Monday 4 December 2017

பழைய மதுரையின் புதிய கோட்டையும் நீர் நிலைகளும்


மதுரை கோட்டையும்,நீர்நிலைகளும்.

 இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'.. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில்
அமைந்த எழில் நகரம்.

திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து,
பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில்
"கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே மதுரை சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. மேலும்
 மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது..


மதுரை கோட்டை அமைப்பு:

கோட்டை வரலாறு


 பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது. மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வணிகன் ஒருவன் அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான். 

 மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான். தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான் 

ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான். மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோட்டையின் ஒரு அங்கமான மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்டது நகரம்
 கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது.அதில் ஆமைகளும் மீன்களும் முதலைகளும், குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருக்கும் அளவில் அமைத்தான். "மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. .

மதுரையை உருவாக்கிய சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர்களின் வீழ்சிக்கு பின்னர் . இக்கோட்டையை மதுரையின்  தலைநகராக கொண்டே இஸ்லாமியர், நாயக்கர் ஆண்டு வந்தனர்.
இக்கோட்டையை பாதுகாக்கும் விதமாக பாண்டியர் கோட்டையைச் சுற்றி வெளியே நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை மிக வலிமையாக கட்டப்பட்டது.

மதுரை கோட்டைக்கு வெளிப்புறமாக   நீர் நிறைந்த  அகழி இருந்தது என்பதை
 வெளிக்கொணரும் விதமாக இன்றைய நேதாஜி ரோட்டிலுள்ள ராஜா பார்லி எதிரேயுள்ள தெருவிற்கு பாண்டியன் மேற்கு அகழித் தெரு என்றும்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  ,திருமலைநாயக்கர் அரண்மனைகிட்ட தெற்கு அகழித் தெரு என்றும் இருக்கிறது.

மதுரை கோட்டையில் ஆங்கிலேயே கொடி

மதுரை நாயக்க மரபின் கடைசி ஆட்சியாளர் மீனாட்சி அரசி ஆவார்,
மீனாட்சி அரசியின்  காலம் 1732-1736 ஆகும். இவர் விசயரங்க சொக்கநாதரின் பட்டத்தரசி . ராணி மங்காமல் போல போதிய அரசு ஆளுமை மீனாட்சி அரசிக்கு இல்லாததால் ஆர்க்காட்டு நவாப்பின் படையடுப்பு தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்தன.

Thanks to DR,Na.Ra.Kr.KALAIRAJAN
 வரைப்படம்:அரசி மீனாட்சி வீழ்ச்சி பின்  வெளியீட்ட மதுரையின்  வரைபடம்  

1736 இல்  ஆர்க்காட்டு நவாபின் மருமகன் சந்தா சாகிப் மீனாட்சியுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு திருச்சி கோட்டையைக் காப்பதாக கூறினான்.அதற்காக ஒரு கோடி வரை கப்பம் பெற்றுக்கொண்டு மீனாட்சி அரசிக்கு துரோகம் விளைவிக்க இதனை தாங்க முடியாத அரசி மீனாட்சி தற்கொலை செய்து கொண்டால் .உடனே சந்தாசாகிப் திருச்சி, திண்டுக்கல், மதுரையைப் பகுதிகளை தன்வசம் ஆக்கி கொண்டான் மீனாட்சி அரசி மரணத்துடன் மதுரை நாயக்கர்  அரச மரபு முடிவுக்கு வந்தது

 அதன் பின் மராத்தியர்களோடு போர் நடந்து  கி.பி.1743இல் மதுரை மீண்டும் ஆர்க்காட்டு நவாபின்ஆட்சியின்கீழ் வந்தது. ஆர்க்காட்டு நவாப் முகமதலியின் ஆட்சியில் கான்சாகிப் என்ற ஆளுநர் கி.பி. 1759முதல்1764வரை மதுரையைத் தலைநகராகக்கொண்டு மதுரை,திருநெல்வேலிப் பிரதேசங்களைச் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

ஆனால் 1764 இல் மதுரையை நிர்வாகித்து வந்த யூசப்கான் துரோகம் காரணமாக துக்கிலிடப்பட்டான்மதுரை கோட்டை வீழ்ந்து அதில் ஆங்கிலேய கொடி பறந்து. 1790-ம் வருடம் மார்ச் 6-ல் மதுரை மாவட்டம் உதயமானது.முதன்முதலாய் ஒருங்கினைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக  (அ)முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார்.

கி.பி.1790 முதல் மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றது பின்னர் கிழக்கிந்திய கம்பெனியினர் நம் நாட்டை கைப்பற்றி தங்களது நிர்வாகத்தின் கீழ்வந்தது எனலாம்.

நன்றி சிவசாமி கார்த்திகேயன்
  வரைப்படம்:மதுரையை ஆண்ட ஆங்கிலேய அரசால் வெளியீடப்பட்ட மதுரையின்  வரைபடம் -

இந்த வரைப்படம் வரைந்த பிறகே மதுரை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்  அதன் காரணம் வைகைகையேடு தொடர்பில் இருந்து பூர்விக கிராமமும் அதன் தொடர்பில் இருந்த  தென்கரை நோக்கி நீர் நிலைகளும்  , மக்கள் நடமாடும் பிரதான சாலைகளும், மதுரை கோட்டையின் வரைப்படத்தோடு உட்பொருத்தப் பட்டுதிருகின்றது

 ஆங்கிலேயர் ஆட்சி முன் நாயக்கர் ஆட்சியில் கோட்டையின் தென் திசை
 பிள்ளையார் பாளையம் என்றும் தனி பாளையாமாக பிரிக்கப்பட்டு இருந்துள்ளது அதற்கான தகுந்த சான்றாதாரம்   மதுரை கோட்டையின் தென் பகுதியில் (south gate இன்று தெற்குவாசல்) அருகில் இருந்தே வில்லாபுரம் பெரிய  கம்மாயும் அதன் இறுதி நீர் பாதையில் பயணிக்கும் கிருதாமல் நதியும்  சான்றாக இருக்கின்றது .இன்றும் அங்கு கரைபுரண்டு ஓடிய நீர் நிலைகள் இருக்கும்அளவு கல் தூண் போல வரலாறு நிறுவப்பட்டு இருக்கின்றது.அது போல வரைபடத்தில் மதுரையின் தெற்கு இறுதியாக பூர்விக கிராமமான   அவனியாபுரம் இருந்துள்ளது.[1]

 குறிப்பு:
 1.வில்லாபுரம்  பெரிய கண்மாய்  அணைக்கட்டு என்றே சொல்லவேண்டும் காரணம் ஒரு சராசரியாக ஒரு அணைக்கட்டு ஆயிரம் ஏக்கர் கொண்டது ஆனால் மதுரை இருக்கும் மடக்குளம்.மற்றும் அவனியாபுரம் கண்மாய் 1200,1500 ஏகர் கொண்டது ஒரு தனி ராஜ்ஜியம் அமைக்க போதுமான நீர் நிலைகள் கொண்டது
 மதுரை வங்கியசேகர பாண்டியனின் ஆட்சி  வைகையின் தென் திசை
நோக்கி இருந்தமையாலும். நீர் நிலைகளை பாதுகாத்து வந்த மக்களை
 "மதுரை தென்பாண்டியர்கள்" என்றும் சங்ககால பாண்டியர்கள் என்று
 பல ஆவணம் வழியாகா உறுதி செய்ய முடிகிறது. மேலும் அந்த சங்கிலி தொடர் இலங்கை வரை நீள்கிறது என்பதே  தரவுகள் வழியா தெரிகிறது .

 கோட்டையை சுற்றி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே,
ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில்
 இருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார்.மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், "அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் "நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், "அல்லங்காடி' எனப்பட்டன.


 கடல்கோளால் அழிந்த பண்டைய மதுரை  எங்கே ?


                                   மதுரை நகராம் வில்லாபுரம்,
                        மடையர்கள் வாழும் அவனியாபுரம்.

                                 எதுக்க நின்னு கார் அமர்த்தும் 
                                       ஏதும் கெட்ட பெரும்குடி

                        
   மடையர்கள் - நீர் நிலைகளில் மடைதிறப்பவர்கள்.

என்பது  இன்றைய தெற்குவாசல் தொடங்கி  அவனியாபுரம் (பிள்ளையார் பாளையம்) எங்கும் பேசப்பட்டு வந்த பழமொழி.

மதுரை நகர் என்றால் அது வில்லாபுரம் என்ற வரையாரை  இருந்து இருக்கின்றது.சங்க காலத்தில் இருந்து   ஓடிய கிருதாமல் மற்றும் வில்லாபுரம் பெரிய கண்மாயில் இருந்து வெளிவரும்  நீர் மணலால்
ஆனா எல்லை கோடுகளை வரையுரை செய்து இருக்கும் .இராமஸ்வரம் இலங்கை மத்தியில் இருக்கும் தோண்டப்பட வேண்டிய சேது கால்வாய்க்கு பல வருடமாக ஓடிய கடல் மண் சேர்ந்து போல. N.M.R பாலம் வரும் வரை.
 ஒரு நேரத்தில் தெற்குவாசலில் இருந்து அவனியாபுரம் செல்ல  ஊரைச்
சுற்றி வரும் சிரமமான சாலையை மக்கள் பயன்படுத்தி இருகின்றார்கள்.

ஒட்டுமொட்ட  அவனியாபுரத்தில்  இருக்கும் நீர் நிலைகளை பாதுகாத்தும்
நீர் மடை திறப்பவர்கள் வாழ்ந்த பகுதி அவனியாபுரம்.எவ்வளவு பெரிய மாமழையும் எதிரே நின்று கார் (மழை) அமர்த்தும் கண்மாய்களுக்கு கொண்டு செல்லும்  அல்லது மழையோடு மோதி  பாரம்பரிய மரபு கொண்ட ஒரு நாட்டின்  அதிகமான நபர்களை கொண்ட பெருங்குடி  .பெருங்குடி என்றால் மன்னர்களோடு ஒப்பிட்டு பார்க்க முடியும்.இதை தான் பழமொழி நமக்கு வெளிப்படுத்தி இருக்கின்றது. 
.  
 சங்க கால இலக்கியத்தில்


                                 மாடமலி மறுகின் கூடற் குடவயின்,

                                                                          திருமுருகாற்றுப்படை



சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் மாடமலி மறுகின் 
கூடற் குடவயின், என்ற பாடல் வரியில் மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றம்  என்ற வரியின் பொருள் திருப்பரங்குன்றத்தின் இருப்பிடம் குறித்து நக்கீரன் பாடல் உணர்த்துகிறது.

அந்த காலத்தில் மதுரை என்பது திருப்பரங்குன்றத்தின் மேற்கில் இருந்தது என புலப்படுகிறது. ஆய்வாளர்கள் கருதுகோளின் படி பழைய மதுரை என்பது அவனியாள்புரம் எனப்படும் அவனியாபுரமாக இருந்திருக்க வேண்டும்.


தமிழ் அறிஞர்கள் விளக்கம் 

தமிழ் அறிஞர் ரா.இளம்குமரன் :

திருமுருகாற்றுப்படை கூற்றின்படி அவனியாபுரம் என்பதே பழைய மதுரையாக(பழங்கூடல்) இருந்திருக்க  வேண்டும்

சுவாமி முருகன் அருளால் வீடுபேறு பெற விரும்புகிறவர்கள், திருமுருகன் உறையும் இடங்களையும்,அவற்றுக்குச் செல்லும் வழிகளையும் விவரித்துக் கூறுவதாக திருமுருகாற்றுப்படை அமைந்துள்ளது. 

அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம்வரைப்படமற்றும் சமணர் அடையாளமும் 


வாழும்போது வீடுபேறு பெறுதல் வேண்டும் என்பதை நக்கீரர் வலியுறுத்துகிறார். மாமதுரைக்கு மேற்கே வயல்,வளமிக்க இயற்கைச் சூழலில் திருப்பரங்குன்றம் இருப்பதை கூடல் குடவாயில் என்கிறார் அவர். ஆகவே அக்காலத்தில் மதுரை என்பது பரன்குன்றின் கீழ் இருந்தது புலப்படுகிறது. ஆற்றின் திசையும் ஊரின் இருப்பும் காலப் போக்கில் மாறக் கூடியது. ஆனால் மலையின் இருப்பு என்றும் மாறதது. 

ஆகவே பழைய மதுரை என்பது நக்கீரர் கூற்றுப்படி அவணியாள்புரம் எனப்படும் அவனியாபுரமாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் கருத்தாகும் என்று தமிழ் அறிஞர் ரா.இளம்குமரன் கூறுகின்றார்

 பேரறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் :

இன்று அவனியாபுரம் என்ற பகுதி இருக்கிறது. இது திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கில் இருக்கிறது. எனவே சங்ககால மதுரை அவனியாபுரம் பகுதியில் இருந்திருக்கலாம். இதனால் வைகையும் சங்க காலத்தில் அவனியாபுரத்தை ஒட்டி சென்றிருக்கலாம் என்று பேரறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.


வைகையின் போக்கு மாற்ற கண்டு இருக்க வாய்பே இல்லை தமிழ் அறிஞர்களின் குற்றுக்கு கேள்வி எழுவது சாத்தியம் தான் நெல்லை தாமிரபரணி அதன்போக்கை மாற்றி இருப்பதை நாம் மறந்து விட முடியாது.


ந.பாண்டுரங்கன்.

வில்லாபுரம் :

கோட்டையில் வில் வீர்களாகப் பணிபுரிந்தவர்கள் வில்லாள் என பட்டனர்.அவர்கள் வாழ்ந்த பகுதி இது எனக் கூறப்படுகின்றது.

அவனியாபுரம் :

 இங்கு கோட்டை சுவர் இருந்து என்றும் மதுரை மீனாட்சியின் பாலகி வடிவ சிலை  இங்கு உள்ள கோவிலில் உள்ளது மேலும் இப்பகுதியிலும் ஒரு மீனாட்சி சுந்தரேசுவர்கோவில் உள்ளது  என்று கூறுகின்றார்


பழைய மதுரை பாதையில் இருக்கும் கோட்டை சுவர்


ராணி மங்கம்மால் சிலையும் கல்வெட்டும்

அவனியாபுரத்தின் கிழக்கே உள்ள வல்லானந்தபுரம் என்ற ஊரில் கி.பி 1693 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆனந்த அனுமார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே சிதைந்த நிலையில் கோவிலின் அதிட்டான பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் வல்லப சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊர் பெயரும்,வல்லப விண்ணகரம் என்ற பெருமாள் கோவில் பெயரும் இடம்பெற்றுள்ளது.


இங்கு துர்க்கைக்கான கோயிலும், அதற்கான நிலகொடைகள் குறித்தும், பிரவுவரி திணைக் களத்து முக வெட்டி அதிகாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டை தேவன் பணையன் என்ற அண்டை நாட்டு தச்சன் செதிக்கியுள்ளதாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோவில் முன் உள்ள கல்வெட்டு தூணில் சங்கு, சக்கரம், நாமம் செதுக்கபட்டுள்ளன. இக்கோவிலை கட்டியது ராணி மங்கம்மாள் என்பதும் தெரியவருகிறது. இக்கோவிலின் பெயர் அனுமார் ஆழ்வார் என கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

நண்பர் உதயகுமார் கண்டுபுடித்த ராணி மங்கம்மால் சிலை



இக்கோவில் அருகில் அவரால் கட்டப்பட்ட அலங்கார பிள்ளையார் கோவில் தற்போது இல்லை. ராணி மங்கம்மாள் தனது முத்தியப்ப நாயக்கருக்கு புண்ணியமாக கோவிலை கட்டியுள்ளார் என்பது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. அனுமார் கோவில் எதிரே உள்ள கருடதம்பத்தின் அடிப்பகுதியின் பெண்ணரசியின் உருவம் வணங்கியநிலையில் உள்ளது. இந்த பெண்ணரசியின் தலையில் கிரீடம், இடையில் வாள் மற்றும் பாதம் வரை ஆடை என வடிவமைக்கபட்டுள்ளது. இந்த உருவச்சிலை ராணி மங்கம்மாள் சிலை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இன்று நாம் வசிக்கும் புதிய மதுரைக்கும்  பழைய மதுரையை  அறிமுகம் செய்ய தரவுகள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அதில் ஒன்றே இந்த ஆய்வு .இவை அனைத்து மீட்டுருவகத்தை தகர்க்கும் வண்ணமாக மண்ணின் உண்மையான அசைவுகளை வெளிபடுத்தும் விதமாக இருக்கின்றது.அதில் வெளிப்பட்ட ஒன்றே கீழடி.அன்று அவனியாபுரத்தில் சைவமும் வைவமும் தங்களை மாற்றி மாற்றி தினித்துக்கொள்ள ஆசைப் பட்டது என்றால் அங்கு ஒரு மத கோட்பாடு வசம் தகர்கவே  முடியாத ஆன்மிக வாழ்வியல் இருந்துள்ளது.அந்த வாழ்வியல் பழைய பாண்டியர்கள் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் என்பதே.

அந்த பாண்டியர்களை கண்டுக் கொள்ளவும் உணர்ந்து கொள்ளவே இந்த ஆய்வு .....

 துணைநின்ற தரவுகள் 

*காளைராசன் .கி (மின்தமிழ்)

*தினமணி தரவுகள்
* சிவசாமி  கார்த்திகேயன் புகைப்படம்
 *மதுரை மாவட்டத் தொல்லியால் கையேடு

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...