Wednesday 5 August 2015

அவனியாபுரம் - மதுரையின் பூர்வகுடி கிராமம்.

எனது கிராமம் மற்றும் அதன் பல பெயர்கள்: 

"அவனிப்ப சேகர சதுர்வேதி மங்கலம்" இதுவே முதல் முதலில் பாண்டிய மண்ணின் ஆட்சி காலத்தில் எனது  கிராமத்தின் முதல் பெயர். அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த வடுகர்கள் "அவனி நாராயணபுரம்" என்று பெயரை மாற்றினர்.அதன் பின்னர் ராணி மங்கம்மாள் காலத்தில்"அவனியாபுரம்" என்று பெயர் மாற்றமடைந்துள்ளது, மீண்டும் வடுகர்கள் ஆட்சி அதிகாரத்தால் "பிள்ளையார் பாளையம்" என்று பெயர் மாற்றமடைந்து அனைந்து முக்கிய ஆவணங்களிலும் பதிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் பெயர் மற்றமடைந்து இன்று "அவனியாபுரம்" என்ற பெயரை தாங்கி நிற்கின்றது 
 நான் பிறந்த கிராமம்.அனால்  "அவனிப்ப சேகர சதுர்வேதி மங்கலம்" என்பது தான் முதல் பெயராக இருக்கவாய்ப்பு மிகவும் குறைவு என்பதும் எனது கூற்று.

 
என் கிராமத்தின் பெயர் வரலாறு :

மதுரை மாவட்டத்தில், அதிக நெல் சாகுபடி செய்யும் விவசாயம் நிலமாக "அவனியாபுரம்"மும்  அதற்கு அடுத்ததாகா
"சோழவந்தான்"னும்இருந்துள்ளது  என்று Gesture B.S.Baliga மதுரை வரலாற்று ஆவணத்தில் பதிவுசெய்துள்ளார். . இன்று காலம் கடந்த நிலையில் எங்கள் உறவினர் அதிகம் வசிக்கும் சோழவந்தான் கிராமமே விவசாயம் நிலம் அதிகம் கொண்ட விவாசய பூமியாக இருக்கின்றது.


திருப்புரங்குன்றம் மலையில் உள்ள ஆதி பழங்கால சமணர் சிற்பம் 


குறிப்பு:

*ஒட்டுமொத்தமாக பௌத்த-சமணர்கள் வாழ்ந்த காலத்தில் எனது சொந்த கிராமத்தின் பெயர் "அவனிப சேகர சதுர்வேதி மங்கலம்" என்பது மிகப்பெரிய கேள்விகுறியாக இன்று வரை இருந்து வருகின்றது

*இன்று திருப்புரங்குன்றம் என்பது ஹிந்துக்கள் வாழிபாட்டு (முருகனின் ஆறுபடை விடு) தளமாக இருக்க சந்தர்ப்பம் மிக குறிவு என்று அம்மலையை சுற்றியுள்ள சமணர் படுக்கைகளும், கல்வெட்டு குகை கோவிலிகளும் நமக்கு உணர்த்துகின்றது.



எம் கம்பீர வரலாற்று வாழ்வியில் (Life style).




பிள்ளையார் பாளையம் கண்மாய் 3500 முதல் 4000 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பு கொண்டது. இன்றைய கோச்சடையில் இருந்து  ஆரப்பாளையம் கடந்து அதாவது பழைய ஒத்தக்கடை (இன்றைய புது ஜெயில் ரோடு) சோம சுந்தரி காலணியை (s.s colony ) கடந்து கடல் போல தோற்றம் கொண்ட  பெரியகுளத்து கண்மாயில் வந்து சேர்கின்றது அதன் எல்லையாக வில்லாபுரம் அமைந்து 
 இக்கண்மாயின் கழிவு தான் பல ஊர்களின் கம்மாய்களை நிறைக்கின்றது. அந்த இணைப்பில் வரும்  புதுக்குளத்து கம்மாயை பெரிய குளத்து கம்மாயோடு இணைத்த  பெருமை   பூவநாச்சியை என்ற பெண்ணை  சேரும்.

பெரிய கண்மாயின் ஆரம்பம் கோச்சடை அதன் முடிவு முத்துப்பட்டி இன்றைய TVS நகர் அதன் முடிவில் இருந்து புதுகுளத்து கண்மாய் அரம்பமாகி இன்று அவனியாபுரம், அயன்பாப்பாக்ககுடி,
சரஸ்வதி நாராயண கல்லூரி வழியாக  மற்ற ஊர்களுக்கு செல்கின்றது

பெரிய கம்மாயிக்கு அடுத்ததாக இருக்கும்  புதுக்குளம் கண்மைக்கு மத்தியில் கருப்பசாமி கோவில் இருந்துள்ளது என்று  இன்றும் இருக்கின்றது என்ற தகவலை தொல்குடி கரையளர்களான எனது முப்பாட்டனின் வாரிசுகளில் ஒருவரான . கேசவக்குடும்பனின் வாரிசான அம்மாசி(லேட்) பதிவு செய்கின்றார்.

ஆக பிள்ளையார் பாளையத்தை மையாக வைத்து பல  கண்மாய்கள் இருந்து அவற்றில் ஒன்று பெரியகுளத்து கண்மாய் மற்றொன்று புதுகுளத்து கண்மாய் மற்றும் பல. 


இந்த கண்மாய்களில் மடைதிறப்பது மற்றும் மடைஅடைப்பது எம் கிராமத்து கரையாளர்களின்  பணி என்பதை தாண்டி இவர்களால் மட்டுமே இச்செயலை செய்ய முடியும் என்பதே உண்மை. ஆகையால் தான் நீர் நிர்வாகத்தை பாதுகாத்த குடும்பர்களை நீர்குடும்பன் என்றும் வயல் உழவுக்கு நீர் திறக்கும் வேலைகளை செய்து வந்த குடும்பர்களை மடைக்குடும்பன் என்றும் தமிழ் வரலாறு எம்
முன்னோர்களை அழைத்துவந்து.

*ஆயக்கட்டு- ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி







தாய்மடியான நீர் படுக்கைகள்

எம் கிராமத்தின் அருகில் இருக்கும் குளம் மற்றும் கண்மாய்களை, இன்றைய கூகிளில் வரைப்படத்தோடு வண்ணம் தீட்டி அடையாள குறியீடுயிட்டு பொருத்தியுள்ளேன்.

இந்த நீர் படுக்கைகளே, எம் பூர்வகுடி விவசாயிகளின் "தாய்மடி"யாக இருக்க காரணம்.

  சங்க காலம் தொட்டு அதாவது  நீர் மேலாண்மையை பாதுகாத்த காராளர்கள் என்றும்,
ஏறத்தாழ இவர்களே மருத நிலத்தின் பழங்குடி என்றும்  வரலாறு எம்மை அடையாளப்படுத்த 
இக்குளம் மற்றும் கண்மாய்கள் காரணமாக இருந்துவருகின்றது.

குறிப்பாக: பெரிய கண்மாய், புதுகுளத்து கண்மாய், அவனியாபுரம் கண்மாய்,வெள்ளகல் கண்மாய், நாத்தாங்கால் குளம்,கிராமத்தின் பூர்வகுடி விவசாயிகள் வாழ்ந்த இடம், அவர்களின் காவல் தெய்வமான அய்யனார் கோவில், இந்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றேன்.

தேடுதலில் கிடைத்த பதில் : சைவ சித்தாந்தம் பற்றிக்கொண்ட கடவுள் மறுப்பே எம் மூதாதையார்கள் அழகர் கோவிலில் உள்ள காவல் தெய்வம் 18ஆம் படி கருப்பனுக்கு மொட்டை அடித்து, ஆட்டை பலியிடுகின்றனர் என்பதே வரலாற்று தகவல் .





எனது கிராமத்தின் பழமைவாய்ந்த அடையாளங்களை இன்றைய கூகிளில் வரைப்படத்தோடு வண்ணம் தீட்டி அடையாள குறியீடுயிட்டு பொருத்தியுள்ளேன். 

குறிப்பாக: கிராமத்தின் நுழைவாயில், கிராமத்தின் எல்லை,பூர்வகுடி விவசாயிகள் வாழ்ந்த இடம், அவர்களின் குல தெய்வ கோவில்,காவல் தெய்வத்தின் கோவில்,இந்த ஊரில் உள்ள "காலாங்கரை" மற்றும் கண்மாய்களை இந்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றேன்.
எமது கிராமத்தின் எல்லை சாமியான அய்யனார் 





இன்று அவனியாபுரத்தின் எல்லையாகவும் அயன்பாப்பாக்குடியின் ஆரம்பமாக திகழும் "அய்யனார் கோவில்" எமது முன்னோர்கள் உருவாக்கிய வழிபாட்டு தளம் இருந்துள்ளது. ஆகையால் தான், அக்குதுரையில் இருக்கும் அய்யனார். அவனியாபுரத்தில் நாங்கள் வசிக்கும் தந்தை பெரியார் நகர் நோக்கி இருக்கின்றது, என்று எங்களின் முதாதையர் தங்களின் வாரிசுகளுக்கு சொல்லி வைத்துள்ளனர். 

அய்யனாரை எங்களின் காவல் தெய்வமாக வணங்க சொல்லப்பட்டு வந்த பேய் கதைகள்: 

இந்த அய்யனார் எங்களின் காவல் தெய்வம் என்றும், எந்த பேய்களையும் எங்கள் ஊருக்குள் அண்டவிடாமல் பாதுகாக்கவே. இரவு ஒரு குதிரை சப்தம் கேட்கும், அந்த குதுரையில் நாம் ஊர்களில் பதுங்கி இருக்கும் (பேய்களை) திருடனை புடிக்க அய்யனார் வருகின்றார்.
ஆகையல் அய்யனார் நமது தெருக்களில் இரவு நேரம் பயணிக்கும் போது, வீதியில் யாரும் தங்களது கால்களை நீட்டி உறங்கக்ககூடாது, அப்படி உறங்கினால் அடுத்தநாள் காலையில், இவர்களின் தலைவைத்த பக்கம்நோக்கி, இவர்களின் கால்கள் திருப்பிப் போடப்பட்டு இருக்கும் என்று எங்கள் கிழவன் / கிழவிகள் சொல்லி வருவார்கள். நானும் அதை கேட்டு நடுங்கி இரவு 12மணிக்கு முன்னரே கண்முடி துங்கிய காலங்கள் இருக்கின்றது. இதுவே என்று எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு காவல் தெய்வமான அய்யனாரை தெய்விக கதாநாயகனாக பார்க்கவைத்து பேய் கதைகள்

எங்கள் கிராமத்தின் நுழைவாயில் மற்றும் அதன் எல்லை: 

பழங்காலத்தில் எமது கிராமத்தில் இருந்து அய்யனார் கோவிலுக்கு எடுக்கப்படும் முளைப்பாரிகள் எங்கள் கிராம நுழைவாயில் இருக்கும் வாய்களில் கரைக்கப்பட்டது வந்துள்ளது. இன்று நாங்கள் அதை "காலாங்கரை" என்று சொல்லிவருகின்றோம்.அதை நீகழ்காலத்தோடு பொருத்தி பார்க்கும்போது,
எங்கள் கிராமத்தின் ஆரம்பம் இந்த "காலாங்கரை" வாய்க்காலும், கிராமத்திற்கான முடிவை அதாவது எல்லையை தேடிவரும் சமயத்தில் தான் எமது மூதாதையர்கள் அங்கே அய்யனார் என்ற காவல் தெய்வத்தை நிறுவி வாங்கியுள்ளனர் என்பது தெரியவருகின்றது.

குறிப்பு

*காலாங்கரை-ஏரிக்கு நீர் கொண்டு வருங்கால்வாய்.

*எங்கள் மூன்னோர்கள் என்றுமே சிவனை வாங்கியவர்கள் இல்லை என்பதை பல சான்றுகள் வைத்து நிரூபிக்க முடிகின்றது.

*பூர்வகுடி விவசாயிகளான எங்கள் வீடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மொட்டை இன்று வரை
அழகர் கோவிலில் எடுத்து வருகின்றோம் என்பது தொண்டுதொட்டு வரும் நடைமுறை.




மதுரையின் பூர்வகுடிகளும். மதுரை மண்னை வளமடைய செய்த விவசாய பழங்குடிகள் என்பதற்கு பல ஆதாரங்கள் இன்றுவரை நடைமுறை யில் உள்ளது.எனது முப்பாட்டனுக்கு நான்கு வாரிசுகள். அவர்களின் பெயர் பூச்சி, கேசவன், குள்ளன்,முத்து (குடும்பர்கள்).  எனது பாட்டனாரின் பெயர் பூச்சி குடும்பன் எனது தாத்தா பெயர் அழகு குடும்பன் . எங்கள் முண்ணோர்கள் சோனை என்ற காவல் தெய்வங்களை வணங்கி வந்துள்ளனர்.

வைகை ஓடிய மாமதுரையின் வீடியோ 



ஊர் குறிப்பு சொன்னவர்கள் 


எங்கள் ஊரில் ஆனிச்சி கிழவி பாடும் நடுவத்தோழி பாடலில் மழை வருவதாக நாகம்மா கிழவி சொல்கின்றாள்.இந்த பாடலை பாடும் பாட்டி 20 வயது இருக்கும் போது நாகம்மாள் கிழவிக்கு வயது 7. இன்று நாகம்மா கிழவி பாடும் நாட்டுப்புற பாடல் இரண்டு கிழவிகளிடம் இருந்து தான் பெற்றுவந்ததாக செல்கின்றாள் . அவர்கள் பெயர் பந்தி கிழவி,கருத்தமனக்கி இவர்கள் இறக்கும்போது இந்த கிழவியின் வயது 7.



மீண்டும் பயன்ப்படுவேன், என் கிராமத்தின் பெருமயை இந்த உலகம் அறிய.

4 comments:

  1. அருமையான தரவுகள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Super Nan pirantha Mannin perumai evalvu algha aduthuraitthi thankyou

    ReplyDelete

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...