Thursday 27 October 2016

தலித் பேந்தர் ஆப் இந்தியாவில் அண்ணன் திருமாவளவன்

தமிழ்நாட்டு தலித் அரசியலின் வரலாற்று பக்கங்கள்...

தலித் பேந்தர் ஆப் இந்தியா இயக்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் A.மலைச்சாமி அவர்களோடு இயக்கத்தில் பணியாற்றிய அண்ணன் திருமாவளவன்.

Dr.அம்பேத்கார் கல்வி கழகம் Regds.No.161/85

இக்கல்வி கழகத்தை திரு.மலைச்சாமி அவர்கள் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 6ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு நிறுவினார்

திரு.மலைச்சாமி அவர்கள் +2வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு 18.6.89 முதல் 28.6.89 வரை நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை தலை சிறந்த ஆசிரியர்களை வைத்து மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடத்தியது
 மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும்.
   தொகுப்பு; தா.ஞானசேகரன்



Tuesday 4 October 2016

கவிதையான ராம்குமார்

                                                          "பேத நிலை"

கறுத்த உடலை                                                                                


சுற்றிய வெள்ளைத் துணி.

புழல் சிறை எழுதிய எண்ணிற்கும்

பிணவறையில் எழுதிய எண்ணிற்கும்

நல்லவேளை ஆணவம் இல்லை

அப்பாவியின் வாய்ச் சொல்

நீதிக் கேட்காமல்

தேவதையின் திராசு

நுற்றாண்டு கழிய சமமாக நிற்க்கின்றது

கறுப்புத் துணியால்

கண்ணை கட்டி.

இனி ராம்குமார் சொல்வான்

"எனக்கு ஜாதி இல்லை"

நான் பேத நிலையில் மட்டுமே

இருக்கின்றேன் என்று



                                                               "கறுத்த மகான்"

மகாத்மா காந்தி
உடுத்திய
வெள்ளை நிற
ஆடையில்

மீனாட்சிபுரம்
வந்தது ஒயிட் வேன்

ஆப்ரேஸன் கிரீன்
போல ஆப்ரேஸன் முத்து
என்று கூறி ஆப்ரேஸ ராமில் வந்து முடிய

அறுக்கப்பட்ட கழுத்தை
தன் பக்கம் தற்கொலை என்று ஞானம் தேட

அன்று
மீனாட்சிபுரத்தில்
வெளியேறிய ஒயிட் வேன்

(திரைப்படத்தை போல)
சில நாட்களுக்கு பிறகு

வீடு செல்ல
ஆசைப்பட்ட
ராம்குமாரை

காந்தியிடம்
இருந்து வெள்ளை
ஆடை உறுவப்பட்டு

மீனாட்சிபுரம் நோக்கி வந்தான் அதே ஒயிட் வேனில்

இந்த முறை அவன் உடலில் மூச்சு மட்டுமே பஞ்சம்

ஒயிட் வேன் அதே ஒட்டு விட்டை வந்து அடைய

ஊரே கண்ணீர் வடித்து சொன்னதாம்

வெள்ளை ஆடை உடுத்தி வந்துவிட்டான் மீனாட்சிபுரம் மகாத்மா என்று

இன்று எங்களுக்கு ராம்குமார் ஜெயந்தி


              ***************சென்று வா ராம்குமார்*************
                                               
                                               தம்பி ராம்குமாருக்காக 

                                                புத்தம் சரணம் கச்சாமி
                                     நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்
                                                 தர்மம் சரணம் கச்சாமி
                                     நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்
                                                 சங்கம் சரணம் கச்சாமி
                                    நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்

                                தம்பி ராம்குமாருக்காக இன்று எங்கள் வீட்டில் 
             உள்ள சித்தார்த்த கௌதம் புத்தருக்கு நான் ஏற்றிய அஞ்சலி தீபம்









                                            23 ஜூலை 1999

பச்சை இலைக்கு உரிமை கேட்க
சுயம் இழந்து, பசி மறந்த கூட்டம்.


இரு தீவை இணைக்கும்
துடிப்பில் ஒன்று சேர்ந்து கடக்க,

காக்கி போர்த்திய இரும்பாயுதம்
தனது கரம்கொண்டு,

பச்சை ரத்தத்தையும்.
ஈகையின்றி பரணியின் மிதக்க செய்து.

கடலோடு கலந்த பரணியில்
வர்க்க கூலிகளின் உடல் மிதக்க,

பாம்பே மேட்குடிக்கு, மொழியாள அடிநாதன்
குருதியால் தாரைவார்த்தான் தாமிரபரணியை .

!!!!!!செங்குருதி தியாகிகளுக்கு வீரவணக்கம் !!!!!!!


Monday 3 October 2016

கீழடி மடைச்சியும் - அவனியாபுரம் மடை குடுபர்களும்

எனது சொந்த ஊரான மதுரை அவனியாபுரத்தில் உள்ள பள்ளர் மேட்டுத் தெருவின் ஆதி குடிகளான மடையார் குடும்பர்களோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்ற கீழடி பற்றிய பதிவு


கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்  -ஏர் மகாராசன்


மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது.
மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கும் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் 6 ஆம் அகழாய்வுப் பிரிவினர் முதல் கட்ட அகழாய் வைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையத் தொல் நிலத்து அடையாளப் பதிவுகளைக் கண்ணுறும் நோக்கில் மக்கள் தமிழ் ஆய்வரண் சார்பாகப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியத் திருவாளர்கள் அன்பு தவமணி, முத்துக்கிருசுணன், இரவிச்சந்திரன் ஆகியோருடன் நானும் கடந்த 25.6.2016 இல் பெருங் களம் நோக்கிப் பயணமானோம்.

ஏர்.  மகாராசன்
மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடந்தன.

பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில் தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.

தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.
kizadi
சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொண்டன.
வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாட்டு மலையிலிருந்து முடிவுறும் இராம நாதபுரம் வரையிலும் ஆற்றின் இருபுறங்களிலும் 280க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள், பழங்கால வாழிடத் தொல்லியல் நிலப்பரப்பாகக் கீழடி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள், மடைச்சி என்னும் பெயர் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட மண் கலயமும் ஒன்றாகும். இப்பெயர் வேளாண் குடிகளோடு தொடர்புடையது.

பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர். பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.
kizadi-3
பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்த போது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போது தான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு. இத்ததைய வரலாற்று மீட்டுருவாக்கப் பணியில் தொல்லியல் துறையினருக்கு மட்டும் பங்கில்லை. நம் அனைவரின் சமூகக் கடமையும் கூட.

கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய தடயங்கள் நிறைந்த அந்நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் கூடாது. கீழடியில் அகழாய்வு செய்து கொணரும் முதன்மையான பொருட்கள் யாவற்றையும் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்கும் போது தான் சிதையாமலும் திருடப்படாமலும் திருத்தப்படாமலும் இருப்பதற்கு ஓரளவு உறுதி சொல்ல முடியும்.

அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வரலாற்றைப் பாதுகாப்பதும், மீட்டமைப்பதும், நேர் செய்வதும் நம் எல்லோரின் கடமை.
ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.

கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.

கீழடி அகழாய்வுக் களத்தில் தொல்லியல் சான்றுகள் குறித்து விளக்கப்படுத்திய அகழாய்வு உதவித் தகைமையர் திரு வசந்த் அவர்களுக்கு நன்றி.



ஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். பெண்மொழி இயங்கியல் நூலின் ஆசிரியர்.


 https://thetimestamil.com/2016/09/27/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%8a/

மடை குடும்பர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம்


இது மடை குடும்பர்களின்  வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த பதிவு 

மடைக்குடும்பர்களே (தேவேந்திர குல வேளாளர்களே) மதுரையின் ஆதிக்குடிகள் என்பதற்கான மேலும் ஒரு சான்று .....

எழுத்தாளர் மகாராசன் அவர்களின் பதிவில் இருந்து ஒரு சில வரிகள் .

கீழடி:
"மடைச்சி" வாழ்ந்த
தொல் நிலத்தில்
எம் காலடித் தடங்கள்.

மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்கள்

புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறு மொழி

கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு,தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள், மடைச்சி என்னும் பெயர் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட மண் கலயமும் ஒன்றாகும்.

இப்பெயர் வேளாண் குடிகளோடு தொடர்புடையது. பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

*குறிப்பு : மடைக்குடும்பர் வகுப்பை சேர்ந்த ஆண்களை மடைத்திறக்கும் "மடையர்" என்றும் பெண்களை "மடைச்சி" என்றும் அழைப்பர்.




இன்று ஆகஸ்ட் 3 2016 சென்றுவந்த அழகர் கோயில் பயணம்

அதிகமான மாடு வளர்ப்பதை தங்களின் வாழ்வாதாரமாக
 கொண்ட வேளான் விவசாய குடிகள்


தங்களின் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு எந்த நோய்களும் தொற்றிக் கொள்ளாமல் இருக்க

வீடுகளில் தனியாக கண்று வளர்த்து அழகர் கோயிலுக்கு அழைத்து சென்று கழுத்தில் பூமாலை காட்டி 18ஆம்படி கருப்பணுக்கு சுடம் ஏற்றி தாங்கள் வளர்த்த மாடுகளை விட்டுவிடுகின்றனர்.



 செப்டம்பர் 17 2016 வேளாண் தொழிலின் அடிப்படை தேவை நீர் மேலாண்மை. அவ்வகை கம்மாய்களிலும் ஏரிகளிலும் தேக்கப்பட்ட நீரைத் திறப்பவர்களே மடை வேலை செய்பவர் என்றும், நீர் கட்டி என்றும், நீர் பாய்ச்சி என்றும், மடைக்குடும்பர் என்றும் வரலாற்றில் பொரிக்கப்பட்டு வந்துள்ளது.




 புகைப்படம்: ஏரி மற்றும் கம்மாயிகளில் தேங்கி நீர் மடை வழியாக வெளியேறும் இடம், மூன்றாம் புகைப்படம்:கம்மாய் அல்லது ஏரியின் நிலப்பரப்பு

இயக்குனர் மணிகண்டனின் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை சுருக்க விமர்சனம்

குற்றமே தண்டனை

தமிழ் சினிமாவின் மிக மிக அழகிய நகர்வு இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள்

ஒரு நிமிடத்தில் பாலுமகேந்திரா இளையராஜா கூட்டனி நாம் கண்முன்னே வந்து செல்லும்



*இத்தனை நாள் ராஜா ஏன் இந்த இசை கதம்பங்களை
மறைத்து வைத்தார்

*குற்றம் கடிதலுக்கு பிறகு live sound மிகவும் நல்ல முறையில் தமிழ் சினிமாவில் பொருந்தி இருக்கின்றது

* நாசர் கதாபாத்திரம் தோன்றும் காட்சி எங்கும்
"உடையில் பொதிந்த உடல் போல"
பௌத்தம் குறித்தே எல்லா இடங்களிலும் பேசுகின்றது


ஆண்டவன் கட்டளை

*கிராமத்தை விட்டு வெளியேறி, வெளிநாடு செல்ல வேண்டும் என்று நகரத்தில் தேங்கி நின்றவர்களின் கதை

* ப்ரோக்கரிடம் மாட்டிக் கொள்ளும் தென் மாவட்ட மக்களின் அவல நிலை

* அவல நிலையில் இருந்து மிகவும் ஆழமான சல்லடையில் தேடி எடுக்கப்பட்ட தகவல்கள்




* நகர்புறங்களில் இருக்கும் ஒரு கொடுஞ்சிறையான அகதிகள் முகாம்

* உடையில் தொடங்கி ஆணுக்கு எதிராக பெண்ணியம் பேசிவரும் ரித்விக்கா சிங்
* அரச மரத்தின் கீழ் இருக்கும் புத்தராக ஞாயம், அன்பு , உண்மை,அரவனைப்பை மட்டும் பேசிவரும் நாசர்.

* தன் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி எல்லாப் பாடங்களிலும் கதாப்பாத்திர மாற்றம் தந்துக்கொண்டே இருக்கும் மக்கள் செல்வனின் ஒவ்வறு அசைவும் நம் கண்களை சிவப்படைய செய்கின்றது

* ஒரு செயலில் எதார்த்த மனிதனின் நிலைப்பாடையும் , அவன் எடுக்கும் முடிவை மட்டுமே பேசி வரும் இயக்குனருக்கு எத்தனை முறை தான் நன்றிகள் சொல்ல முடியும்

********.வாழ்த்துக்கள் மணிகண்டன் சார் ********

திரு. மலைச்சாமி அவர்களின் களப்பணியும் அதை குறித்த ஆவண பதிவுகள்

செப் :14 , ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியலின் முன்னத்தி ஏர், திரு. மலைச்சாமி அவர்களின் களப்பணியும்அதை  குறித்த ஆவண பதிவுகள்

* விமான நிலையத்திற்காக நிலத்தை கையாக படுத்தும் பொது, 1978 களில் மாவீரன் மலைசாமி தலைமையில் சின்ன உடைப்பு , பெருங்குடி , அவனியாபுரம் போன்ற கிராமத்து மக்கள்.மத்திய அரசுவிடம் வைத்த கோரிக்கை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்கவேண்டும் என்றனர்.



இதன் வெளிப்பாடகவே பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தின் சார்பாக விமான நிலையம் ஆரம்ப நுழைவாயிலில் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுவே தென் தமிழகத்தின் முதல் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் திருவுருவ சிலை அதை திறந்துவைத்தார் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மனைவி சபிதா அம்பேட்கர் அவர்களால டிசம்பர் 6 1982 திறக்கப்பட்டது.

* 1980களில் கல்லூரிகளால் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் வருகை பதிவு (Attendance )80சதவித கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர்கள் எம் ஜி யார் அவர்கள் ஒரு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்தார் .
இச்சட்டத்தை கண்டித்து சுமார் 5000 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு மதுரை கல்லூரி மாணவர்களை ஒருங்கினைத்து பெரும் கண்டன ஊர்வலம் நடத்தினார் இந்த நிகழ்வுக்கு பின்னர் அச்சட்டம் தமிழக அரசால் பின்வாங்கபட்டது.



* தமிழகத்தின் "முதல் சாதி ஒழிப்பு மாநாடு"
தேவேந்திர குல மக்களின் அடையாள நாயகன் தேக்கம்பட்டி பாலசுந்தராசு அவர்கள் ஒருங்கிணைக்க. தென்னாட்டு ஸ்பாடக்ஷ் தியாகியார் இம்மானுவேல் சேகரன் தலைமையில் "உலக ஆசான்" புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் அம்மாநாட்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

* 1982 தமிழகத்தின் "இரண்டாம் சாதி ஒழிப்பு மாநாடு" பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தால் நடத்தப்பட்டது. அம்மாநாட்டு தலைமைதாங்கினார் மாவீரன் மலைச்சாமி இம்மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மனைவி சபிதா அம்பேட்கர் மற்றும் ராமதாஸ் அத்வலே பங்கேற்றனர். அம்மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தின் மாநில மாணவர் இளைஞர் அணித்தலைவராக செயல்பட்டார் என்பது வரலாற்று சிறப்பு .

இம்மநாட்டில் 10,000 அதிகமான ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.



தன்னுடைய மாணவ பருவத்தில் மதுரை மாவட்ட வாடிப்பட்டி தாலுகா, மாணிக்கம்பட்டி என்ற கிராமத்தில் ஜாதி ஹிந்துக்கள் வாழும் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்பதினால் காட்டு இராஜா என்னும் தலித் இளைஞனை மிருகத்தனமான ஜாதி இந்துக்கள் கொன்றார்கள் இந்த மிருகத்தனமான செய்கைகளை கண்டித்தும்,கொலை செய்யப்பட்ட காட்டு இராஜாவுக்கு நீதி கோரியும் திரு,மலைச்சாமி அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு 1983 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மதுரை கட்டபொம்மன் சீலையிலிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் வரை.சுமார் பத்தாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட கண்டன பேரணியை ஒழுங்கு செய்து அப்பேரணிக்கு தலைமை தாங்கியும் சென்றார் மதுரை மாநகரமே குலுங்கியது.தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு முதன் முதலில் போராட்ட வடிவில் குரல் கொடுத்தவர் என்ற சிறப்பும் திரு,மலைச்சாமியையே சேரும்,


பேந்தர்களின் தரவுகள் :

 திரு. மலைச்சாமி அவர்களின் தலையின் கீழ் இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் (தலித் பேந்தர்ஸ் ) பணியாற்றிய மும்பை பேந்தர்களிடம்
இருந்து பெறப்பட்ட தரவுகள்







இந்த தரவுகள் வழியாக தமிழ் நாட்டு  தலித் பேந்தர்கள் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி தமிழ் மக்கள் வாசிக்கக்கூடிய மும்பை போன்ற இடங்களும் தங்களின் இயக்கம் வைத்து அரசியல் செய்தனர் என்பதை தெரிந்துக் கொள்ள முடிகின்றது 


                                 ஆவணம் "தலித் விடுதலை" நாளிதழ்                                 
 பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் நிறுவனர், 
வழக்கறிஞர் A. மலைச்சாமி B.A, B.L.,
அவர்களின் நடத்திய மத இதழ் அதன் பெயர்
 "தலித் விடுதலை" மும்பை பேந்தர்களிடம்
இருந்து  தரவுகள் பெறப்பட்டுள்ளது.










( தரவுகள் தொகுப்பில் )

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் A. மலைச்சாமி B.A, B.L., அவர்களின் வீரவரலாற்று வாழ்க்கை சுருக்கம்.

பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் நிறுவனர், வழக்கறிஞர் A. மலைச்சாமி B.A, B.L., அவர்களின் வீரவரலாற்று வாழ்க்கை சுருக்கம்.

பிறப்பு :
மதுரை, அவனியாபுரம் பெரியார் நகரில் வசித்து வந்த திரு.அழகப்பன் திருமதி.இருளாயி தம்பதியருக்கு, 1954 ஆம் வருடம் மார்ச் மாதம் 11 ஆம் நாள் மகனாய் பிறந்தார்.

கல்வி :
ஆரம்பக் கல்வியை அவனியாபுரம் ஆரம்பப் பாடசாலையிலும் பள்ளிப் படிப்பை மதுரை தெற்குவாசலில் உள்ள கார்ப்பரேசன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று, 1973 ஆம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மதுரை வக்போர்டு கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்து, 1981 ஆம் ஆண்டு மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

திருமணம் :
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் தேதி சீர்திருத்த முறைப்படி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில், திருமணம் புரிந்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 1986 ஆம் ஆண்டு மகன் பிறந்தான்.

சமுதாய ஈடுபாடு :

பள்ளிப் பருவத்திலேயே சமுதாய ஈடுபாடு கொண்டவராக திரு.மலைச்சாமி அவர்கள் விளங்கினார்கள். பள்ளி மாணவர்களோடு இணைந்து தான் வாழும் பதிக்குத் ‘‘ தந்தை பெரியார் நகர் ’’ என்ற பெயரை வைப்பதற்கு அரும்பாடுபட்டவர். இளமைப் பருவத்தில் தந்தி பெரியார் அவர்களின் கொள்கையினால் ஈடுபாடு கொண்டு தீண்டாமைக் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்து பிரச்சாரமும் செய்து வந்தார். பிற்காலத்தில் அறிவர். அம்பேத்கார் அவர்களின் சிந்தையில் தன்னை இணைத்துக் கொண்டு தலித் மக்களின் விடுதலையில் அதிக நாட்டமுடையவராக வாழ்ந்து வந்தார். கல்லூரியில் படிக்கும் போது அனைத்துக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து ‘‘ தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர் அமைப்பு’’ என்பதினை ஏற்படுத்தி,தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பிரச்சனைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். மாணவர்களை சமுதாயப் பிரச்சனைகளில் ஈடுபட வைத்தார். மாணவர்கள் தங்களின் பிரச்சனைகளில் மட்டும்
போராடாமல் சமுதாயப் பிரச்சனைகளிலும் போராட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை மாணவ உலகிற்கு முதன் முதலில் புகுத்திய பெருமை திரு.மலைச்சாமியையே சேரும். தன்னுடைய மாணவப் பருவத்தில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டித் தாலுகா, மாணிக்கம்பட்டி என்ற கிராமத்தில், 17.1.1983 அன்று சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்பதினால் காட்டு ராசா என்னும் தலித் இளைஞனை மிருகத்தனமாக சாதி இந்துக்கள் வெட்டிக் கொன்றார்கள். இந்த மிருகத்தனமான செய்கைகளைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட காட்டு ராசாவுக்கு நீதி கோரியும் திரு.மலைச்சாமி அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு 1983, பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மதுரை கட்டபொம்மன் சிலையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேலாக கலந்து கொண்ட கண்டனப் பேரணியை ஒழுங்கு செய்து அப்பேரணிக்குத் தலைமை தாங்கியும் சென்றார். மதுரை மாநகரமே குலுங்கியது.


தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு முதன் முதலில் போராட்ட வடிவில் குரல் கொடுத்தவர் என்ற சிறப்பும் திரு.மலைச்சாமியையே சேரும். அனாதையாய் விடப்பட்ட சமுதாயம் என்பதனை மாற்றி உணர்வுள்ள சமுதாயம், உணர்ச்சியுள்ள சமுதாயம் என்பதினை மதுரை மாநகருக்கு உணர்த்தியவர் திரு.மலைச்சாமிதான். இப்போராட்டம் மதுரை தலித் மக்களின் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியத. இப்போராட்டம் முழுமையும் மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்த்தியவர் மலைச்சாமி என்பதற்கு இப்போராட்டமே சாட்சி.

பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தில் திரு.மலைச்சாமி :


புகைப்பட தரவு :  [தமிழ் நாட்டில் டிசம்பர் 6 1982 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் சாதி ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பாரதீய தலித் பேந்தர் அரசியல் இயக்கம் தமிழ் நாட்டின் மதுரை மண்ணில் தன்னை 10,000 நபர்களோடு பிரகடனப் படுத்தி தன்னை நிறுவிக்கொண்டு இன்று விடுதலை சிறுத்தையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது .

* புகைப்படகுறிப்பு :1982 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் அதில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் சபிதா அம்பேட்கர், திருமிகு .ராம்தாஸ் அத்வாலே(மகாராஷ்டிரா DPI அமைப்பு நிறுவனர்), திருமிகு மலைச்சாமி (தமிழ் நாட்டு DPI அமைப்பு நிறுவனர் ), திருமிகு விஜயராம் (வழக்கறிஞர்) அண்ணன் திருமாவளவனை DPI அரசியல் இயக்கத்திற்கு அறிமுகம் செய்தவர்.
திருமிகு.ராமராஜ் (ரயில்வே) மற்றும் திருமிகு முத்துகிருஷ்ணன் (பதிவுத்துறை).

*குறிப்பு: தமிழ் நாட்டு "முதல் சாதி ஒழிப்பு மாநாடு" தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்களின் தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் என்ற வரலாற்று பதிவும் பொறிக்கப்பட்ட ஆவணமே].


முதலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர் அமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்த திரு.மலைச்சாமி அவர்கள், 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அம்பேத்கார் அவர்களின் துணைவியார் திருமதி.சவீதா அம்பேத்கார் அவர்களின் தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் சுமார் பத்தாயிரம் பேர் முன்னிலையில் பாரதீய தலித்பேந்தர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த அமைப்பிற்கு தமிழக அமைப்பாளராகப் பொறுப்பேற்று, கரும் சிறுத்தைகளின் தலைவனாக சீரும் சிறப்புமாக இயக்கத்தை நடத்தி வந்தார். இயக்கத்தின் சார்பில் அவர் சமுதாயத்திற்கு உழைத்த உழைப்புகள் என்றும் அவர் புகழ் பரப்பும். அவர் இயக்கத்தின் மூலம் போராடிய போராட்டங்கள் பல, அவைகளுக்குள்,

வஞ்சி நகரம் ஆதிதிராவிட இளைஞர் கந்தன் படுகொலையைக் கண்டித்து நடத்திய போராட்டம் :
தீண்டாமைக் கெடுமையை எதிர்த்தான் என்பதற்காக இளைஞன் கந்தனை 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி படுகொலை செய்தனர் சாதி இந்துக்கள். இக்கொடுமையைக் கண்டித்து தளபதி கி. மலைச்சாமி அவர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி மேலூரில் மிகப் பெரிய கண்டனப் பேரணி ஒன்றினை நடத்தி வஞ்சி நகர கந்தனுக்கு நீதி கேட்டுப் போராடினார்.


மதுரையில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஷி. பாக்கியம் என்பவர் மதுரை மேலவாசலில் வாழ்ந்து வந்தவர். அப்பகுதியில் சாராய வியாபாரம் செய்பவரைக் கண்டித்தார் என்பதினால் 9.3.1988 அன்று அவர் கடத்திச் செல்லப்பட்டு மிருகத்தனமாக தாக்கப்பட்டு 13.3.1988 அன்று மரணம் அடைந்தார். இச்செய்தி தெரிந்ததும் திரு.மலைச்சாமி அவர்கள் உடனடியாக இப்பிரச்சனையில் ஈடுபட்டு ஏழை ஷி. பாக்கியத்திற்கு நீதி கேட்டுப் புறப்பட்டார். சமூக நீதிக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் போராடிய வீரர் பாக்கியத்திற்கே இந்த நிலை என்றால் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று சொல்லி மார்ச் மாதம் 30 ஆம் தேதி மிகப் பெரிய பேரணியை ஆரம்பிக்கும் போது திரு.மலைச்சாமி எழுப்பிய கோசம் காதில் ஒலிக்கிறது.



தலித் மக்களின் ஒருங்கிணைப்பிற்கு அ.மலைச்சாமியின் பங்கு :

23.7.1983 அன்று மதுரை தெற்கு தாலுக்கா பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் திரு.கி. மலைச்சாமி ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தினத்தில், தன் பெயர் வரவேண்டும், தன் இயக்கத்தின் பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்று எண்ணும் பலர் நடுவே திரு.மலைச்சாமி அவர்கள் சுயநலம் கருதாது ஒருங்ககிணைப்பிற்கு எடுத்துக்காட்டாக இருந்து விஹிஜிகி, சிறுவிவசாயிகள் நல சங்கம், பாரதி தேசிய பேரவை, அம்பேத்கார் மக்கள் இயக்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழக மக்கள் முன்னணி, கிராமிய இறையியல் நிறுவனம் ஆகிய இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு போராடி, பெருங்குடி மக்களுக்கு அந்த நிலத்தை பெற்றுத் தந்தார். இன்றும் அம்மக்கள் தலைவர் கி. மலைச்சாமியை போற்றிப் புகழ்கின்றனர்.
தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட தலித் மக்களின் சார்பாக திரு.கி. மலைச்சாமி வெளியிட்ட சுவரொட்டிகள் தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது மட்டுமன்றி அவரை கைது செய்யவும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்தையும் பொருட்படுத்தாமல் சென்னையில் தலித் தலைவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய ஊர்வலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு என்றும் தலித் மக்களின் ஒருமைப்பாட்டுக்கு என் ஆதரவு உண்டு என்று பறைசாற்றினார்.

3.8.1989 அன்று உசிலம்பட்டி வட்டம் உத்தப்புரத்தில் நடந்த சாதி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு சார்பாக அனைத்து தலித் இயக்கங்களோடு இணைந்து போராடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு.கி. மலைச்சாமி அவர்கள், இந்திய அளவிலே தலித் மக்கள் ஒருங்ககிணைக்கப்பட வேண்டும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராகவும், அதற்கான முயற்சிகளில் தளராமல் ஈடுபடுவராகவும் இருந்து வந்தார். அவருடைய சொல்லும் செயலும் ஒருங்கிணைப்பை மையப்படுத்தியே அமைந்திருந்தது.

ஆகாய விமான நிலையத்தில் Dr.அம்பேத்கார் சிலை :
தலித் மக்களின் தலைவர் அறிவர். அம்பேத்கார் அவர்களுக்கு மதுரை மாநகரில் முதலில் சிலை அமைத்த பெருமை திரு.மலைச்சாமியையே சாரும். பல இடர்பாடுகளுக்கிடையில் சாதி வெறியர்களின் மிரட்டுதலுக்கு அஞ்சாமல் தலைவரின் சிலையை அமைத்தார். இதில் அவருக்கு பெரும் இழப்பு அநேகம். இருப்பினும் தான் நினைத்ததை முடித்துக் காட்டுபவராக திரு.மலைச்சாமி அவர்கள் திகழ்ந்தார்கள். தலித் மக்களின் விடுதலையை தன் வாழ்வில் காண வேண்டும் என்றும் வைராக்கியம் அவருடைய சொல்லில், செயலில் வெளிவரும்.

Dr.அம்பேத்கார் கல்வி கழகம் Regds.No.161/85.

இந்த கல்விக் கழகம் திரு.மலைச்சாமியின் எண்ணங்களை வெளிக்காட்டும் அமைப்பாகவும் அவரின் இலட்சியத்தை பறைசாட்டும் அமைப்பாகவும் செயல்பட்டது. அதன் நோக்கங்களில் சில . . .

* தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உழைப்பது

* தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எளிதில் கல்வி கிடைக்க செய்து கல்வியின் பயனை மக்களுக்கு எடுத்துக் கூறி கல்வி கற்க தூண்டுவது.

* கல்வ கற்க வசதியில்லாத மாணவர்களுக்கு அனைத்து ரீதியிலும் கல்வி வசதி பெற உதவுவது.

* வேலைக்காக மனு செய்யும் மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் நேர்முகப் போட்டிக்காகப் பயிற்சி கொடுப்பது.

* தமிழகத்தின் மேல்நிலைப்பள்ளி மற்றும் S.S.L.C.யில் முன்வரும் தலித் மாணவர்களுக்கு பரிசு அளித்து தலித் மாணவர்களை படிப்பில் ஊக்குவிப்பது.

* பிறப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சுரண்டப்பட்டு வரும் சுரண்டலை ஒழித்து தாழ்த்ப்பட்ட மக்களின் விடுதலை காணும் பொருட்டு கல்வி ரீதியில்.அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்றவை.

இக்கல்விக் கழகத்தை திரு.மலைச்சாமி அவர்கள் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு தொடங்கினார். தன் வாழ்வு முழுவதையும் தலித் மக்களின் விடுதலைக்காகவே அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவன் திரு.மலைச்சாமி அவர்கள்.

திரு.மலைச்சாமி அவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு கடைசியாக 18.6.1989 முதல் 28.6.1989 வரை நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை தலை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தியது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
ஒருவேளைச் சோற்றுக்கே வழியில்லாத தாழ்த்தப்பட்ட மக்கள்,உழைத்திடவே ஒரு வேலை இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள்,குடிசைகளும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்,உடல் மெலிந்தாலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்,தினந்தோறும் கொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள்,
இப்படிப்பட்ட நம் மக்களின் விடுதலையில் முழு மூச்சாக ஈடுபட்டு தலித் மக்களின்க நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாவீரன், தன் உடல், உயிர், ஆவி அனைத்தையும் தலித் மக்களின் விடுதலைக்காகவே கொடுத்த திரு.கி. மலைச்சாமி அவர்கள், 14.9.1989 அன்று தலித் மமக்களை தவிக்கவிட்டு இயற்கை எய்தினார்.

தலைவன் தலித் மக்களின் விடுதலைக்காக விட்டுச் சென்ற பாதையில் நாம் நம்மை இணைத்துக் கொண்டு செயலாற்றுவோம்! இதுவன்றோ நாம்

மலைச்சாமிக்கு சமர்ப்பிக்கும் அஞ்சலி!
உறுதி கொள்வோம் விடுதலை அடைய!
உறுதி கொள்வோம் விடுதலையை நம் ஆயுளில் காண!
உறுதி கொள்வோம் இரத்தம் சிந்தியாவது விடுதலை அடைய!
உறுதி கொள்வோம் ஒன்றுபட
உறுதி கொள்வோம் போராட
உறுதி கொள்வோம் புரட்சி செய்திட!
ஜெய்பீம்!

வாழ்க மலைச்சாமி புகழ்! வளர்க அவர் தம் சேவை!

Thursday 7 April 2016

புகைப்படம் குறியீடு குறும்பட வெளியீட்டு வீழா



மார்ச் மாத பௌர்ணமி நாள், மார்ச்- 23- புதன்கிழமை-பங்குனி-10யில் மக்கள் அலையில் சங்கம் என்ற "நவபோதி பண்பாட்டு மையம்" துவக்க வீழா மற்றும் சங்கத்தின் கலை படைப்பாக "குறியீடு குறும்பட வெளியீட்டு வீழா".
உலகளாவிய பௌத்த நெறியை மீண்டும் எழுச்சியடைய மருத நிலமாம் நெல்லையில் "நவபோதி பண்பாட்டு மையம்" துவக்க நிகழ்வை எமது சங்கமாக வைத்து. குறியீடு குறுடத்தை வெளியீடுவத்தின் பொருட்டு "வேந்தர்" குல இனத்தவகளின் கலை படைப்பாக நெல்லை மண்ணில் நிறுவியுள்ளோம்.
ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு கரமாக நெல்லையில் தம்ம போதனை என்ற அதிர்வலைக்கு சாட்சியாம் அளிக்கும் புகைப்படங்கள்











S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...