா பூமணி அவர்களுக்கு எனது நீகழ்கால வரிகள் சமர்ப்பணம் .

                                          கரிசல் காட்டு மன்னனே 
கரிசல் மண்ணின் நிறம் ,
கரிசல் மண்ணின் வீரம் ,
கரிசல் மண்ணின் பாசம் ,
கரிசல் மண்ணின் கோவம் ,
கரிசல் மண்ணின் அழுகை ,
கரிசல் மண்ணின் மொழி ,
கரிசல் மண்ணின் அறுவடை,
கரிசல் மண்ணின் குல தெய்வங்கள் ,
கரிசல் மண்ணின் குடும்பர்கள்,
கரிசல் மண்ணின் திரும்ப செய்யும் முறை ...
இவற்றை இன்று உலகு அறியசெய்த
கரிசல் காட்டு மன்னனே (பூமணி ).
இனி இந்த தமிழ் மொழி
நம்மை மிஞ்சி செல்லவா முடியும்!
அல்லது மறந்து தான் செல்ல முடியுமா ?
கரிசல் வட்டார மொழியை
வளர்த்த முத்தமிழே ...(பூமணி)
உமது கண்ணிய எழுத்துக்கும்
உம் அளவற்ற கற்பனைக்கும்
ஈடு ஏதோ!
உம் போல ஒரு குழந்தை (அஞ்ஞாடி).
மொழி,சொல்ல ஒரு தாய் இல்லை.
குழந்தையாய் நீ மாறி
இந்த உலகிற்கு நீ சொல்லும்
மொழி பாஷை கேட்க இந்த உலகு இருக்கு ...
தடையில்லா ஒரு கடலைப் போல
தடையில்லா ஒரு மேகம்
போல
எம்மையும் அழைத்து செல்ல ...
என்றுமே பூ போன்ற எங்கள் பூமணி வேண்டும்.
                                                                         - வினோத் மிஸ்ரா 



நான் படித்துணர்ந்த எரியும் பனிக்காடு


குளிர் வரும்போது எனக்கும் குளிர்ந்தது, அங்கே பெய்த மழையில் எனது கால்களும் நனைந்தது 

நேற்று எரியும் பனிக்காடை மீண்டும் படிக்கச் தொடர்ந்தேன் ஆறுமணிநேர பயணத்தில் என்னால் 90பக்கங்கள் மட்டுமே புரட்ட முடிந்தது. இது ஒரு பெரிய காரியம் என்று சொல்ல நான் முற்பட வில்லை தொடர்ந்து படிந்து வந்தால் அந்த ஆறுமணி நேரத்தில் ஓட்டுமொத்த மீதம் இருக்கும் 150 பக்கங்களை முடித்துருப்பேன்.

படித்து முடிக்க சற்று தமதமாக காரணம் ஒரு களம் நோக்கி நாம் பயணிக்கும்போது அந்த களம் குறித்து நமக்கு முன்னணி படிவினை இருந்து என்றால் நமக்கு அந்த நாவல் கூட ஒரு ஆவணமாக தென்படும். ஆனால் எந்த ஒரு அனுபவ நோக்கம் இல்லாமல் ஒரு புத்தகம் என்ற பெயரில் நாடும்போது அது படித்து முடிக்கும் ஒரு சுமையாகவே நமக்கு தெரியவரும். ஆனால் எனக்கு இந்த இரண்டு வகையோடு எனது ஓப்பிடை பொருத்தி பரக்கமுடியாது சற்று தமதமாக பக்கங்கள் திருப்ப காரணமகா அமைந்தது.

நான் படித்ததுறையில் கையாளப்படும் சில பயிற்சிமுறை எரியும் பனிக்காடில் பார்க்கமுடிந்தது. அவற்றில் மாதம்தோறும் மாற்றம் அடையும் தட்பவெட்பநிலை, வாழ்வாதார ஜீவனம் குறித்த போராட்டம், குடும்ப உறவுமுறை, உடல் ஆரோக்கிய தரம்,அருகில் இருக்கும் நிர்வாகங்களை பயன்படுத்தும் முறை, ஆங்கில தேசியவாத சுரண்டல் அடக்குமுறை அதன் பின்னியில் செயல்படும் கடும்வரட்சி மற்றும் அதை பயன்படுத்தும் மேஸ்தரிகள் இவற்றில் பயணிக்கும் குழு மாந்தர்கள் மற்றும் தனிமனித அடையாளங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிடும் சில கதாபாத்திரங்கள் என எல்லா நபர்களோடு எதாவது ஒரு முறையில் பயணித்து இருப்பேன் என்றே தோன்றுகின்றது.

மிக குறிந்த கற்பனை ஓட்டம் ஆனால் அவை சொல்லும் உண்மை வேதனை மிக மிக அதிகம். மேஸ்தரிக்கு அவனது நரி கூட்டத்திற்கும் இந்த கூலிகள் என்றுமே தேவடியாமகனே அல்லது தேவடியாமகளே தான். இந்த நரி கூட்டம் தான் கூலிகளுக்கு பஞ்சாயத்து நடத்துகின்றது.. அங்கே இருக்கும் வெள்ளைகார துறைகளுக்கு வேண்டிய நேரத்தில் கரிதுண்டாக சாப்பிப்போடும் எலும்பாக பெண்களை பார்க்கும் குணம், அங்கே பணியாற்றும் எழுத்தார்கள் மத்தியில் உலவிவரும் தமிழர் ஓற்றுமை இப்படி பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஒரு சோக வரலாறுகள்.

உண்மையில் டாக்டர் பி.எச்.டேனியல் செய்த்து ஒரு மகத்தான வரலாற்று பணி அதை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது. இந்த ஒரு ஆவணம் இல்லை என்றால் வறுமையின் பிடியில் தமிழன் வாழ்ந்துள்ளான் இங்கே அவன் வறுமை தமிழன் என்பதால் நையபுடைக்கபட்டு, தீயில் சுட்டு தின்னப்பட்டான் என்ற வரலாறு தெரியாமல் போகி இருக்கும்.

மீதம் ஐம்பது பக்கம் இருக்கின்றது எனக்கோ இந்த எரியும் பனிக்காடு பக்கங்களை திருப்பும்போது சமிபத்தில் சுட்டுகொல்லப்பட்ட இருபது தமிழர்களை ஒப்பிட்டு பார்க்கமுடிந்தது, ஒரு அழமான அணுகுமுறை என்வசம் வந்துசென்றது.இருபினும் பொள்ளாச்சியை தாண்டிய குமரி மலையில் குளிர் வரும்போது எனக்கும் குளிர்ந்தது, அங்கே பெய்த மழையில் எனது கால்களும் நனைந்தது

நாட்களின் அனுபவங்கள்

குளிரில் பயணித்தேன் 1

இன்னும் இங்கே 
சூரியன் வரவில்லை, 

இங்கே அனைவரும் குளிரில் 
ஒய்வெடுத்து 
வருகின்றனர், 

கண்ணில் எரிச்சல்
 இல்லா முழப்பு, 

குளிர்ந்த நீரில் 
கால்கள் பரவ, 
உடனே புத்துணர்வு .. 

காலை அருந்திய இனிப்பிலா
தேனீர் இந்தநாள் ஆரம்பம்....


குளிரில் பயணித்தேன் 2

காதுகளில் பணிமூட்டம்                                       

வந்து தஞ்சம் அடைய, 

வழியெங்கும் பரவிக்கிடக்கும்
 தேயிலை தோட்டம்,

அதன் நடுவே 
பயணித்த வாகன ஓட்டம்.

அந்த வழித்தடம் எனது முன்னோர்கள் 
 இட்ட வேர்வையும்,ரத்தமும்.
இப்பாதைகளிள் வழிந்தோடிய காலமே, 


 "எரியும் பணிக்காடு" வரலாறுகளே 
என்று  மனம் சொன்னது ..........

"உறைந்த பாதை" கவிதை

                                                            "உறைந்த பாதை" 

அந்த அழகியை பார்க்க 
நீண்ட நாள் ஆனது. 

அந்த பனி பெய்தா ஊரில்,                                                 
அன்று மலை பெய்த்து.

அவள் வெள்ளை நிறம் சால்வை
போர்த்திய கருப்பு நிறத்தழகி.

கண்ணின் கருவிழி மட்டுமே உருண்டது
அருந்த தேனீர் வேண்டும் என்று.

என்னை கடந்து சென்று அவள் அமர
மேனியில் பூசிய மணக்கும் வாசனை திரவம்.


அந்த மழைதுளிகள் பட்டு,
அவ்விடத்தை வாசனை இடுகாடாக மாற்றியது
என்னை கட்டையில் அடுக்கி, தீயிட்டு விட்டது.

அவள் நெற்றியில் படர்ந்த மழைதுளிகள்
கண்ணில் இரங்கி கண்ணம் நோக்கி வரும்போது என்னால் சொல்ல முடியவில்லை.

கண்ணை மூடி திறந்தேன்
அவளோ சென்றுவிட்டால்
நானோ அவள் வந்த பாதை நோக்கி காத்திருக்கின்றேன்

புகைப்படம்:எனது பயணத்தின் போது நான் கிளிக் செய்து, புகைப்படத்திற்காக எழுதப்பட்ட வரிகள்.

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...