Thursday 30 November 2017

தமிழ் ஈழ கரையார்



தமிழ் ஈழ கரையார்

ஈழ தேசத்தின் கரையார் ,தமிழ் தேசத்தின் கரையா பள்ளர், 

கடைய பள்ளர்,கடையன் (ர்) ,காராளர்  என்றும் கரையாளர் கூறுவது நடைமுறை


இதன் அடிப்படையில் ஊர் பெயர்கள் கடையநல்லூர் பொருத்தி பார்க்க முடிகிறது அங்கு பெரும்பாலும் தேவேந்திர குல வேளார்கள் வாழ்ந்து வருகின்றார்கள்

ஒற்றுமையை மையமாக வைத்துதொடர் தரவுகள் கிடைத்த வருகின்றது.

மனிதனுக்கு முதல் அறிவியல் சிந்தயை நெல் பாதுகாப்பது அல்ல
நீரை பாதுகாப்பது செய்ததேஆகவே தான் நீரின் அருகே மக்கள் முதலில் குடியேற , அவர்கள் வணங்கி வந்த நட்டார் தெய்வங்கள் அருகே கோவில்கள் தங்களின் இருப்பை தக்கவைத்தனர்

அவ்வகை நீர் நிலைகள் குறித்த அறிவியல் சிந்தனை கொண்டவர்கள் 


புகைப்பட தரவுக்கு 
நன்றி திரு இராமலிங்க அவர்களின் தகவலை திரு திருமலை அவர்கள் பகிர்ந்தமைக்கு

கடையன் - மடையன் ஆனான், கடையர் - மடையர் ஆனார்கள்

ஆனால் ஈழத்தில் கரையார் கரையாராகவே இருந்து வருகின்றார்கள்

 இந்த பெயர் மாற்ற  காரணம்  ஈழ பௌத்தத்தின் நீடிப்பு தன்மையும்,
தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சியுமே

 "கரையார்" சிறு குறிப்பு : 

 சங்ககாலம் தொட்டு ஓடும் ஆற்றில் கால்வாய் அமைத்து அதன் வழியாக நீர் நிலைகளுக்கு நீரை கொண்டுவந்து அதில் இருந்து  பல நீர் நிலைகளுக்கு   தொடர்பை உருவாக்கியவர்கள் #"கரையார்கள்" . 



 அறிவியல் சிந்தனை கொண்டு நீர் நிலைகள் மத்தியில் கட்டமைத்து
தமிழரின் பாண்டிய நாடும் சோழ நாடும் தமிழ் பவுத்த நீர் நாகரிகமே.
 அதன் அடிநாதமாக இதுவரை நாம் கண்டசங்க கால நாகரிகம் அனைத்தும் நீர் நிலையை மையமகாவே அல்லது அதன் அருகே கண்டுக்கப்பட்டது.
 உதரணமாக அன்று  ஆதிச்சநல்லூர் என்பது தாமிரபரணி நீர் நாகரிகம்
இன்று கீழடி என்பது வைகை நீர் நாகரிகம் அருகே நமக்கு கிடைத்துள்ளது. இந்த சங்ககால இடங்களின் தொன்மையை நாம் அறியும் போது நமக்கு பௌத்த சமண மரபை ஒப்பிட்டு பார்ப்பது மிக அவசியம்.

(தொடரும் )





Tuesday 28 November 2017

சாஸ்தா பெயரில் பொதியப்பட்ட தமிழ் பௌத்தம்




பவுத்தம் எங்கிருந்து தொடங்குகிறது.

தமிழகம் எங்கும் பௌத்தம் நிரம்பி இருந்தது .ஆனால் புத்தர் சிலைகள் இல்லாத நிலையில் எவ்வாறு பௌத்தம் குறித்து தெரிந்துக் கொள்வது என்றால்

பொதியப்பட்ட ஒன்றில் இருந்தும், அதை அம்பலப்படுத்தும் கண்கள் வழியாக பார்ப்பது என்ற கடினமான முறை பயன்படுத்த வேண்டும்.

இதன் வழியாக (வட.தென்)இரண்டு தமிழகத்தில் எவை பௌத்தம் செழித்த தேசமாக மேல் சொன்ன முறையில் இருந்து அணுகும்போது
அதிகபட்டச பொதியப்பட்ட குறியீடுகள் அனைத்தும் பாண்டிய , சோழ வரையறைகள் உட்கொண்டவையே

அதன் அடிப்படையில்  பாண்டிய , சோழ தேசத்தின் மக்கள் எவ்வாறு பௌத்த
 வளர்ச்சிக்கு தங்களை உட்படுத்தினர் என்றும். இன்றுவரை தங்கள் கலாச்சாரம், வாழ்வியில் தொட்டு பூர்வ பௌத்தர்களாக வாழ்ந்து மக்கள் வெளிகொணர்ந்த வரலாற்று எச்சம் சாஸ்தா வழிபாடு.

 "தமிழ் பவுத்தம் சாஸ்தா வழிபாட்டு கூறுகளில் பொதியப்பட்ட இருக்கின்றது"

 கருப்பசாமி

இன்று(27 11 17 ) நீர் நிலைகள் குறித்த களப்பணிக்கு சென்ற ஊரில் பலரிடம் கேட்டேன்

ஊரின் நுழைவாயில் இருக்கும் கொண்டை வைத்த கல் என்னது என்றும்

ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் அது கருப்பசாமி , கருப்பசாமி என்றனர் 



கருப்பசாமி

மேலும் இந்த கருப்பசாமி ஊரின் வடக்கு (நுழைவாயில் ) நோக்கி இருந்தார்

ஒருவேலை இது சைவ குறியீடு என்ற முறையில் அனுக வேண்டும் என்று இருந்தேன் . ஆனால் நீர் நிலைகள் குறித்த எனது ஆய்வின் வழியாக முதல் முறை நீர் நிலைகளை ஒட்டி இருந்த பெருமாள் கோயிலை பார்க்க முடிந்தது .

எனது பயணத்தில் நீர்நிலைகளில் பெருமாள் கோவில் புதிதே ..

நிறைவு அடையாத இந்த கல் சிலையை இன்றும் மக்கள் வணங்கி வருகிறார்கள் சாஸ்தா கருப்பசாமி யாக.


 லிங்கம் குறித்த ஆய்வின் வழியாக ஸ்டாலின் தி தரும் விளக்கம்

லிங்கா> திரி லிங்கா> திரு லிங்கா>ஸ்ரீலங்கா.

லிங்க வழிபாடு என்றால் அது சைவ வழிபாடான சிவலிங்க வழிபாடு என்றே பொதுவாக நம்பப்படுகிறது. இந்து வழிபாடுகளில் பௌத்தத்தின் சுவடுகள் தென்படுவதை, வழிபாடுகளையும் சொல்லாடல்களையும் மறு ஆய்வுகளில் ஈடுபடுத்தி காணமுடிகிறது. பண்டிதர் துவக்கிவைத்த அந்தப் பார்வையில் லிங்கம் என்பதைப் பற்றி பார்க்கலாம். அவரிடமிருந்தே துவங்கலாம்.

லிங்கத்தின் மூலவாக்கியம் 'அங்கலயம்' என்கிறார் பண்டிதர். அதுவே பிறகு திரிந்து 'லய அங்கம்' என்று ஆகி, பிறகு லிங்கம் என்று ஆனதாக கூறுகிறார் அவர். அதற்கு என்ன அர்த்தம் எனில், எரிக்கப்பட்ட உடலின் சாம்பல் என்கிறார் பண்டிதர். புத்தரின் சாம்பல் ஏழரசர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும், அதைக் கொண்டு போனவர்கள் புத்த பெருமானின் அஸ்தியை, அந்தந்த பகுதிகளின் ஓரிடத்தில் வைத்து வணங்கி, அங்கே தூண்களைக் கட்டியதாகவும், வழிப்பட்ட அந்த தூண்கள்தான் லிங்கம்(அங்கலயம்>லய அங்கம்) எனப்பட்டது என்பதாகவும் போகிறது பண்டிதரின் ஆய்வு.

நண்பர் மதன் அவர்களின் புகைப்படம்


அண்ணல் அம்பேத்கரும் தம்முடைய 'புத்தரும் அவரது தம்மமும்' நூலிலும் புத்தரின் அஸ்திப் பிரச்சனையை விளக்குகிறார். அஸ்திக்கு பலரும் உரிமை கோரியபோது, துரோணர் என்பவரின் ஆலோசனையின்படி, புத்தரின் அஸ்தியை எட்டாக பிரித்து அளிக்கப்பட்டதாக கூறுகிறார். (பண்டிதர் ஏழு பங்கீடெனச் சொல்கிறார். அண்ணல் எட்டு என்கிறார். ஒருவேளை ஒரு பங்கு சங்கத்தைச் சேர்ந்திருக்கலாமோ!) அவ்வாறு பகிரப்படும் போது, அஸ்தி எனும் புத்தரின் உடல் சாம்பலைப் பெற்ற துரோணர், 'அதன் மீது நான் ஒரு ஸதூபத்தை(தூண்) எழுப்புவேன்' என்று கூறியதாக அண்ணல் கூறுகிறார். எனவே, இதன் மூலம் இரு அறிஞர்களும் லிங்கம் எனும் தூண் வழிபாட்டுக்குள் பௌத்த மரபு இருப்பதை விளக்கிச் செல்கிறார்கள் என்று அறியமுடிகிறது.

அப்படி வணங்கப்பட்ட தூண்களே வட மொழியில் லிங்கா எனப்பட்டது என்றும் அறிகிறோம். அசோகர் காலத்து தூண்களும் இதையே உறுதி படுத்துகின்றன. அசோகர் காலத்திலிருந்துதான் பரவலாக லிங்கத்தில் சின்னங்களும் உருவங்களும், எழுத்து வடிவங்களும் பொறிக்கப்படும் வழக்கம் வந்திருக்கவேண்டும்.


நண்பர் திருமலைகுமார் அவர்களின் முகநூல் வழியாக கிடைத்த புகைப்படம்

அப்படி பொறிக்கப்பட்ட திரிசரணம் கூறும் லிங்கம் திரி லிங்கம் என்றாகி, திருலிங்கம் என்றும் ஆகி, திருவுக்குச் சமமான வடகிருத எழுத்தான 'ஸ்ரீ'யுடன் இணைந்து ஸ்ரீலங்கா என்று ஆகியிருக்க வேண்டும்.(இது எனது யூகம். ஆதாரம் கிடைத்தால் மகிழ்ச்சி). திரிக்குறள் திருக்குறளாக ஆனதைப் போல திரிலிங்கா>திரு லிங்கா>ஸ்ரீலங்க ஆகியிருக்கலாம் அல்லவா. முந்தையக் காலத்தில் இலங்கை என்றும் லங்கை என்றும், லங்காச் சேரி என்றும் அழைக்கப்பட்டதும் இதனுடன் பொருந்துகிறது. ராவணக்கதையில்கூட ராவணன் லங்கேஸ்வரன் தானே.

மேலும், பண்டிதர் கூறும் அங்கலயம்>லய அங்கம் மட்டுமல்லாமல் லிங்கா என்பதற்கு கிடைக்கும் வேறு அர்த்தங்களும் பௌத்தத்துடன் ஒன்றிப் போகிறது. லிங்கா என்பதற்கு 'வளம்' என்றும் ஓர் அர்த்தம் வருகிறது. வளம் என்பது வளர்ச்சியின் மூலச் சொல். துக்கத்தை கடப்பதே வளர்ச்சி என்கிறது பௌத்தம். மனத்தை, அறிவை வளப்படுத்துவதன் மூலமே துயரங்களை வெல்லமுடியும் என்பது பௌத்தத்தின் அடிப்படை. இப்படி மனவளத்தோடு செயலும் வளம் பெறும் போதுதான் துயர்கடந்து, இந்த வாழ்வு பேரின்பமான நிப்பானத்தை அடைடைகிறது. அதுவே வளர்ச்சி என்கிறது பௌத்தம் . எனவே, வளம் எனும் பொருள் தரும் லிங்கத்தில் பௌத்த அர்த்தம் இருக்கிறது என்பதில் உண்மையுண்டு.





அடுத்ததாக வரும் அர்த்தம் இன்னும் முக்கியத்துவமானது. அதாவது, வடமொழியில் லிங்கம் எனறால் 'விளைவு அல்லது முதற்காரியத்திலிருந்து உருவாகும் ஒன்று' என்கிற அர்த்தமும் வருகிறது. இந்த அர்த்தத்தை, இப்படி பௌத்த மொழியில் விளக்கலாம்: 'விளைவுகளே இயங்கியல். ஒன்றின் இயக்கமே அடுத்தடுத்த இயக்கத்திற்கான வினைத் தொடர்ச்சி'. இதையே பௌத்தம் தமது 'அநிச்ச' என்னும் சொல்லின் மூலம் விளக்குகிறது. எனவே, இந்த அர்த்தமும் பௌத்தத்தோடு ஒன்றிணைந்துவிடுகிறுது.
இவற்றை வைத்துப் பார்ப்போமானால் லிங்க வழிபாடு என்பது பௌத்தத்திலிருந்து பார்ப்பனியத்தால் களவாடப்பட்டு, பார்ப்பனிய வழக்குப்படி திரிபுக் கதையின் மூலம் லிங்கத்தை சிவ-பார்வதி உடலுறுப்புகளுடன் இணைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம்.
இறுதியாக....

ராமாயணக் கதையில், ராவணனனைக் கொன்றதால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் கழிய வேண்டுமென்று, ராமதாஸ் எனும் அனுமார் குரங்கால் லங்காச் சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட(களவாடப்பட்ட) லிங்கத்திற்கு ராமன் பூஜை செய்து பரிகாரம் கண்டதாக ஒரு கதை உண்டு. இந்தக் கதை எதைக் கூற முயல்கிறது?
புத்த தன்ம கோட்பாடுகள் பொறிக்கப்பட்ட தூணான லிங்கத்தை, பார்ப்பனியம் களவாடி வந்ததைத்தான் சொல்கிறது என்று விளங்கிக்கொள்ளலாமா.


 கலியுடையார் சாஸ்தா

இன்று(27 11 17 ) நீர் நிலைகள் குறித்த களப்பணிக்கு சென்ற ஊரில் கரைமேட்டில் ஒரு கோவில் இருந்து சிறுவடிவில் பிள்ளையார் இருந்தார் 
பெரியவடிவில் கலியுடையார் சாஸ்தா சிலை இருந்தார்
கலியுடையார் சாஸ்தா


இந்த கலியுடையர் சாஸ்தா இந்திரன் போல தேவேந்திரன் தோற்றம் இருந்து 

 மேலும் இந்த சாஸ்தாவை இந்திரன் என்று சொல்ல சிலைக்கு முன்பு யானை இருந்துமற்றும் வீட்டு விலங்குகள் இருந்தது. இதை வைத்து இந்திரன் என்று உறுதிபடுத்த முடிந்து 


                                  தேவேந்திரன் தேவா+இந்திரன்
                   புத்தரின் பல பெயர்களில் தேவா ,இந்திரனும் ஒன்றே   

பண்டிதரின் தரவுகள் :

 

புகைப்பட ஒப்பிடு :


 
முத்துபட்டன் 

இன்று(26 11 17 ) நீர் நிலைகள் குறித்த களப்பணிக்கு சென்ற ஊரில் நீர் நிலைக்கு தொடர்பில் இருந்த ஓடையை  ஒட்டி முத்துபட்டன் கோவில் இருந்து



அந்த கோவிலில் அருகே திறந்த வெளியில் தொட்டு பார்க்கும் நிலையில் 
ஒரு கல் சிலை இருந்தது அதை உற்றுநோக்கும் போது தலையில் கொண்டையும் காதும் வளர்ந்து இருந்தது . அருகில் வணங்கி கொண்டு இருக்கும் நபர் தலை துண்டிக்கப்பட்டு இருக்க நமக்கு வரலாறு சிலை வழியாக வெளிக்கொணர உதவுகின்றது, 

"நீர் நிலைகளில் தமிழ் பவுத்தம், சாஸ்தா வழிபாட்டு கூறுகளில் பொதியப்பட்ட இருக்கின்றது"

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...