Wednesday 31 May 2017

மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை வரலாறு



மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை வரலாறு


விமான நிலையத்திற்காக நிலத்தை கையாக படுத்தும் பொது, 1978 களில் மாவீரன் மலைசாமி தலைமையில் சின்ன உடைப்பு , பெருங்குடி , அவனியாபுரம் போன்ற கிராமத்து மக்கள்.மத்திய அரசுவிடம் வைத்த கோரிக்கை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கவேண்டும் என்றனர்.


இதை முன்னால் பகுஜன் சமாஜ் கட்சியின்(B.S.P) நாடாளுமன்ற உறுப்பினர் பிரமோத் குரில் அவர்கள் ராஜா சபாவில் மதுரை விமானம்
நிலையம் பெயர் சர்ச்சை எழும்போது பேசி இருகின்றார்


இத்தகைய கோரிக்கை 1978களில் மக்கள் மத்தியில் எழும்போதும்


* 23.7.1983 அன்று மதுரை தெற்கு தாலுகா பெருங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட பட்டா நிலத்தை ஆக்ரமித்துவர்களை எதிர்த்து நடத்திய போரட்டத்தில் திரு A.மலைச்சாமி அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிபிட்ட தக்கது.

* ஆகாய விமான நிலையத்தில் டாக்டர். அம்பேத்கர் அவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் முதல் சிலை பெருமை திரு A. மலைச்சாமியையே சாரும்.பல இடர்பாடுகளுக் கிடையில் அஞ்சாமல் சிலை அமைத்தார் இதில் அவருக்கு பெரும் இழப்பு அநேகம் இருப்பின்னும் தான் நினைத்ததை முடித்து காட்டினார் திரு A.மலைச்சாமி அவர்கள் என்று இறையியல் கல்லூரியின் அன்றைய முதல்வர் கம்பர் மாணிக்கம் A.மலைச்சாமி B.A.B.L அவர்களின் வீர வரலாற்று வாழ்கை சுருக்கம் நூலில் எழுதி இருகின்றார்


பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தின்(விடுதலை சிறுத்தைகள்) சார்பாக விமான நிலையம் ஆரம்ப நுழைவாயிலில் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது.


இதுவே தென் தமிழகத்தின் முதல் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் திருவுருவ சிலை. அதை திறந்து வைத்தார் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மனைவி சபிதா அம்பேட்கர் மற்றும் அதன் தேதி 2 செப்டம்பர் 1986 திறக்கப்பட்டது.
அதற்கான தரவு தான் புகைபடத்தில் இருக்கின்றது. இதில் இருக்கும் முக்கிய பெயர்கள் அனைத்தும் அம்பேத்கர் சிலை உடைகொள்ளும் வரை கல்வெட்டுகளில் இருந்தது..
 அன்று நிறுவப்பட்ட சிலைக்கு சாதி வெறியர்களிடம் இருந்து பலவகை
எதிர்ப்பு வந்தது. அதில் ஜாதி வெறியர்கள் சார்பாக (அ) குரலாக சிலை வைக்க எதிர்ப்பை வெளிபடுத்தியவர் திரு.அய்யங்களை அவர்களே என்று ஐயா பந்தல்குடி நடராஜன் அவர்களிடம் திரு A.மலைச்சாமி கூறி இருகின்றார்.


இதுவே வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை வரலாறு.

தமிழர்களின் தொல்பாசனம் -ஒரு சிறு ஆசை

தமிழர்களின் தொல்பாசனம் -ஒரு சிறு ஆசை

சென்ற சனிக்கிழமை இந்த நூலை வாங்கினேன்

கரையாளர் உருவாக்கிய தொல் பாசனம் கூறித்தும் , அவர்கள் உருவாக்கி உலகத்தரம் வாய்ந்த நீர் மேலாண்மை குறித்தும் பேசுகிறது.

இதற்கு முன்னர் பல எழுத்தாளர்கள் கரையாளர்களை தவிர்த்தது போல அவ்வகை அரும்பணியை தான் இந்நூல் செய்துள்ளது.பொறியாளர்கள் மீது எந்த தவறும் இல்லாது தான் இந்த நூல் கூற முன்மொழிகிறது.

நேற்று தற்செயலாக ஆய்வின் அடிப்படையில் காரைக்குடி, கழநிவாசல் பர அழகன் குடும்பத்தினரிடம் விவரங்கள் சேகரித்த போது . அவர்களும் கரையாளர் இன குழுவினர்கள் தான் கழநிவாசல் பர அழகன் வாரிசுகளிடம் அலைப்பேசி வழியா பேச முற்பட்ட போது

அவர்கள் கூறிய தகவல்

ஒருமுறை மடையில் மலைப்பாம்பு இருப்பது தெரிந்தும் அதனை கத்தியால் கிழித்து கொன்று மடையத்திறந்தார் கழநிவாசல் பர அழகன்.

அவ்வகை மடைதிறந்த பின்னும் நீர் சரியாக வெளியேறாத காரணத்தால் அழகன் அவர்கள் மண்ணுக்குள் புதைந்து நீர் வெளிவரும் பாதை நோக்கி வெளிவர முற்பட இறந்தும் போகின்றார் .




இதை அறிந்த சேதுபதி மகாராஜா கழநிவாசல் பர அழகன் அவர்களின் உயிர் தியாகத்தின் வசம் இருக்கும் உண்மையான தொண்டினையும்,சக்கரைக்கோட்டை கண்மாயை வெட்டினார் என்ற காரணத்தையும் மையமாக வைத்து இறந்தும் போன கரையாளர் அழகன் அவர்களுக்கு ஆறாயிரம் ஏக்கர் நிலம் தானமா கொடுத்துள்ளார்.அதற்கான ஆதார தரவு இன்றும் வரை வாரிசு தாரர்களிடம் இருக்கிறது என்றும் தொண்டு தாட்டு நாங்க தான் மடை வேளை பார்த்தோம் என்று கூறி வருகிறார்.

இது போல ஒரு வரலாறு எனது முன்னோர்கள் வசமும் இருந்துள்ளது ...

*மண்ணுக்குள் புகுந்து சென்று எதிரியை தாக்கும் ஒரு போர் முறையை கரையாளர்கள் இம்மண்ணுக்கு வழங்கிய போர் யுத்தியாக இன்று வரை பார்க்கப்பட்டு வருகின்றது.

*60ஊர்களை பாதுகத்த கரையாளர்களுக்கு மடைத்திறப்பில் வீர மரணம் அடையும் போது அவர்களுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது என்று கூறுகிறது வரலாறு.

*மாடக்குளம் கம்மாய் மடையை கரையாளர்கள் சரியாக பராமரிப்பு வசம் ஈடுபட வில்லை என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூட நீரில் மூழ்கி போக வாய்ப்புள்ளது என்கிறது புவியில்

நீர் வெளிவரும் மடையோ அல்லது கம்மாயின் உட்புறம் 50அடி தொலைவில் உள்ள மடைக்கல்லாக இருக்கட்டும் கரையாளர்களுக்காக தான் நடப்பட்டுள்ளது. அதை மன்னர்கள் 7ஆம் நூற்றாண்டு தொடங்கி 13 வரை மடைக்கல் நிறுவும் பணியை செய்துள்ளார்கள். ஆனால் நெல் தோன்றிய காலம் தொட்டே நீர் மேலாண்மை அனைத்து நாகரிகங்களில் இருந்துள்ளது. அதை தொல்குடி கரையாளர்களே பராமரிப்பு செய்து வருகின்றனர்.

இப்படி கரையாளர்களை தவிர்த்து ஒரு தமிழ் நிலத்தின் வரலாற்று உள்ளது என்றால் அது தமிழர்களுக்கு ஒட்டாத நாகரிகமான வரலாறாக தான் இருக்க முடியும்.

Saturday 6 May 2017

தனி இட ஒதுக்கீடும் தேவேந்திர குல வேளாளர்களும்

தனி இட ஒதுக்கீடு எவ்வகை விடிவு .

மருத்துவர் கிருஷ்ணாசாமி அவர்கள் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை எதன் அடிப்படையில் முன்வைகின்றார் என்பதை முன்வைத்து ஒரு
சிறு பதிவு

தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைக்கப்படும்  பள்ளர்கள்
நீர் நிலைகள் அழிய தொடங்கியதும் தென் தமிழகத்தில் உழவு அழிய ஆரம்பித்து விட்டது.அதாவது கைகளை விட்டு உழவு நகர்ந்து சென்று விட்டது இதில் ஒரு ஒரு மாவட்டத்திற்கு ஏற்ப உழவு தொழில் மாற்றம் கூட இருக்கலாம். இனி படித்தால் தான் உணவு என்ற நிலைக்கு பள்ளர்கள் சென்று வருடங்கள் ஆகிவிட்டு. அதாவது 5 டீகேட்ஸ் ஆகி விட்டது  ஐம்பது வருடம் ஆகி விட்டது

பள்ளியில் தனி இட ஒதுக்கீடு

அரசு பள்ளியில் கோட்டாவை வைத்து இடம் வாங்க தேவை இல்லை
சத்துணவு அனைவருக்கும் சமம்,  பஸ் பாஸ் கூட அப்படியே தான் BC,MBC,SC க்கு SCHOLAR SHIP வசதி 6வது வகுப்பில் இருந்தே தொடங்குகின்றது.
அவசியம் இன்றிய நிலையில் அனைத்து பள்ளர்களும் தங்களின் குழந்தைகளை அரசோ அல்லது தனியார் பள்ளிக்கு அனுப்பி விடுவர்
ஆகா மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது தேவை தானா என்பது இனி அரசு பள்ளிகளில் தனி சாதி முத்திரையில் கொண்டு வரும் போது மட்டுமே தேவைப்படும்

டெண்டரில் தனி இட ஒதுக்கீடு

மொத்தம் முப்பது அமைச்சகம் இருக்கின்றது அதில் ஆதி திராவிட நலத்துறையில் கூட டெண்டர் எடுக்க TENDER CONTRACT எடுக்க தனி இட ஒதுக்கிடு தேவைப்படாது.பிறகு மற்ற 29 அமைச்சகம் சொல்ல தேவையே இல்லை பணம் தான் அடிப்படை தேவை அப்படி இருந்தும் செக் வர மூன்று மாதம் கூட ஆகும் அது கூட தனிப்பட்ட திறமை இருந்தால் மட்டுமே.

 வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு

இதில் இரண்டு வகை உள்ளது ஒன்று அரசு பணி (ORGANIZED SECTOR ) தனியார் பணி(NON ORGANIZE SECTOR) தனியார் பணிக்கு தனி இட ஒதுக்கிடு தேவைப்படாது.அரசு பணியில் மட்டுமே தேவைப்படும் இன்று தேவேந்திர குல வேளர்கள் எத்தனை நபர்கள் தனியார் பக்கம் சென்றனர் என்று கணக்கில் அரசு பணியை விட குறைந்து மூன்று மடங்கு அதிகமகா தான் இருக்கும்
அப்படி அரசு வேலை என்றாலும் அடிப்படை தேர்ச்சி அடைந்தே உள்ளே வரவேண்டும். அது தனி நபரின் கடினமான உழைப்பை பொருத்து சாத்தியாமே


அரசு பணிகளில் தனி இட ஒதுக்கீடு தரும் நன்மை 

* அரசு பணியில் நீங்கள் சொல்லும் தனி இட ஒதுக்கீடு எதற்கு பயன்படும் என்றால் காவல் துறையை தங்கள் துறையாக மாற்றிய சாதிகளோடு ஒரு சரிசமா நிலையில் நிறுத்தும்

*நான் ஒருவன் அவங்க அத்தனை பேர் என்னால் என்ன செய்ய முடியும் என்பதை உடைத்து எரியும்

* இதனால் காவல்துறை அத்துமீறல்கள் பத்து ஆண்டுகள் கழித்து குறையும்
போட்டி போடா முடிந்த அரசு துறைகளில் மட்டும் ஒரு மாற்றம் அடையும்.என்று கூட சொல்ல முடியாது. அரசே திடீர் என்று 1989 கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டம் போல எதாவது திடீர் சட்டம் அமல்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றது.

அதுவும் மத்திய அரசு வேலை என்று வந்தால் உதாரணம் SHIP CAPTAIN அல்லது ,விமான ஓட்டுனர் மற்றும் பல மத்திய அரசு வேலைகளை எந்த நிலையில் தனி இட ஒதுக்கீடு பயன்படும்

டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தனி  ஒதுக்கீடு குறித்த விளக்கம் 

 அரசியலில் தனி இட ஒதுக்கீடு

பட்டியில் சாதியில் இருக்கும் போது தனி தொகுதி என்ற பெயரில் தமிழகத்தை ஆளும் இரண்டு திராவிட கட்சியின் வசம் 44 தொகுதிகள் உள்ளது . அதில் தென் மாவட்டத்தில் எப்படியும் இரண்டு கட்சிகளில் சேர்த்து ஒரு 20 பள்ளர்கள் வெற்றிபெறுவார்.அதுபோக கூட்டனி என்ற பெயரில் பட்டியலின காட்சிகள் சேரும்போது அதிக பட்சம் 10 இடம் வரை தொகுதிகள் பேசப்படும். அதில் வெற்றி பெற்றால் 10 பள்ளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். இது நடக்காத பச்சத்தில் ஒருவேளை அது வெற்றியாக இருக்கும் போது பத்து சட்டமன்ற உறுப்பினர் உள்ள ஒரு கட்சி சமகாலத்தில் குறைந்தது பரமக்குடி என்ற அரச பயங்கரவாதத்தில் இருந்து தப்பி இருக்கும்.இதில் வாயே திறக்காத திராவிட பள்ளர்களை பேச வில்லை அதாவது திராவிட கட்சியில் இருந்துகொண்டு பேசாத பள்ளர்களை கூறுகின்றேன்.

இப்படி பட்டியில் சாதியில் இருந்து வெளியேறி தனி இட ஒதுக்கீடு என்று வரும்போது தனி தொகுதி என்பது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விடுபடுவோமே. அப்படி விடுபட்டால் எத்தனை தொகுயில் தனித்து வெல்லமுடியும் அல்லது பாரதிய ஜனதா போன்ற தேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்தால் எத்தனை தொகுதி பெரும்பான்மையை பெறமுடியும்.ஒரு வேலை பொன்னர் ஒரு தொகுதியில் வென்று மத்திய அமைச்சரக வளம் விட்டார், தமிழிசை சட்டமன்ற தொகுதியில் ஒரு கணிசமான ஓட்டுகளை வாங்கிவிட்டார் என்ற அனுமானம் கூட இருக்கலாம் அதில் தவறு இல்லை.

புதிதாக பட்டியில் சாதியில் இருந்து வெளியேறி தனி இட ஒதுக்கிடோடு வெளிவந்த சமூகத்திற்கு பூத் வேலை பார்க்க கூட ஆள் வரமாட்டார்கள் இது தான் இன்றும் கூட நிலை.அது போல் பொன்னார் நாகர்கோவிலில் வெல்வதற்கு காரணம் அங்கு சிறுபான்மை இன மக்கள் மத்தியில் போட்டி இருந்து அதாவது இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் இடையே. தேவேந்திர குல வேளாளர்கள் வசம் இருந்து தனி இட ஒதுக்கீடு சாதி கட்சி பெயரில் போட்டி வருபோது எத்தனை தொகுதியை வெல்லா முடியும். ஓட்டப்பிடாரத்தை சங்கம் வைத்து வென்றோம் என்று பழைய எடுத்துகாட்டை கூறினாலும். இன்று நிலை வேறு கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியின் நிலையில் இருந்து வெளிகொனரவில்லை மக்களின் வெளிபாட்டை ஒரு அனுமனாக எடுத்து கொள்கின்றேன்.இந்த நிலையில் தனி இட ஒதுக்கிடு நமது மக்களுக்கு எவ்வாறு உதவும்.

ராஜ்ய மள்ளர் கட்சியின் கண்டனம்

சங்கமும் தனி இட ஒதுக்கீடு

தேவேந்திர குல வேளாளர் வசம் இருக்கும் சங்கம் தனி இட ஒதுக்கீடை எவ்வாறு அணுக முடியும். சங்கம் கட்சிகளான பிறகு சங்கத்திற்கு என்று எந்த வேலை இருந்து இல்லை உதாரணமாக தை மாசம் நாடாகும் ஊர் கூடி பொங்கல் விழா நிகழ்ச்சி மற்றும் கோவில் திருவிழாகள் இன்றைய நிலையை இருந்து சொல்கின்றேன்.

ஒரு முறை எனது நண்பரிடம் பேசும்போது அவர் கூறியது ஒரு திராசு டாக்டர் அமர்ந்து இருப்பார் மறுதிராசு சாத்தூர் 18பட்டியும் டாக்டரின் எடைக்கு ஏற்ற பணத்தை கொடுத்தோம் என்று கூறினார்.. அக்காலத்தில் புதிதாக வருபவர்களுக்கு தேவேந்திர குல மக்களுக்கு பணியாற்ற பொருளாதாரம் கொடுக்க முன்வந்த சங்கம் இன்று ஏன் இல்லை. அல்லது அச்சங்கம் ஏன் வேறு நிலைக்கு செல்லவில்லை அப்படி ஓப்பிடும் போது எனக்கு “பிறந்தமண்” என்ற டியூஷன் சென்டர் மட்டும் ஞாபகம் வருகின்றது. அதவும் மதுரையில் நடந்த காரணத்தால்.

இப்படி திடீர் என்று தனி இட ஒதுக்கீடு என்று நாம் வெளிவருபோது உழவு தொழிலுக்கு மாற்றாக வேறு தொழிலை சங்கம் முன்மொழியாத போது அடுத்து வரும் தலைமுறைக்கு கல்விக்கு மேல் என்ன மாற்று இருக்கின்றது வேலை இல்லாமல் இருக்கும் சகோதர்களுக்கு மாற்றும் தொழில் என்ன ...

ஒரு சிலர் கூறுவர் நாடார் இல்லையா என்று நான் பயின்ற சமூகபணியில் கூட நாங்கள் நாடார்களை பற்றி படித்தது உண்ட அவர்கள் முன்னேற்றம் அடைய அடிப்படை காரணம் உழைப்பு மட்டும் அல்ல மிகவும் வழுவான சங்க அமைப்பு அதாவது நாடார் மகாஜன் சங்கம் என்றே இருந்தது.
அவர்களை போல தேவேந்திர குல வேளாளர்களும் கடின உழைப்பாளர்களே ஆனால் அக்கடின உழைப்பை அறுவடை செய்ய இன்று வரை சங்கமும் இல்லை தொடர்பும் இல்லை (NETWORK). தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நாடார்கள் உருவாக்கி நூறு வருடம் ஆகின்றது என்ற தகவலை தொடர்பு படுத்தி பார்க்கவேண்டும்..

உலகம் முழுவதும் இருக்கும் பௌத்தத்தைம் சங்கம் தான் உக்குவிகின்றது.அப்படி இருக்க குலத்தொழில் கைவிட்டு போன பிறகும் சங்கமும் புதுப்பிக்கப்படுமா என்ற சந்தேகத்தில் இருக்கும்போது மாற்று தொழிலுக்கு சமூகத்தை உக்குவிக்காத போது எந்த நம்பிக்கையில் தனி இட ஒதுக்கிடு உதவும் என்று அனுமானிக்க முடியும்.

 கலையும் தனி இட ஒதுக்கீடு

கலை என்பது ஒரு சமூகத்தின் உயிர் நாடி. கலை வளரும்போது மக்களும் வளர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அது உக்குவிக்க பாடவும் இல்லை, வரலாற்றில் இருந்து புதுமை அடையவும் இல்லை.அதற்கு காரணம் தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் வீழ்ச்சியே. இதற்கு ஒரு உதாரணம் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நுற்றாண்டுக்கு பிறகு வருடம் தோறும் நடக்கும் தலித் கலைவிழா நிகழ்வு நன்றாக சென்ற போது பறையர்கள் அண்ணன் திருமாவளவன் அவர்களின் பாடல் ரேடியோ வழியாக ஒலிக்க கூறினர் பள்ளர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பாடலை ரேடியோ வழியாக ஒலிக்க கூறினர்.

இந்த மோதல் சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் பாடகி சின்னபொண்ணு திடீர் என்று மேடையேறி அண்ணன் திருமாவளவன் அவர்களின் பாடலை பாடினார் அது மிகபெரிய கலை மோதலை ஏற்படுத்தியது. அந்த மேடையில் பாடிய சின்ன பொண்ணு அவர்கள் அடுத்த ஆண்டு இலங்கை சென்று தமிழ் ஈழ பாடல் பட சென்றுவிட்டார் . அன்றைய நாளில் பள்ளர்கள் கலையில் இருந்தும் வெளியேறினார்கள் அதன் பிறகே நாங்கள் தலித்துகள் அல்ல என்று கோஷம் தென்மாவட்டம் எங்கும் அதிகமாக பரவ ஆரம்பித்து .

இப்படி ஒரு நிகழ்வை எனக்கு கூறியவர் அந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். கலையை நம்பி இருந்த பள்ளர்களின் வாழ்வு என்ன ஆனது அதை ஏன் முன்னேடுக்க வில்லை.இன்று அவர்கள் ஏதேனும் அமைப்பு சாராதொழில் குழுவின் அடிப்படையில் இவர்களும் வருட உதவி தொகை வாங்கி இருக்கலாம். ஆனால் இதை காரணம் காட்ட நினைப்பவர்கள் இதற்கு தான் நாங்கள் வெளிவர நினைக்கிறோம் என்று பழுத்த பழம் போல கூறலாம். ஆனால் எனது கேள்வி அது அல்ல.அன்று இந்த நிகழ்வுக்கு பிறகு டாக்டரின் தலையீடு மிக முக்கியம் அல்லவா அன்றிய சூழலில் தலித் கலைவிழாவில் பங்குபெற்ற இரண்டு குழுவாக இருந்தவர்கள்.

இன்று நான்கு குழுவாக மாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனால் இன்று அவர்களை தனி இட ஒதுக்கீடு கொடுத்ததும் கூட மீட்க முடியாத நிலையில் உள்ளனர்.இந்த ஒப்பிடு சரிவர பொருந்தி இருக்காது என்று கூட ஒருசிலர் கூற முடியும் ஆனால் கலையின் தொடர்பில் இருந்து வெளிவந்து விட்டோம் என்ற வருத்தம் தான் இனி தனி இட ஒதுக்கீடு தருகின்றோம் கலையை வளர்ப்போம் என்று கூறினாலும் அது அதிக சப்தம் உள்ள இடத்தில் கத்தி கத்தி பேசுவதற்கு சமம்.

இப்படி ஒரு சமூகத்திற்கு தேவையான கலை, அரசியல், சங்கம், டெண்டர் ,அரசு பணி,கல்வி கூடங்கள் என்று எதிலும் முன்னுக்கு பின் முரண்பாடாக இருக்கும் தனி இட ஒதுக்கீடு எவ்வகையில் தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்வியல் மாற்று நிலைக்கு சாத்தியமா.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது எங்களின் சமூக பணியில் PUSH AND PULL FACTOR என்று சமூக அணுகுமுறை உள்ளது அதன் விளக்கம் வாழ்வாதார தேவைக்கு  மாற்று பாதை தேடி நகர் புறம் நோக்கி தள்ளவும் படுகின்றோம், ஈளுகவும் படுகின்றோம் திராசு இரண்டும் சரியானநிலையில் இல்லாத நேரம் சுழல்


அதற்காக இந்த கருத்தை முன்மொழிந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை அவ்வளவு சாத்தியமகா நினைத்து விடவும் முடியாது அவரின் அரசியல் ஆளுமையும், களப்பணியும் சிம்மசொப்பனத்தின் தரவுகளே சென்ற ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் வெங்காயம் விலைவாசி குறித்து பேசினார் அதை பெரிதாக கருதாத தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் .அடுத்தநாள் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் வெங்காயம் விலைவாசி குறித்து பேசியபோது தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் அரசியல் நுணுக்கத்தை தமிழக மக்கள் உணர்ந்தனர்.

.இப்படி பண்முகம் கொண்ட ஒரு அரசியல் தலைமை சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆறு காரணியாயை உணராமல் எப்படி தனி இட ஒதுக்கீடு கேட்க முடிந்து.அதன் பின்னே இருக்கும் அரசியல் காரணங்களுக்கு நான் செல்ல விரும்பவில்லை. இப்படி சமூகம் கேட்பார் அற்று இருப்பதால் தான் வெளிமாநில உடுறுவல்கள் மக்களின் அரசியல் தேவை அறியாமல் உள்நுழைகின்றது.

டாக்டர் கிருஷ்ணசாமி என்ற அறிவிஜீவி தலைமைக்கு ஒரு உன்னதமான அரசியல் முகம் தமிழ் நாட்டில் இருக்கின்றது. அதுவே பல தலைமுறை சொல்ல போதுமானது புதிய பூசல்கள் சமூகத்திற்கு தேவையற்றது என்பதை அன்பை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை நேசிக்கும் தனிமனித கருத்தாக்கம் அதில் நானும் ஒருவன்.

இது ஒரு அரசியல் அணுகுமுறை தான் எவ்வகையில் தனி இட ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர்களுக்கு உதவும்  என்று தீர்மானிக்கும் தருணம்.இந்த வகை ஒதுக்கீடு சமூகம் எழுச்சி கண்டாலும் தாழ்வு
நிலைக்கு சென்றாலும் அதில் அனைவருக்கும் பங்கு இருக்கின்றது. வறுமையை சேர்ந்தே அனுபவிப்போம் .பெருமையையும் சேர்ந்த அனுபவிப்போம்.

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...