Sunday 27 March 2016

குறியீடு - உலக அளவில் பேசப்படக்கூடிய திரைப்படம் தான்


              "குறியீடு - உலக அளவில் பேசப்படக்கூடிய திரைப்படம் தான்"

தம்பி வினோத் மிஸ்ரா அவர்களே.. உங்கள் குறியீடு படம் பார்த்தேன். வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தீர்கள். ஆனால் சாஸ்தா கோயில் விசேஷம் என்பதாலும், சில கோயில் வரலாறு எழுத புகைப்படம் எடுக்க இந்த நாள் தான் உகந்த நான், என்பதாலும் அந்த பணி முக்கிய பணியாக மாறிவிட்டது. அதனால் உங்கள் வெளியிட்டு விழாவிற்கு வரஇயலாமல் போய் விட்டது. நல்லதொரு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தத்துக்குரிய விஷயம் தான்.

ஆனாலும் உங்கள் குறியீடு படம் பார்த்த போது, எனக்கு பிரமிப்பாக இருந்தது. தம்பி முத்து வேல் என்னிடம் வந்து நமது பகுதியில் சூட்டிங் நடைபெறுகிறது. நடிக்க ஒரு பெண் தேவை என்று கேட்டிருந்தான். நான் நாஞ்சில் நளினி பெயரை அவரிடம் கூறியிருந்தேன். அதன் பின் அதை மறந்தே போய் விட்டேன். கடந்த வருடம் பாளை சேவியர் கல்லூரியில் விஸ்காம் பிரிவு மாணவர்கள் வெளியிட்ட குறும் படத்தினை பார்க்க சென்றிருந்தேன். அப்போது குறியீடு டிரைலர் வெளியிட்டார்கள். பிரமிப்பாக இருந்தது. தமிழ் சினிமா ஒன்று உலக தரத்தில் உருவாகி உள்ளது என்பதை கணித்துக்கொண்டேன். அப்போதும் உங்களை பற்றி அறியாமலேயே இருந்துவிட்டேன். முத்துவேல் முகத்தினை காட்டிவிட்டு நீங்கள் மறைந்திருந்து உங்கள் திறமையை வெளிபடுத்திருந்தீர்கள்.

அதன் பிறகு முழுவதும் குறியீடு பற்றி மறந்தே போய் விட்டேன். தீடீரென்று ஒரு நாள் தாங்கள் என் ஸ்டுடியோவுக்கு வந்து குறியீடு படத்தினை தந்து முழுவதுமாக பார்க்க வைத்தீர்கள்.



குறியீடு பழைய கதை தான். ஆனாலும் புதிய முயற்சி.
காட்சிகளுக்கு இடையே நீங்கள் அமைத்திருக்கும் தொழில் நுட்பங்கள். நடிகர்களை தாங்கள் வாங்கியிருக்கும் வேலை. பிரமிப்பாக இருந்தது. பெரும் பாலுமே.. முத்துவேல் எங்கள் பகுதியில் பிறந்து, வாழ்ந்து, சினிமா துறையில் நுழைய முயற்சி செய்து வரும் இளவல். இவர் பிற்காலத்தில் சென்னை கோடம் பாக்கத்தில் மின்னப்போகின்ற இளம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தினை எப்படி வேலை வாங்கலாம் என்ற சூட்சுமத்தினை அறிந்து வைத்து அவனை நன்றாக வேலை வாங்கியிருக்கீறீர்கள். அவனும்.. தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறான். அதற்கு முழு காரணம் நீங்கள்தான். ஒரு நல்ல இயக்குனர்தான் ஒருவரிடம் என்ன இருக்கிறதோ.. அதை வெளிக்கொண்டு வரமுடியும். ஆகவேதான் அவனை நல்லதொரு நடிகராக வலம் வர செய்திருக்கீறீர்கள்.

நீங்கள் கண்டெத்து தூத்துக்குடி முத்து, சென்னை திரைபடத்துறையின் சொத்தாக ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

அதோடு மட்டுமல்லாமல் இதில் நடித்துள்ள, வாசுகி, மக்கள் கலைஞர் முனியராஜ், ஜெசி, விமல், மகேஷ்வரி,அனுராணி (நாஞ்சில் நளினி என நினைக்கீறேன்.) ராஜீவ் ஆகியோர் நடிப்பில் பிரமாதம் படுத்தியிருந்தார்கள். 

முதல் தடவை பார்த்த போது உங்கள் இயக்கம் மட்டும் தான் என்னை கவர்ந்திருந்தது. ஆனால் நன்றாக பார்த்த போது தான் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருகீறீர்கள்( வாழ்ந்திருக்கீறீர்கள்) அபாரம்.


நாஞ்சில் நளினி எங்கள் பகுதி நாடகங்களில் காதநாயகியாகவே வலம் வந்து பார்த்தீருக்கிறேன். அவரை கொடுமையான வில்லியாக சித்திரித்திருப்பதும் சூப்பர்தான். 
அவர்களோடு பணியாற்றிய அனைத்து நண்பர்களுமே... வெளுத்து கட்டி விட்டார்கள்.
தம்பி மிஸ்ரா எங்கள் ஊருக்கு மேற்கே தான் நீங்கள் சூட்டிங் எடுத்த குன்று உள்ளது. அந்த குன்றை எவ்வளவு அழகாய், கரடுமுரடாய் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் கமரா மேனை பாராட்டியே தீர வேண்டும்.

எனக்கு திரைப்பட தொழில் நுட்பம் பற்றி அதிகம் தெரியாது. உங்கள் படத்தினை எங்கள் வீட்டில் வைத்து தனியாக அமர்ந்து பார்த்தபோது, என்னுடைய பையன் அபிசு விக்னேசு( விஸ்காம்) உங்கள் படத்தில் இருந்து அறியபடவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்றான். 

உண்மைதான். நிச்சயம் உங்கள் திரைப்படம் உலக அளவில் பேசப்படக்கூடிய திரைப்படம் தான். கதை என்னவோ.. பழைய காதல் கதைதான். ஆனால் சொல்லிய விதம்.. 25 நிமிடங்களும் நம்மை வேறு வேலையே பார்க்க முடியாமல் செய்து விட்டது.
உங்கள் குறியீடு.... நிச்சயம் வெற்றிபெறும். ஸாரி வெற்றி பெற்று விட்டது.
ஒரேஒரு சிறிய குறை மட்டும். உங்கள் வெளீயீட்டு விழாவில் நானும் கலந்து கொண்டு பேசியிருக்க வேண்டும். அது நடக்காமல் போய் விட்டது. அது மட்டுமே எனக்கு வருத்தமானதாகும்.


தொடரட்டும் உங்கள் பணி வினோத் மிஸ்ரா..

குறியீடு வெற்றி விழாவில் அல்லது குறீயீடு திரைபடமாகி வெளிவரும்வேளையில் நடைபெறும் இசை வெளியீட்டு அறிமுக விழாவில் நானும் உங்களோடு இருப்பேன்.
வினோத். மிஸ்ரா. நன்றி..

இலக்கியவாதி முத்தாலாம்குறிச்சி காமராசு அவர்களின் பாராட்டு மழையில் "குறியீடு" ....பட குழுவின் நெஞ்சார்ந்த நன்றிகளை ஐயா காமராஜ் அவர்களுக்கு சமர்பிக்க கடமைப் பட்டுள்ளோம்



Friday 18 March 2016

குறியீடு விமர்சனம் 8

குறியீடு விமர்சனம்  8

டாக்டர் ஈஸ்வர பாண்டி அவர்களின்  விமர்சனம் 

தமிழ்கூறும் நல்லுலகம் இன்றைக்கு இந்துசாதி ஆவணகொலைகளின் களம்.....
பொதுவாக சாதிஇந்துக்களால் எடுக்கபடும் மற்றும் பேசபடும் "கௌரவ கொலை" யிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த குறியீடு குறும்படம்.
தலித் ஆணுக்கோ பெண்ணுக்கோ வரும் காதலை கொடூரமாக (யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமோ சாவதிலேயே) முடிக்கபட்டு விடும் நமது பாரம்பரிய சினிமாக்களில்.
இவற்றிலிருந்து மாறுபட்டு போராளியின் மகன் வினோத் நண்பனால் எடுக்கபட்ட குறும்படம்.
சிறந்த ஒலி,ஒளி பதிவுகளோடு அழுத்தமான கதைகருவில அரைமணிநேரம் அசையவிடாமல் பயணிக்க வைக்கிறது படம்.

குறியீடு விமர்சனம் -7

குறியீடு விமர்சனம் -7 

தோழர் பிரபு ஜீவன் அவர்களின் பதிவில் இருந்து

வினோத்மிஸ்ரா இயக்கத்தில் "குறீயிடு" குறும்படம் பார்த்தேன்!
குறியீடு அரைமனி நேரம் ஓடுகிறது. அரைமனிநேர மிரட்டல் என சொல்லலாம். அவ்வளவு நேர்த்தியான திரைமொழியில் செதுக்கப்பட்டுள்ளது இக்குறும்படம்.
தரமான சினிமாவிற்கான மொழியில் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.குறியீடு படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. அதுமட்டுமல்ல மனிதர்களின் ஓசை கூட கிடையாது.ஆக்காட்டி என்ற பறவையின் குரல் மட்டும் ஒரே ஒரு இடத்தில் கேட்கிறது.
ஆனால் ஒவ்வொரு ஷாட்டுகளும் நம்மிடம் பேசுகிறது. காட்சியமைப்புகள் கதை மட்டும் சொல்லாமல் வரலாறும் பேசுகின்றது. பிரேம்கள் அனைத்தும் மிஷ்கினிசம் ஸ்கொயராக தெரிவது எனக்கு மட்டுமா எனத்தெரியவில்லை, உலகத்தரம்.
அமெச்சூர் நடிகர்களை வைத்துக்கொண்டு எப்படி இப்படி பிரமாதப்படுத்தினார் வினோத்? மிகமிக மதித்திறன் கொண்ட கலைநுட்பம்.பின்னனி இசை குறியீட்டை உலகத்தரத்திற்கு தூக்கி நிறுத்துகிறது
ஜாதிஆணவக்கொலைக்கு எதிராக போராடுகிற இடதுசாரிகளே,பு.த,விசிக,ஆதித்தமிழர் கட்சி தோழர்களே!உங்களின் நூறு பொதுக்கூட்டங்களுக்கு நிகர் "குறியீடு.
அழகான அரசியல் சினிமா இது.
உங்களின் விமர்சனம் பல நுணுக்க வார்த்தைகள் கொண்டது மிகவும் நன்றி தோழர் பிரபுஜீவன் அவர்களுக்கு .

மாற்று இணையதள பக்கத்தில்- குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை.

குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை 

                                         இணையதள பக்கத்தில் வெளிவந்த  கட்டுரை

27 நிமிடங்கள் மனிதன் பேசும் மொழிகளில் எந்த மொழியில்  இருந்தும் ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் ஒரு குறும்படம்.
உங்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது, உங்களிடம் பேசினால் என்ன நடந்துவிடப்போகிறது… என்று யாரையோ சவுக்கால் அடிப்பதற்காகவே படம் முழுவதும் மொழியை, வார்த்தைகளை இயக்குநர் தவிர்த்திருப்பார் போல.
படத்தின் பெயர் குறியீடு. படம் முழுவதும் குறியீடுகள் தான். அந்தக் குறியீடுகளை பார்வையாளர்களின் வசதிக்கு விட்டு விட்டு, உங்கள் பாடு நான் அது தான், இது தான் என்று எதையும் சொல்லமாட்டேன் என்கிறார் இயக்குநர் வினோத்.
காதல், காதலைத் தடுத்தல், அல்லது காதலை வதைத்தல், வதைத்து அழித்தல்… இது தொடர் நிகழ்வாகவே இருக்கிறது. கேட்பாரின்றி அலையும் அந்த உயிர் வெறியர்கள் கெட்டு அழுகி வாசம் வீசும் இந்த சமுகத்தின் குறியீடு.
காதலை அழிக்க, வதைக்க எது காரணம், சாதியா, மதமா, பணமா, வறட்டுக் கௌரவமா… எது என்று நீங்களே முடியு செய்து கொள்ளுங்கள், என்கிறது குறியீடு.
எதிராக நிற்பது சாதியோ, மதமோ எதுவாக இருந்தாலும், எதிர்த்து நில். சிதைக்கப்பட்ட எத்தனையோ காதல்களின் சார்பாக, வதைக்கப்பட்ட எத்தனையோ காதலர்களின் சார்பாக… பழி தீர்த்து பலி கொடுக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என்பதைக் குறியீடாகக் குறியீடு சொல்வதாகக் கூட எடுத்துக்கொள்ள முடியும்.


உங்களுக்காக சாதி வராது, உங்களுக்காக மதம் வராது, உங்களுக்காக ஊர் வராது, உங்களுக்காக அரசியல் வராது…. என்பது தான் கடந்த காலங்களின் சாட்சியாக இருக்கிறது எனில்…. உங்களுக்காக நீங்களே கை கோர்த்துக்கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட காதலர்கள் இணையுங்கள், பாதிக்கப்படாதவர்கள்… இனிமேல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இணையுங்கள்… காதலர்களுக்கு காதலே துணை, காதலர்களே துணை… என்பதைக் குறீயீடாகக் கொண்டாலும் தவறில்லை.
கடவுள், தெய்வம், சாமி…. எந்தக் கணக்கிலும் கொள்ள முடியாத ஒரு அக்றிணைப் பொருளாக குறிக்கப்படுவதாக நினைத்தாலும் தவறில்லை. அல்லது, கடவுள், நன்மை தீமை எல்லாவற்றையும் மௌனமாக கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்,
கதையின் முதன்மை பாத்திரமாக நடித்திருப்பவர், தான் மிகச்சிறந்த கலைஞன் என்பதை தன் முகமொழியாலும் உடல் மொழியாலும் உறுதிப்படுத்துகிறார்.
பைத்தியக்காரியாக நடித்திருக்கும் பெண், ஒரு பெருங்கதையின் வலியாக, அதன் நினைவாக தான் இருப்பதை, நம்ப வைக்கிறார்.
maxresdefaultபடத்தின் மொத்த கதாபாத்திரங்களும் அவர்கள் படமாக்கப்பட்டுள்ள விதமும், இது படம் என்பதைத்தாண்டி உண்மை நிகழ்வாகப் பார்க்க வைக்கிறது.
படமாக்கியுள்ள களம், அல்லது நிலம்… அன்பு வறண்டு போன இந்த சமுகத்தின் குறியீடாகவே தோன்றுகிறது.


இயக்குநர் வினோத் மிஸ்ரா, சிறந்த திரைக்கதையாளனாக கதை சொல்லியாக இருக்கிறார். அவரின் கதை சொல்லலலுக்கு மிக அழகாக உதவி இருக்கிறார்கள், ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் இசையமைப்பாளரும்..
குறைகள் இருக்கலாம், அது உங்களுக்கு தெரியலாம், தெரியாமல் போகலாம், ஆனால் குறைகளைத் தேடி அலையவோ, வரிசைப்படுத்தவோ கண்டிப்பாக ஆசையில்லை.
குறியீடு, சொல்ல வருகிற குறியீடுகளுக்காக, அந்த குறியீடுகளின் பின்னால் உள்ள கோபத்திற்காக, அந்தக் குறியீடுகளை வைத்து எழுப்பப்படும் கேள்விகளுக்காக….
குறியீடு குறும்படத்தை நான் கொண்டாடவே ஆவலுறுகிறேன். அனைத்து நடிகர் நடிகையர் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்.
பேசாமலே, ஒரு பேரழிவை, ஒரு பேரிழிவைக் குறியீடாகப் பேசுகிறது, குறியீடு. அந்தக் குறீயிடு என்ன என்று தெரிந்து கொள்ள நீங்களும் பாருங்கள்.
–    முருகன் மந்திரம்


குறியீடு விமர்சனம்- 6

குறியீடு விமர்சனம்- 6

நான் இயக்கிய குறியீடு படம் குறித்து யுவபுராஸ்கர் என்ற இளம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அபிலாஸ் சந்திரன் அவர்களின் பதிவில் இருந்து.



நண்பர் வினோத் மிஸ்ரா தான் எடுத்த “குறியீடு” குறும்படத்தின் இணைப்பை எனக்கு பார்ப்பதற்கு அனுப்பி இருந்தார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த குறும்படமாய் அது இருந்தது. Spaghetti Western ஸ்டைலில் எடுத்திருந்தார். களம் நம்மூர் கிராமம் ஒன்று. நிறைய வெட்டவெளி, கடும் வெயில் படம் முழுக்க வருகிறது. கீழிருந்து மேலாக வானைக் காட்டும் ஷாட்கள், வட்டமிடும் பருந்து, அதன் அச்சுறுத்தும் ஒலி என படம் முழுக்க வருகிறது. படம் பார்க்க துவங்கி கொஞ்ச நேரத்தில் எனக்கு பரதனின் “தாழ்வாரம்”, The Good, the Bad, and the Ugly நினைவுக்கு வந்தன.

படத்தில் வசனமே இல்லை. அதாவது பேசுகிறார்கள். அதை பின்னணி இசை மூலம் மறைத்து விடுகிறார்கள். வசனம் இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை கொண்டு போகிறார். ஒரு காதல் ஜோடி, அவர்களை பிரித்து கொல்ல முயலும் பெண்ணின் அம்மாவும் உறவினர்களும், அவர்களுக்கு என்னாகிறது என்பது தான் ஒற்றை வரி. கதைக்குள் மூன்று காலங்களை கோர்த்திருப்பது என்னை கவர்ந்தது. படம் துவங்கும் போது காதலனுக்கு தான் தன் காதலியின் வீட்டாரால் தாக்கப்பட்டு அவளும் கொல்லப்படுவதாய் கனவு வருகிறது. அவன் பதற்றமாய் தூங்கி விழிக்கிறான். காதலியை தேடிப் போய் அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊரை விட்டு தப்பிக்க முனைகிறான். பிறகு எல்லாம் கனவில் போன்றே நடக்கிறது. ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன். இதே போல் பெற்றோரால் காதலன் கொல்லப்பட்ட ஒரு பெண் அந்த பாழடைந்த வெளியில் பைத்தியமாய் திரிகிறாள். அவள் இந்த ஜோடியிடம் தன் வாழ்கைகதையை நடித்துக் காட்டும் இடம் அபாரமாய் வந்திருக்கிறது. எனக்கு ஷோபா ஷக்தியின் ”பாக்ஸ் கதைப்புத்தகம்” நினைவு வந்தது. கனவு, அந்த ஜோடி, அந்த பைத்தியப் பெண் என மூன்று காலங்கள் ஊடுபாவும் இடம் நன்றாய் வந்திருந்தது. படத்தின் முடிவு மட்டுமே அதிருப்தியாய் இருந்தது.


வினோத் மிஸ்ராவுக்கு காட்சிபூர்வ ஆளுமை இருக்கிறது. கதையினூடே இயக்குநர் தெரிகிறார். இது முக்கியம். அவரால் வெகுஜன ஊடகத்திலும் வெற்றி பெற முடியும் எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழர் நான் அபிலாஸ் சந்திரன் அவர்களுக்கு.

குறியீடு - இயக்குனரின் பாராட்டு

குறியீடு  குறும்படத்திற்கு  திரைப்பட இயக்குனரின்  பாராட்டு.

நான் இயக்கிய "குறியீடு" குறும்படத்தை மிகவும் பிரமிப்போடு மற்றும் மனதார பாராட்டிய "யாமிருக்க பயமேன்" பட இயக்குனர் டி.கே அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

குறியீடு விமர்சனம் - 5

குறியீடு விமர்சனம் - 5 
எதார்த்த பார்வையாளன் பார்வையில் 

(25-2-16) நேற்று நெல்லையில் நடத்த "குறியீடு" திரையிடல் நிகழ்வுக்கு வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட இனைய தள ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜேஷ் குமார் "குறியீடு" குறும்படம் குறித்து வெளியிட்ட பதிவு
**********************************************************************************************************************************************************************
தோழர் Vinoth Malaichamy . . .அவர்கள் இயக்கத்தில் உருவான
"குறியீடு" குறும்படம் (( short film )))
நெல்லை நண்பர்களின் . . .விருப்பத்திற்கு இனங்க
நேற்று எங்களுக்கு படத்தை போட்டு காண்பித்தார் . .
அதுக்கு முன்னே இந்த படம் பற்றி கேட்டிருந்தேன் .
சில தகவல்கள் சொல்லியிருந்தார் . .
அதுல முக்கியமான ஒன்று . . .
கவரவ கொலை . . . அடுத்து . . .
இந்த படம் 30 , ,நிமிடம் ஓடும் ஆனால் . . .வசனம் (( dialaoge))
கிடையாது என மட்டும் சொல்லியிருந்தார் . . .
நான் ஏற்கனவே you tube இனைய தளத்தில் குறும்படங்கள் பார்ப்பேன் ,
ஆனால் . . .10 , ,15 , , நிமிடம் வாய்ஸ் இல்லாமா அந்த வீடியோலஎனக்கு ஒன்னனுமே புரியாது . .
முதல்ல , இந்தியாவில் வெளியான படமே மராத்திகாரர்களால் உருவாக்க பட்ட படம் தான் . .
இது 1913 ல . . . .ஹரிசந்திரா என்ற பெயரில் . . . ராமாயணம் , . மகாபாரதம் கதையை ஒரு 30 நிமிடம் ஓடுற மாதிரி எடுத்ததாக வரலாறு . . .
அந்த பட காட்சியமைப்புக்கள் மக்களுக்கு சரியாக புரிய வில்லை என்பது
தனி கதை .
இப்ப வெளி வருகிற படமே ஒண்ணும் புரியல
இந்த குறியீடு குறும்படம் புரியவா போவுது
என நினைத்து கொன்டே போய் இருக்கையில் அமர்ந்தேன்
படம் ஓட ஆரம்பிச்ச உடனே மிரன்டுட்டேன் . .
அவ்வளவு நேர்த்தி . . .ஒவ்வொரு காட்சியமைப்பும் . .
அங்கே என்ன நடக்கிறது . .என காட்சியமைப்பிலே புரிய வைத்திருக்கிறார்
. அந்த பொண்ணோட அம்மா செம வில்லத்தனம் .
.
அதுக்கு மேல பொன்னோட அண்ணன் Rajiv Koothan . .செமையான வில்லன்
கேரக்டர் . . .
அந்த மன நோயாளி பெண் . . .சரியான நடிப்பு . .
வழக்கமா . , .கவுரவ கொலைனா அந்த பொண்ணை அல்லது பையனை கொலை செய்வாங்க , .
இந்த படத்துல . . . பொண்ணோட அண்ணன் கொலை செய்ய படுகிறான்
அதுவும் அந்த பெண்ணோட காதலனால் . . .
இனி ஒரு விதி செய்வோம் . . அருமை . .
அந்த வில்லன் கருப்பு கொடூர கொலை காரன் . . .2 ,,,கொலை பண்ணிட்டானே . .
இசையமைப்பு இந்த படத்திற்க்கு உயிர் என்றால்
ஒளிப்பதிவு அதுக்கும் மேல . . .
கள்ளி செடி கற்கள் நிறைந்த பகுதியில் அந்த பெண்ணின் அண்ணன்
ராஜீவ் ஓடுற அந்த காட்சியமைப்பு . .அவர் போட்டிருக்கிற அந்த சூ வோட .
அடி பாகம் கூட தெரியிற மாதிரி ஒரு ஜம்பிங் சீன் . . அருமை . .
ஒலி அமைப்புல அந்த பெண் காரில் மயங்கி கிடப்பது .
அந்த ஹீரோ கார் கண்ணாடியை தட்டுவது
காருக்குள் இருந்தால் என்ன ஒலி வரும் . ,
வெளியில் இருந்து தட்டும் போது என்ன விதமான ஒலி
வரும் என . . .ரொம்ப ரசனையா யோசிச்சு அழகா செதுக்கியிருக்கிறார் . .
.
மொத்தத்துல . . . .உங்க சினி டீம் எல்லோருமே நல்லா உழைச்சிருக்காங்க . .
.
இன்னும் சொல்வேன் ஆனால் . . நான்
சொல்வதை விட அந்த படத்தை ஒரு முறையாவது பாருங்க . .
அவ்வளவு நேர்த்தி . . .28 ,நிமிடம் ஓடுது . . .இன்னும் உருவாக்கம் செய்யலாம்
பார்ட்==2,, ,, எடுக்கிற மாதிரி ஒரு முடிவை கொடுத்திருக்காப்ல . .
செம படம் . .
குறியீடு . . படத்தின் பெயர் .
.
வினோத் அவர்களுக்கு இந்த படமே மிக பெரிய குறியீடு . . . அதாவது
ஒரு .
இயக்குனர் ஆவதறகான முழு தகுதியையும் கொடுத்துள்ளது என சொன்னால் அது மிகையாகாது .
**********************************************************************************************************************************************************************
தோழர் ராஜேஷ் குமார் அவர்களின் பதிவே குறியீடு குறும்படத்தின் நிதர்சன வெற்றியை தீர்மானிக்கின்றது.
காரணம் சினிமாவில் இருக்கும் கிளாஸ்களுக்கும் (A=15% B=35% C=50%) ஒரு படத்தை மாற்றுவதன் கடினம் ஒரு இயக்குனருக்கு தெரியும்.அந்த வகையில் தோழர் ராஜேஷ் அவர்களின் பதிவை C (NORMAL AUDIENCE )பிரிவினர்களின் பதிவாக கருதுகின்றேன்.
தோழர் ராஜேஷ் அவர்களின் "குறியீடு" குறித்த விமர்சன பதிவு. எனக்கு குறிஞ்சி பூவால் தொடுக்கப்பட்ட மணிமகுடம் போல கருதுகின்றேன்.
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி தோழர் ராஜேஷ் குமார்

குறியீட்டின் சிறு விமர்சனங்கள்

குறியீட்டின் துகள்கள்.

பிரபு ஜீவன்: படம் பார்த்த பின்னர் எனக்கு ஜான் அபிரகம் எழுதிய இரண்டு புத்தகம் ஞாபகம் வருகின்றது.
முருக கண்ணன்:குறியீடு படத்தின் இசை எனக்கு ஹேராம் படத்தை ஞாபகம் வர செய்கின்றது.
சக்திவேல்:குறும்படத்தில் ஒரு மௌன உலக சினிமா
சைமன் பேட்சன்:திரைப்படம் ஆரம்பமாகும் முன்னர் இது ஒரு ரோமியோ ஜூலியட் காதல் கதை என்று ஆங்கிலம்,கொரிய, பிரெஞ்ச் மொழியில் டைடில் போடவும்.



மாறன்:இசையை தவிர, பயற்சி அற்ற ஒரு குழுவை வைத்து சர்வேதேச குறும்படம் கொடுத்த நீ (வினோத்) கட்டாய ஒரு திரை ஆளுமை தான்
பிரபு ராஜ்:அகிரோ குரோசோவா ஒரு ஓரத்தில் நடந்து செல்வது போல தெரிகின்றது
சிவா: படத்தின் பீழைகளை எழுத காகிதம் எடுத்தேன் தவறுகளை எழுத இன்று வரை காரணம் தேடி வருகின்றேன்.
ஜெபா: படமாக பார்கவில்லை,பல வண்ணம் தீட்டி ரசித்து ரசித்து வரையப்பட்ட ஒரு ஓவியமாக பார்த்தேன்.
சூசன் கோலட்ஸ்;எனக்கு கன்னடாவில் நடந்த கொலை
ஞாபகத்தில் வருகின்றது.
ராஜேஷ்:வன்முறை கூட உங்கள் மொழியில் அழகா இருந்தது




"குறியீடு" மூன்னோட்டங்கள் .

"குறியீடு" படத்தின் சில மூன்னோட்டங்கள் .

குறியீடு படத்தின் டிரைலர் https://www.youtube.com/watch?v=kBaDatuT5NA

குறியீடு உருவாக்கம் https://www.youtube.com/watch?v=hpaRBlQL8PA

குறியீடு படத்தின் பாடல் வெளியீடு போஸ்டர்https://www.youtube.com/watch?v=18o5i1ZuYJA

குறியீடு படத்தின் பாடல் https://soundcloud.com/plartform/rage-of-a-dead-dream

குறியீடு விமர்சனம் 4

குறியீடு  விமர்சனம் 4

குறியீடு படம் குறித்து தோழர் தமிழ் முதல்வன் அவர்களின் பதிவு.

சினிமா என்பது காட்சி ஊடகம். ஆனால், இன்றையத் திரைப்படங்கள் (மிஷ்கின் படங்கள் தவிர்த்து) நாடகத்தன்மையுடனேதான் இருக்கின்றன. இந்நிலையில், பேச்சுமொழி தவிர்த்து காட்சிமொழியாலேயே ஒரு படத்தை எடுக்க முடியுமென நிரூபித்திருக்கிறார் வினோத். அவரின் காட்சிமொழி அத்தனை எளிமையாக கதை சொல்கிறது. கெளரவக் கொலைக்களத்தில் அலைமோதும் காதலரின் தவிப்பை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட காதலியொருவளின் வேதனையுடன் ஊடுபாவி பின்னப்பட்டுள்ள திரைக்கதைஅருமை. அவரின் காட்சியமைப்புகள் அனைத்தும் நேர்த்தியாக இருக்கின்றன. அனைவரின் நடிப்பும் வியப்பில் ஆழ்த்தியது. வாழ்த்துக்கள் வினோத் .
"குறியீடு" வினோத் மிஸ்ரா வின் திறமைக்கான குறியீடு.
மிக்க நன்றி தோழர். தமிழ் முதல்வன் .

குறியீடு -திரையில் எதாா்த்தமும் புரட்சியும்..


                      குறியீடு -திரையில் எதாா்த்தமும் புரட்சியும்..
                                                                        ****தோழா் கனகவேல் ராஜன் பா.மு

எனக்கு இருக்கும் இணைய வசதியை கொண்டு என்னால் படங்களை எல்லாம் பாா்க்க முடியாது. அந்த அளவிற்கு நான் என் பணத்தை படத்திற்காக செலவு செய்வதில்லை.. அதில் ஆா்வமும் இல்லை..
ஆனாலும் நண்பாின் (தோழா் வினோத் மிஸ்ரா ) அவா்களின் நடமுறை அரசியல் நோக்கம் அவாின் திரை கலையில் ஒன்றுகிறதா? அல்லது வனிக நோக்கத்தில் அந்த கொள்கை கரைந்து காலாவதியாகிறதா? என்று பாா்க்க வேண்டும் என்ற ஒரு விமா்சன நோக்கத்தில் படம் பாா்த்தேன்..
தீ பந்தம் எப்படி திசையை மாற்றினாலும் தீ மேல் நோக்கி தான் எறியும் என்பதை அந்த திரை கலை உணா்த்தியது..
நான் எல்லாவற்றையும் பகிர என்கிட்ட (Internet Data) இல்லை.. இருப்பதை கொண்டு சில முக்கிய பகிா்வு மட்டும் இங்கே..
வழக்கமான சாதிய வன்கொடுமைக்கு எதிரான காதல் என்றதும்.. அந்த கதாநாயகன் வீட்டில் அம்பேத்கா் படமோ.. அயோத்தி தாசா் படமோ.. இம்மானுவேல் சேகரனாா் படமோ.. எல்.கே.குருசாமி படமோ.. காட்டி.. அந்த கதாநாயகன் ஒடுக்கப்பட்ட மண்ணின் மைந்தா்கள் சாதியை சோ்ந்தவன் என்றும்.. கதாநாயகியின் வீட்டில் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய சாதி தலைவா்கள் படங்களை காட்டி இந்த கதாநாயகி இந்த சாதி என்று காட்டுவது வழக்கம்.. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால்.. பட்டியல் இனம் VS மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் என்ற ரீதியில் மட்டும் சாதி ஆணவ கொலைகள் நடப்பதில்லை.. அது மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் VS மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் மற்றும் முற்படுத்தப்பட்ட இனம் VS முற்படுத்தப்பட்ட இனம் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனம் VS மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் என்ற ரீதில் நடக்கிறது நடந்துக்கொண்டும் இருக்கிறது.. இதை கவணத்தில் கொண்டே.. கதையின் இயக்குனாா்.. சாதி அடையாளத்தை குறிக்காமலே ”குறியீடு” யில் காட்டிய விதம் அருமை..



சாதியும் வா்க்கமும் இணைந்ததே இந்திய தமிழக சூழலில் வன்கொடுமைகளை நடக்கிறது என்பதை கதாநாயகன் வீடு ஒரு வகையாகவும்.. கதாநாயகியின் வீடு மற்றொரு வகையாகவும் காட்டி சொல்லாமல் சொல்லிய விதம் என்னை கவா்ந்த ஒன்று..
நான் மதங்கள் மறுப்பாளன் தான் என்ற போதும் திரை கலையில் பல இடங்களில் பவுத்த கருக்கள் பலீச்சிடுவதை கவணிக்காமல் இல்லை.. அது இயக்குனரின் திரை கலைக்கு கொள்கையின் சரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக பாா்க்கிறேன்.
எதாா்த்த நிலையில் காதலா்களில் ஒருவா் தலை இரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்ப்படுவதும்.. காதலா்களில் மீறி இருக்கும் மற்றொருவா் வெளியில் சதாரணமாக இந்த பெம்பளைகளே இப்படி தான்.. பாரு காதலன் படுகொலை செய்யப்பட்டுவிட்டான் இவள் உயிரோடு இருக்கிறாள் என்ற ஆணாதிக்க சிந்தனையை உடைக்க.. அந்த பெண் வெளியேயும் உள்ளேயும் மனநிலை தவறி பித்து பிடித்த நிலை தான் கால முடியும் என்றும் இறந்த காதலன் ஒரு நாள் தான் வலி.. ஆனால் காதலனை பிாிந்து வாழும் காதலியின் மனநிலையை வாா்த்தையால் அளவிட முடியாது என்பதையும் சொல்லிய அந்த பெண் கதாபாத்திரம் உணா்த்து எதாா்த்த நிலை அருமை....


எத்தனை காலம் இந்த சாதீய வா்க்க ஆதிக்க கொடுமைகளுக்கு காதலா்கள் தற்கொலை செய்யப்படுவது..மனநிலை தவற வைக்கப்படுவதும் என்ற நிலை?ஒரு புரட்சி வேண்டாமா? ஒரு முறையாவது கொலை செய்வா்களை எதிா்த்து அவா்கள் மொழியில் பேசினால் என்ன? என்ற கேள்விகளை தொடா்ச்சியாக எழுப்புகிற எங்களை போன்ற தோழா்களின் கருத்துக்களை திரையில் காட்டிய இயக்குனருக்கு ஒரு சபாஷ்..
“குறியீடு“ எதாா்த்த உலகின் திரை மொழி புரட்சியின் குறியீடு
-இது போன்ற முயற்சிகள் தொடா்ந்து எடுக்க வாழத்துக்கள் தோழா் வினோத் மிஸ்ரா..
- உன் எதிாியின் மொழியில் பதில் சொல்லாதவரை அது அவனுக்கு புாிய வாய்ப்பில்லை
தோழமையுடன்,
தோழா் கனகவேல் ராஜன் பா.மு
உங்கள் விமர்சனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழா் கனகவேல் ராஜன் பா.மு

குறியீடு விமர்சனம் - 2


குறியீடு  விமர்சனம் - 2

நான் இயக்கிய குறியீடு படம் குறித்து  இந்தியாவின் மிக சிறந்த திரைப்படம் கல்லூரியான புனே திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் பணியாற்றும் மதிப்புமிகு ஆசரியர் திரு. திவாகரன் தமிழ் சேகரன் அவர்களின் பதிவு
குறியீடு -தமிழ் சமுகத்தில் நிலவி வரும் சாதீய முரண்பாடுகளை,கதாபாத்திரங்களை பேசாமல் வைத்ததின் மூலம்,சமுதாயத்தை அப் படத்தினைப் பற்றி பேச வைத்திருக்கும் ஒரு குறும்படம்!
அற்புதமான முயற்சி-
வாழ்த்துக்கள் வினோத் மலைச்சாமி

குறியீடு விமர்சனம்: 1

குறியீடு  விமர்சனம்: 

நான் இயக்கிய குறியீடு படம் குறித்து பன்முக ஆளுமையின் வற்றா, சமுக பொருளியல் ஆர்வலர் அண்ணன் பிரபு ராஜ் அவர்களின் பதிவு.
மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கருப்பு பணத்திலோ கந்துவட்டி பணத்திலோ மதுரை சினிமா எடுக்கும் வழக்கம் இருக்கும் நிலையில் மதுரையிலிருந்தே ஒரு நல்ல மதுரை சினிமாவை உருவாக்கியிருக்கிறார் தம்பி வினோத் மலைச்சாமி.

அவர் எழுதி இயக்கியிருக்கும் குறியீடு படக்காட்சிகளை கோர்த்து ஒரு மாண்டாஜாக ஒரு குறும்படத்தை அனுப்பியிருந்தார்.வசனங்களோ சுற்றுப்புற ஒலிகளோ இல்லாமல் பின்னனி இசை மட்டும் ஒலிக்கும் இப்படத்தை பார்க்கும்போது ஐசண்டைனின் கிளாசிக்கான பாட்டில்ஷிப் பொடம்கினை பார்ப்பது போன்றதொரு பிரமிப்பு.மிகையில்லை.

ஜாதி ஆணவக்கொலையை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறார்.இப்படிப்பட்ட சமூக இழிவை எதிர்த்து குரல் கொடுக்க வினோத் போன்ற இளைஞர்கள் சரியான நேரத்தில் வந்திருக்கிறார்கள்.

தேர்ந்த ஒளிப்பதிவு,ஷாட்களை வினோத் கம்போஸ் செய்திருக்கும் விதம் ஒரு முக்கியமான படைப்பாளியின் வருகையை உறுதி செய்கிறது.நிலையான ஷாட்களில் கதாபாத்திரங்களின் நகர்வை பதிவு செய்திருக்கும் நேர்த்தியில் அசந்து விட்டேன்.

வெறும் dslr கேமராவில் ரெட் எபிக்கின் துல்லியத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.சபாஷ்.

ஒரு காலத்தில் காரைக்குடியிலும்,சேலத்திலும்,கோயமுத்தூரிலும் தான் தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டன.எல்லாவற்றையும் பிரித்து சென்னைக்கு கொண்டு போனார்கள்.இப்போது மறுபடியும் மதுரையிலும், காரைக்குடியிலும், பண்ருட்டியிலும் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன.இந்த decentralization காலத்தின் கட்டாயம்.

குறியீடு படத்தின் மூலம் வினோத் மலைச்சாமி எனும் படைப்பாளியின் வருகை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

சினிமா எனும் சக்திமிக்க போர்வாளை வைத்து பலர் முதுகு சொறிந்துகொண்டிருக்க,வினோத் மலைச்சாமி போன்ற நுண்ணுணர்வு மிக்கவர்கள் சமூக மாற்றத்தையும்,மக்களிடம் உறைந்து கிடக்கும் பொதுப்புத்தியை மாற்றவும் வந்திருப்பது மகிழ்வாக இருக்கிறது.

மிக்க நன்றி அண்ணன் 

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...