Tuesday 15 December 2015

புத்தவேடு விஹாரில் உள்ள சோழர் காலத்து புத்தர் சிலை.

மானுடமும் , 
இயற்கையின் அதிகார 
ஆட்சியில் பிறந்து, 
சமத்துவதை நோக்கி 
பயணிக்கிறது. 

நமோ புத்தாய.

சாக்கிய முனி புத்தர் பெருமான் கால்பதித்த புத்தவேடு புனித பூமிக்கு சென்ற சமயம் .

                                  புத்த விஹாரில் உள்ள  சோழர் காலத்து புத்தர் சிலை.




புகைப்படம்: புத்தர் இலங்கைக்கு செல்லும் முன்னர் தமிழ்நாட்டில் இறுதியாக தியானம் செய்த இடம் இன்று குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் புத்த விஹாராக செயலப்பட்டு வருகின்றது.



இரண்டாம் புகைப்படம் மூன்றாம் கட்டளை புத்த விஹாரில் உள்ள சோழர் காலத்து புத்தர் சிலை இச்சிலை   இன்று அனைவரும்  வணங்கி செல்லும்  நிலையில் உள்ளது.  அனைவரும்  .

"Flood 2015"

"Flood 2015" 

வெள்ள நிவாரணம் பணிக்காக மதுராந்தகம் பயணம் செய்த சமயம். ஊரை விட்டு ஒதுங்கி இருந்தது இருந்த ஒரு பழங்குடி கிராமம் அதை நோக்கி நகர்ந்த போது தான் தெரிந்தது அந்த கிராமத்தில் உள்ள 60 நபர்களும் (குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள்) இரண்டு நாளாக யாருமே உணவு உண்ணவில்லை என்றும் அவர்கள் இருளர் பழங்குடி வகுப்பு என்றும் தெரியவந்து.

இந்த கிராமத்தில் "Flood 2015" முலம் நான் படம் புடித்தது குடியிருப்புகளின் உருவ தோற்றமே.அதில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆடுகள், கொக்கரித்து கொண்டு இருக்கும் சேவல்,
தவழ்ந்து ஓடும் நீரின் ஓட்டம்,இதுவே நாம் கண்ணனுக்கு தெரிந்த சென்னையை விட, கண்ணனுக்கு தெரியாத பல சேரிகள் , கிராமங்களில் உள்ள விளிம்புநிலை மக்களின் அவல நிலை ..

உங்கள் கண்பார்வையை கேட்பார் அற்று கிடக்கும் கடலூர் மற்றும் பல கிராமங்கள் நோக்கி திருப்ப இந்த சிறு முயற்சி தான் "Flood 2015"

Technical back bone: Sony cyber shot digital camera (14.1 mega pixel),editing in cyber link.

"Flood 2015"  மௌன ஆவணப்படம் பார்க்க கீழ் உள்ள லிங்கை அழுத்தவும் 


ஆய்வு : தாய்மத வரலாற்றைத் தந்த 2015 கனமழை

பூர்வக்குடிகளின் தாய்மத வரலாற்றைத் தந்த 2015 கனமழை

சமீப நாட்களாகவே இராமநாதபுரத்தை ஒருங்கிணைத்து பல பௌத்த எச்சங்கள் வெளிவர  ஆரம்பமாகின்றன அவற்றை நான்  வரைபடத்தோடு பொருத்திப் பார்க்கும்போது  பல  தகவல்களை நாம்  உணர்ந்துகொள்ள முடிகின்றது.

*அவற்றில் டிசம்பர் 1ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே  உள்ள  ஆனந்தூரில் புத்தர்  அமர்ந்த நிலையில் 5 அடி உயரமுள்ள 11ஆம் நூற்றாண்டுச்  சிலைக் கிடைத்துள்ளது.
               
                         புகைப்படம் : புத்தர் சிலையின் வரலாற்று வரையறை





* டிசம்பர் 12 ஆம்  தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை நகரம் வணிக விவசாயத்தில் சிறந்து விளங்கியுள்ளது மற்றும் அவ்வணிக  நகரம் சங்க காலத்திற்கு முந்தையதாக இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்களால் சொல்லப் படுகின்றது.

புகைப்படம்  : லாந்தை வணிக நகரமாக என்று சொல்லப்பட்ட வரலாற்று வரையறை
இந்தத்  தகவல்களை  நாம் வரைபடத்தில் பொருத்திப் பார்க்கும்போது புத்தர் சிலை கிடைத்த ஆனந்தூர் மற்றும் லாந்தை நகரம் நேர்கோட்டில்(vertical line ) இருக்கின்றன அதே போல் சங்க காலத்திற்கு முந்தைய வணிக விவசாய நகரமாக லாந்தை இருந்துள்ளது என்ற தகவலோடு ஒப்பிடும்போது 11ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலமே சங்க காலம் என்றும் நாம்  அறுதியிட்டுச் சொல்லமுடியும்..இதுபோன்ற பல ஓப்பிடுகளை வைத்து இராமநாதபுரம் ஒரு  பௌத்த செழித்த ஆன்மிக தளம் என்று  தமிழ் மண்ணில்  பௌத்தம் வீழ்ந்தபோது இங்கே ஆதி விவாசயகுடிகளும் வீழ்ந்தனர் என்று சொல்லமுடியும்.
                புகைப்படம்  : வரைப்படத்தில் நான் பொருத்திய இடங்கள்.



தெற்கே பெய்துவரும் கனமழை இன்னும்  எத்தனை எத்தனை வரலாற்றை வெளிக்கொண்டுவரும் என்று  ஆர்வமோடு காத்திருகின்றேன்.

-மழை தொடரட்டும்



Monday 16 November 2015

கரையாளர்களை போற்றுவோம்!

நவம்பர் 16 2015 தமிழ்  ஹிந்து  நாளிதளில் வந்த  செய்தி 

80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்ம மங்கலம் ஏரி.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


நம் முன்னோர்களின் ஏரி தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதற்கு முன்பாக ஏரிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம். மனிதன் வெட்டியது அல்லாமல் இயற்கையாகவே உருவாகும் ஏரிகளும் உண்டு. அவை 6 வகைப்படுகின்றன. பூமித் தட்டுகளின் அசைவால் உருவாவது டெக்டோனிக் (Tectonic) ஏரி (உ.ம்: டிசோ மொரீரி ஏரி-லடாக்). எரிமலை வெடிப்புகளால் உருவாவது வேல்கனிக் (Volcanic) ஏரி (உ.ம்: டவோடா ஏரி-ஜப்பான்). தொடர் காற்று வீச்சால் உருவாவது எயோலியன் (Aeolian) ஏரி (உ.ம்: சாம்பார் ஏரி-ஜெய்ப்பூர்). தொடர் நீர் பாய்தலால் உருவாவது புளுவியல்(Fluvial) ஏரி (உ.ம்: கபர்டால் ஏரி-பிஹார்). பனிப் பாறைகளின் சரிவுகளால் உருவாவது கிளாசியல் (Glacial) ஏரி (உ.ம்: சந்திராடால் ஏரி-இமாச்சலம்). கடலோர இயக்கங்களால் உருவாவது கோஸ்டல் (Coastal) ஏரி (உ.ம்: பழவேற்காடு ஏரி-சென்னை).

ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளே அதிகம். இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 1,66,283 ஏரிகள் உள்ளன. சரி, மனிதன் ஏரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதன் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தான். மழை இல்லாதபோது மழை நீரை சேமிக்க ஆறுகளின் அருகே சிறு நீர் நிலைகளை ஏற்படுத்தினான். இதுவே ஏரியின் தொடக்கக் காலம். அடுத்ததாக ஆற்றில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுவர ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக சவுக்கு, மூங்கில் கம்புகளை அடித்தார்கள். அவற்றின் இடையே கோரை மற்றும் நாணல் புற்களைக் கொண்டு அடைத்து, களிமண் பூசி சுவர்போல தடுப்பு ஏற்படுத்தினார்கள். இதன் பெயர் கொரம்பு. கொரம்பில் நீர் நிரம்பியபோது கால்வாய்கள் அமைத்து உயரமான இடங்களில் இருந்த குளங்களுக்கு நீரைப் பாய்ச்சினார்கள். இதுவே பிற்காலத்தில் அணைகள் அமைய அடிப்படையாக அமைந்தது.

நடுமடைகல்


பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என்று அழைத்தனர். அப்போது நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இதைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார்,

‘நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் 
தட்டோரம்ம இவண்தட் டோரே 
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’

(புறநானூறு 18) என்று பாடினார். அதாவது, ‘எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரை அமைத்து நீர் நிலைகள் உருவாக்கிய மன்னர்களே இந்த உலகில் தங்களது பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள்’ என்கிறார் குடபுலவியனார். அதேபோல 10 வயது முதல் 80 வயது வரை குடிமராமத்துப் பணி செய்வது கடமையாக கருதப்பட்டது. இப்படியாக நீர் நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் பழந்தமிழர் வாழ்வோடு ஒன்றியதாக இருந்தது.

நம் முன்னோர் ஏனோதானோவென்று ஏரிகளை வெட்டிவிடவில்லை. இன்றைய பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் சவால் விடுபவை அவை. பாண்டியன் மூன்றாம் ராஜசிம்மன் கட்டிய ராஜசிம்ம மங்கலம் ஏரி உட்பட, தமிழகத்தின் பாரம்பரிய ஏரிகளைக் கழுகுக் கண் கொண்டு பார்த்தால் அவை பிறை நிலவின் வடிவில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, பழந்தமிழர் ஏரிகளை 8-ம் நாள் பிறை வடிவில் அமைத்தார்கள். ஏரிகள் இந்த வடிவத்தில் அமைவதால் கரையின் நீளம் குறைவாகவும், அதேசமயம் அதிக நீர்க் கொள்ளளவு கொண்டதாகவும் இருந்தன. இது சிக்கனமான வடிவமைப்பு முறை. இதைத்தான் சங்கப் புலவர் கபிலர்,

‘அறையும் பொறையும் மணந்த தனைய 
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத் 
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ 
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே’

என்று பாடினார்.

மடை கருப்பன்
ஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.

வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம்.

ஓட்டுமொத்த ஊருக்காக மடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான கரையளர்ககளை போற்றுவோம்

Wednesday 30 September 2015

பௌத்த களப்பணியில் நான் .


பௌத்த களப்பணி 





புகைப்படம் ஒன்று : எங்கள் தம்ம யாத்திரை பயணத்தில் பாண்டிய நாட்டு அண்டிபட்டி ஊரில் உள்ள ரோசனப்பட்டி கிராம விவசாய பூமி அருகே கிடைத்த புத்த சிலை. இவ்விடத்தில் ஒரு கிராமம் அழிந்துபோனதாக தடையங்கள் உள்ளன.





























புகைப்படம் இரண்டு : மலையில் கண்ட புத்தர் சிலையும் அதை தொண்டு தொட்டு வழிபட்டு வரும் அம்மலையருகே இருக்கும் விவசாய குடிகளும்











 .

தமிழ் நாட்டின் பௌத்த அடையாளம்

சோழ நாட்டில் பௌத்த அடையாளம்:

புகைப்பட அடையாளம் பேரரசன் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மற்றும் நாகை போன்ற மாவட்டங்களில் அதிகமான விவசாயக் குடிகள் அதாவது தேவேந்திர குல வேளார்கள் வாழ்ந்துவருவது நாம் அனைவரும் அறிவோம்.
இவ்வாறு பொறிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் வரலாற்று தகவல். பௌதத்தின் வீழ்ச்சியோடு தேவேந்திர குல வேளாளர்களின் வீழ்ச்சியும் பொருந்தியுள்ளது. வீழ்ச்சயின் சமயத்தில் தான் தேவேந்திரகளின் சொந்த இடங்கள் பறிக்கப்பட்டு "சைவ மதம்" வளர்ப்பு என்று இக்கோவிலுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியே இன்று தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் நாம் நிலமற்ற விவசாய கூலிகளாக இருந்து வருகின்றோம் .











ஆக ராஜா ராஜா சோழன் நிறுவியதாக சொல்லப்படும் சிவன் சிலையின் காலம் பழமையானது அல்ல தற்கால நிறுவுதலே.அது சிவன் கோவிலா அல்லது பௌத்த கோவிலா என்பதை நாம் ஆராயவேண்டும் காரணம் ராஜா ராஜா சோழனின் சதைய விழா என்பது தேவேந்திர குல வேளார்களோடு மிகவும் தொடர்புள்ள திருவிழாவாக வரலாறு சொல்லி வருகின்றது.

பாண்டிய  நாட்டில் பௌத்த அடையாளம்:





தம்ம யாத்திரை ஊர் தேனி ஆண்டிப்பட்டி. அங்கே இரண்டு புத்தர் சிலையை கண்டோம் அதில் ஒன்று ரோசனாப்பட்டி என்ற கிராமத்திலும், மற்றொன்று சுந்தராஜன்பட்டி என்ற கிராமத்திலும் பார்க்க முடிந்தது. இதில் வரலாற்று சிறப்பு என்னவென்றாள் இங்விரண்டு ஊர்களும் தேவேந்திர குல வேளாளர்களின் பூர்வீக கிராமமாகும் .



"குற்றம் கடிதல்" அதரவு பதிவு

இந்த ஆண்டு நான் மிகவும் எதிர்பார்க்கும் படம்  "குற்றம் கடிதல்".

குழந்தைகளை குறித்து வெளிவரு படங்கள் அழகியல் என்ற திரைமொழியை விட மிகவும் நுணுக்கமான ஆய்வுகளுக்கு பின்னரே வெளிவரவேண்டும்.அப்படி இல்லையெனில் குழந்தைகள் மீது அழகியில் பாரங்களை ஏற்றிவிட்டு, உரையிடல் தளத்தில் இருந்து கலச்சார மற்றம் என்ற வட்டத்துக்குள் மாட்டிகொள்ள வேண்டிய அவசியம் கிட்டும்.
 சிறந்த எடுத்துகாட்டு :

 இயக்குனர் மணிகண்டன் "காக்கா முட்டை"யில் வெளிபடுத்திய சேரியின் தோற்றமும்.
இயக்குனர் பா.ரஞ்சித் "மெட்ராஸ்" திரைப்படத்தில் மக்களுக்கு காண்பித்த சேரியின் நீகழ்கால திரை அழகியல் தோற்றமும்.
அதன் அடிப்படையில் "குற்றம் கடிதில்" திரைப்படம் குழந்தை பருவத்தின் ஆய்வுகளை முன்னெடுத்து. அதை திரைமொழி அழகியலோடு பொருத்தப்பட்டு, இந்தியாவின் தேசிய விருது என்ற கௌரவமும், ஆஸ்காரின் உலக படிகளிலும் தன்னை நிறுவிக்கொண்டு. நம்மை நோக்கி வரும் செப்டம்பர் - 24 வெள்ளிக்கிழமை வருகின்றது.

சர்வதேச அங்கிகாரம் பெற்ற "குற்றம் கடிதல்" திரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் திரையிட வெறும் 80 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் நாம் அனைவரும் "குற்றம் கடிதில்" திரைப்படத்திற்கு தரும் பெரும் ஆதரவே. இத்திரைப்படம் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகி, அதிகமாக காட்சிகள் திரையீடப்பாட்டு,நாம் மக்களுக்கான திரைப்படமாக மாற்றமடைய செய்வோம்.
"குற்றம் கடிதில் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்"



நேற்று இரண்டு மராத்திய படைப்புகளில் பயணித்தேன்.

நேற்று இரண்டு மராத்திய படைப்புகளில் பயணித்தேன்.

எனக்கு தெரிந்த உலக சினிமா தரம் என்பது விளிம்புநிலையாளர்கள் கலாச்சாரம் அதன் அழகியல் தன்மை படைப்பாக உருமாறும் சமயம் என்று சொல்லத் தோன்றும். அது போல் இன்றைய இந்தியாவில் உலக தர சினிமாவிற்கான பண்பாடு அன்றில் இருந்து இன்று வரை மண்ணின் பூர்வகுடிகள் மத்தியில் மட்டும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் உலக சினிமா தாகத்தில் இருந்து வெளிவரும் இயக்குனர்கள் தங்களுக்கான ஆரம்ப படைப்பின் வெளிப்பாடுகளை உலகம் முழுவதும் தேடி வருவர். அத்தேடலில் வெற்றிபெறும் இயக்குனர்களின் படைப்பு பல இடங்களில் மொழிக்கான தன்மைய இழந்து மாற்று படைப்பின் அடி நாதம் தொட்டு மக்கள் மத்தியிலே சென்றடையும். .
உலக சினிமாவின் உச்சம் என்பதை ஈரானிய படைப்புகளாகவே மட்டும் பார்க்கும் படைப்பாளர் அதன் ஆரம்பத்தை அலசிப் பார்க்கமறந்து விடுவது வழக்கம்.ஈரானிய படைப்பாக இன்று நாம் பார்த்து கற்றுக்கொள்ளும் அனைத்தும் மண்ணுக்கான மக்களின் வாழ்வியில் மற்றும் பண்பாட்டை பாதுகாப்பவையே .
அதைச் சற்று தமிழ் நாட்டு திரைப்பட படைப்புகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தமிழ் உலகத்தரம் அளவுகோல்கள் வெளிநாட்டு படிப்புகளின் இறக்குமதி என்று சொல்வதே மிக சரியாக இருக்கும்.காரணம் ஏதேனும் உலக தர தமிழ் சினிமா காட்சிகள் மண்ணின் மக்கள் தங்களை அடையாளப்படுத்திய தலைவனுக்கு மாலையிடும் காட்சிகள் திரைப்படத்தில் இருந்தால் அக்காட்சி நீக்கப்பட வேண்டும் அல்லது படம் வெளியாவது "தமிழ் குதிரைக்களுக்கு கொம்பு வளர்ந்தால் எப்படி இருக்கும்" என்று நினைப்பதற்கு சமம்.
அந்த வகையில் நேற்று பார்த்த பன்ட்ரி, கோர்ட் 
இரண்டு மராத்திய திரைப்படங்கள்.
பன்ட்ரி- தொழில் ரீதியாக பிரித்து வைக்கப்பட்ட மனிதனை மானமற்ற , உணர்வற்ற நிராயுதபாணியாக இச்சமூகம் உருவாக்கி வைத்து கொள்கின்றது.
அம்மனிதனின் தலைமுறைகளும் அத்தொழிலை மீண்டும் தொடர வேண்டும் என்று சமூகம் அவனிடம் திணிக்க அதை தாங்கிக்கொள்ள முடியாத வளர்பிறை கவரி மான் தன்மான இழப்பின் ஆதிக்கத்திடம் முட்டி மோதி விடுதலை அடைகின்றது.
கோர்ட் - மக்கள் கலைஞனை, மலக்குழி இறப்போடு தொடர்பிட்டு முடக்கும் அதிகார அரசியல்.அவருக்காக போராடும் ஒரு உண்மை வழக்கறிஞரின் செயலாக்கம்.

இவ்விரண்டும் மராத்தி மொழி படமே, மாநிலம் கடந்து எந்த தழுவலும் இப்டங்களில் இடம்பெறவில்லை. இரண்டும் உணர்வோடு ஒட்டி செல்கின்றது. மக்களின் தேவைகளை பேசிய படமே இன்று உலகஅரங்கம் போற்றுகின்றது குறிப்பாக கோர்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான தேர்வில் இடம் இடம்பெற்றுள்ளது என்பது தனி சிறப்பு .
தமிழுக்கான உலக சினிமா என்பது தேவைகள் உள்ள மக்களின் எதார்த்த வாழ்வியலே அதை அம்மக்களிடம் மட்டுமே தேடுங்கள் அதன் பின்னரே தமிழனின் படைப்பை உலகம் அறியும்.

Tuesday 11 August 2015

பௌத்த- சமண களஆய்வுகளின் தொடர்புகள்.





பௌத்த- சமண களஆய்வுகளின் தொடர்புகள்.
சீவலப்பெரி மருகால் தலை உள்ள புலாவுடையர் சாஸ்தா கோவில் உள்ள காரைக்கால் அம்மையார், சுடலைமாடன்,பேச்சியம்மன், மாடசாமி என்ற மாடன்,மாடத்தி போன்ற காவல் தெய்வங்கள். இவர்களே சாஸ்தா என்று அழைக்கப்படும் நாம் முன்னோர்கள் இவர்களை ஹிந்து கடவுளாக பார்ப்பதே நாம் அறியாமையின் உச்சம்








Wednesday 5 August 2015

எம்மை தலைநிமிர்த்திய சுட்ட வெயில் - அனுபவ தொடர்

எம்மை தலைநிமிர்த்திய சுட்ட வெயில். 

குறும்படங்களை அதிகம் யாருமே பார்க்க கூடமாட்டர் என்று தெரிந்தும். சுட்டில் ஒதுங்கூட நிழலே இல்லாத அந்த மொட்டை மலையில், அடித்த கடினமான வெயிலும் என் படைப்புகள் மீது நம்பிக்கை வைத்து என்னோடு பயணித்த கதாபத்திரங்களின் உழைப்பே மற்றவர்களை பேசவைத்துள்ளது 



"குறியீடு" படத்தி
ல் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்க்கு மிகவும் குறைந்த வயதே. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பள்ளி கல்வி முடித்து, கல்லுரியில் முதலாம் ஆண்டு படித்துகொண்டு இருக்கும் மாணவர். எத்தனை குறும்படத்தில் பணியாற்றி இருப்பர் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் அவரை நான் தேர்வுசெய் ஒரு பிரேம் போதுமானதாக இருந்தது.

ஒரு பெண் கதாபத்திரத்தை தவிர யாருக்கும் எந்த தொகையும் வழங்கப்படவில்லை.ஆனால் முந்தைய நாளே அறிவிப்பை எனது உதவி இயக்குனர் சொல்லி விடுவார் காலை 6 மணிக்கு வந்துவிட வேண்டும் என்று. அதன் படியே ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஒரு பெண்மணி நாகர்கோவிலில் இருந்தும், படத்தில் வேலைசெய்த டெக்னிசியன்களை, உதவி இயக்குனர்களை மற்றும் இதர நடிகர்களை அள்ளிபோட்டுகொண்டு. ஒரு முதியவர் தனது அம்பாசிடரில் காலை 6மணிக்கு லோக்கேசனுக்கு வந்துவிடுவர்

காலை உணவிற்குள், அன்று எடுக்கவேண்டிய காட்சியில் ஐந்து ஷோட்கள், முன்று அல்லது நான்கு டேக்களோடு முடிந்திருக்கும். காலை வேலை போதிய உணவு கூட இருக்காது, மீண்டும் ஷூட்திற்கு செல்வோம். இப்படி பார்த்து பார்த்து பதிவு செய்த படமே "அந்த அம்மா செமயா நடிச்சு இருக்கு, அந்த ஹீரோ தம்பி யாரு ஏதும் படத்தில் நடித்துள்ளாரா என்று பேசவைத்துள்ளது". 





படத்தின் முதல்கட்ட பெயர் பதிவின் பொழுது மனோதத்துவத்தின் தந்தை சிக்மென்ட் பிராயிடு அவர்களுக்கு நன்றி என்றே படம் ஆரம்பமாகும். 

நடைமுறை வாழ்வில் கதையோடு எந்த தொடர்பும் இல்லாத நபர்களை, எதார்த்த பாத்திரமாக மாற்றி கதையின் அடிப்படையில் பயணமிட வைக்கவேண்டும். எந்த ஒரு வசனமும் பேசாமல் காதல், கோபம் இந்த இரண்டையும் உணர்வுகளில் இருந்து வெளிப்படுத்த வேண்டும் காரணம் "குறியீடு" 30 நிமிடம் மௌன திரைப்படம்.

ஒரு சமயம் காட்சிகள் எடுத்தவண்ணம் இருக்கின்றோம், அது அடர்ந்த கள்ளிச்செடிகள் நிறைந்த காடு அதில் படர்ந்து கிடக்கும் கற்கள் வரைமுறை அற்றவை. எங்கள் படக்குழுவிற்கு சமந்தம் இல்லாத நபர் எங்களை நோக்கி வந்து "இங்கே படபுடிப்பு நடத்த யார்,அனுமதி தந்தனர் என்று" கேட்க. நன்றாக சென்ற படப்புடிப்பு சற்று நேரம் நிறுத்தப்பட்து.அதை சுதாரித்த அந்த நபர் ஒரு மப்டி போலிஸ் என்று கூட எங்களுக்கு தெரியாது. தன்னிடம் இருக்கும் அலைபேசியில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இந்த தகவலை பதிவு செய்து எங்களின் முகவரி கேட்டுகொண்டு சென்றுவிட்டார்.

மீண்டும் படப்புடிப்பு தொடங்கி அடுத்த 30 நிமிடத்தில் பெரும் காவல் படை எங்களை நோக்கிவந்து வந்தது, அதில் இருக்க காவல்துறையினர் கைகளில் பாதுகாப்பு கவசங்களும் இருந்தது.இந்த படையை ஒரு பெண் s.i வழிநடத்தி வந்தார். மீண்டும் அவரிடம் பேசிக்கொண்டு இருக்க, உங்களை பார்த்தாள் "மிகவும் சந்தேகமாக இருக்கின்றது" என்று சொல்லும் அளவுக்கு எங்கள் உடை அலங்காரம் இருந்தது. ஒருவழியாக இந்த பேச்சுவார்த்தை தான் இறுதி நிலையை அடைந்து மீண்டும் படப்புடிப்பு தொடங்கியது.

இது போல பல தடைகள் மிக எளிதாக தலையில் சுமந்து எனது கதாநாயகன்,உதவி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் துணையோடு நடந்தேன்.இந்த பயணமே இன்று என்னை வேற்று வகையான இடங்களில் நிறுவிக்கொண்டது. 



இந்த அனுபவத்தை உங்களோடு சேர்ந்து கொண்டாட  "குறியீடு" படம் வெளியீடு நிகழ்வில் பங்கேற்க உங்களை அன்போடு அழைகின்றேன்.

அவனியாபுரம் - மதுரையின் பூர்வகுடி கிராமம்.

எனது கிராமம் மற்றும் அதன் பல பெயர்கள்: 

"அவனிப்ப சேகர சதுர்வேதி மங்கலம்" இதுவே முதல் முதலில் பாண்டிய மண்ணின் ஆட்சி காலத்தில் எனது  கிராமத்தின் முதல் பெயர். அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த வடுகர்கள் "அவனி நாராயணபுரம்" என்று பெயரை மாற்றினர்.அதன் பின்னர் ராணி மங்கம்மாள் காலத்தில்"அவனியாபுரம்" என்று பெயர் மாற்றமடைந்துள்ளது, மீண்டும் வடுகர்கள் ஆட்சி அதிகாரத்தால் "பிள்ளையார் பாளையம்" என்று பெயர் மாற்றமடைந்து அனைந்து முக்கிய ஆவணங்களிலும் பதிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் பெயர் மற்றமடைந்து இன்று "அவனியாபுரம்" என்ற பெயரை தாங்கி நிற்கின்றது 
 நான் பிறந்த கிராமம்.அனால்  "அவனிப்ப சேகர சதுர்வேதி மங்கலம்" என்பது தான் முதல் பெயராக இருக்கவாய்ப்பு மிகவும் குறைவு என்பதும் எனது கூற்று.

 
என் கிராமத்தின் பெயர் வரலாறு :

மதுரை மாவட்டத்தில், அதிக நெல் சாகுபடி செய்யும் விவசாயம் நிலமாக "அவனியாபுரம்"மும்  அதற்கு அடுத்ததாகா
"சோழவந்தான்"னும்இருந்துள்ளது  என்று Gesture B.S.Baliga மதுரை வரலாற்று ஆவணத்தில் பதிவுசெய்துள்ளார். . இன்று காலம் கடந்த நிலையில் எங்கள் உறவினர் அதிகம் வசிக்கும் சோழவந்தான் கிராமமே விவசாயம் நிலம் அதிகம் கொண்ட விவாசய பூமியாக இருக்கின்றது.


திருப்புரங்குன்றம் மலையில் உள்ள ஆதி பழங்கால சமணர் சிற்பம் 


குறிப்பு:

*ஒட்டுமொத்தமாக பௌத்த-சமணர்கள் வாழ்ந்த காலத்தில் எனது சொந்த கிராமத்தின் பெயர் "அவனிப சேகர சதுர்வேதி மங்கலம்" என்பது மிகப்பெரிய கேள்விகுறியாக இன்று வரை இருந்து வருகின்றது

*இன்று திருப்புரங்குன்றம் என்பது ஹிந்துக்கள் வாழிபாட்டு (முருகனின் ஆறுபடை விடு) தளமாக இருக்க சந்தர்ப்பம் மிக குறிவு என்று அம்மலையை சுற்றியுள்ள சமணர் படுக்கைகளும், கல்வெட்டு குகை கோவிலிகளும் நமக்கு உணர்த்துகின்றது.



எம் கம்பீர வரலாற்று வாழ்வியில் (Life style).




பிள்ளையார் பாளையம் கண்மாய் 3500 முதல் 4000 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பு கொண்டது. இன்றைய கோச்சடையில் இருந்து  ஆரப்பாளையம் கடந்து அதாவது பழைய ஒத்தக்கடை (இன்றைய புது ஜெயில் ரோடு) சோம சுந்தரி காலணியை (s.s colony ) கடந்து கடல் போல தோற்றம் கொண்ட  பெரியகுளத்து கண்மாயில் வந்து சேர்கின்றது அதன் எல்லையாக வில்லாபுரம் அமைந்து 
 இக்கண்மாயின் கழிவு தான் பல ஊர்களின் கம்மாய்களை நிறைக்கின்றது. அந்த இணைப்பில் வரும்  புதுக்குளத்து கம்மாயை பெரிய குளத்து கம்மாயோடு இணைத்த  பெருமை   பூவநாச்சியை என்ற பெண்ணை  சேரும்.

பெரிய கண்மாயின் ஆரம்பம் கோச்சடை அதன் முடிவு முத்துப்பட்டி இன்றைய TVS நகர் அதன் முடிவில் இருந்து புதுகுளத்து கண்மாய் அரம்பமாகி இன்று அவனியாபுரம், அயன்பாப்பாக்ககுடி,
சரஸ்வதி நாராயண கல்லூரி வழியாக  மற்ற ஊர்களுக்கு செல்கின்றது

பெரிய கம்மாயிக்கு அடுத்ததாக இருக்கும்  புதுக்குளம் கண்மைக்கு மத்தியில் கருப்பசாமி கோவில் இருந்துள்ளது என்று  இன்றும் இருக்கின்றது என்ற தகவலை தொல்குடி கரையளர்களான எனது முப்பாட்டனின் வாரிசுகளில் ஒருவரான . கேசவக்குடும்பனின் வாரிசான அம்மாசி(லேட்) பதிவு செய்கின்றார்.

ஆக பிள்ளையார் பாளையத்தை மையாக வைத்து பல  கண்மாய்கள் இருந்து அவற்றில் ஒன்று பெரியகுளத்து கண்மாய் மற்றொன்று புதுகுளத்து கண்மாய் மற்றும் பல. 


இந்த கண்மாய்களில் மடைதிறப்பது மற்றும் மடைஅடைப்பது எம் கிராமத்து கரையாளர்களின்  பணி என்பதை தாண்டி இவர்களால் மட்டுமே இச்செயலை செய்ய முடியும் என்பதே உண்மை. ஆகையால் தான் நீர் நிர்வாகத்தை பாதுகாத்த குடும்பர்களை நீர்குடும்பன் என்றும் வயல் உழவுக்கு நீர் திறக்கும் வேலைகளை செய்து வந்த குடும்பர்களை மடைக்குடும்பன் என்றும் தமிழ் வரலாறு எம்
முன்னோர்களை அழைத்துவந்து.

*ஆயக்கட்டு- ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி







தாய்மடியான நீர் படுக்கைகள்

எம் கிராமத்தின் அருகில் இருக்கும் குளம் மற்றும் கண்மாய்களை, இன்றைய கூகிளில் வரைப்படத்தோடு வண்ணம் தீட்டி அடையாள குறியீடுயிட்டு பொருத்தியுள்ளேன்.

இந்த நீர் படுக்கைகளே, எம் பூர்வகுடி விவசாயிகளின் "தாய்மடி"யாக இருக்க காரணம்.

  சங்க காலம் தொட்டு அதாவது  நீர் மேலாண்மையை பாதுகாத்த காராளர்கள் என்றும்,
ஏறத்தாழ இவர்களே மருத நிலத்தின் பழங்குடி என்றும்  வரலாறு எம்மை அடையாளப்படுத்த 
இக்குளம் மற்றும் கண்மாய்கள் காரணமாக இருந்துவருகின்றது.

குறிப்பாக: பெரிய கண்மாய், புதுகுளத்து கண்மாய், அவனியாபுரம் கண்மாய்,வெள்ளகல் கண்மாய், நாத்தாங்கால் குளம்,கிராமத்தின் பூர்வகுடி விவசாயிகள் வாழ்ந்த இடம், அவர்களின் காவல் தெய்வமான அய்யனார் கோவில், இந்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றேன்.

தேடுதலில் கிடைத்த பதில் : சைவ சித்தாந்தம் பற்றிக்கொண்ட கடவுள் மறுப்பே எம் மூதாதையார்கள் அழகர் கோவிலில் உள்ள காவல் தெய்வம் 18ஆம் படி கருப்பனுக்கு மொட்டை அடித்து, ஆட்டை பலியிடுகின்றனர் என்பதே வரலாற்று தகவல் .





எனது கிராமத்தின் பழமைவாய்ந்த அடையாளங்களை இன்றைய கூகிளில் வரைப்படத்தோடு வண்ணம் தீட்டி அடையாள குறியீடுயிட்டு பொருத்தியுள்ளேன். 

குறிப்பாக: கிராமத்தின் நுழைவாயில், கிராமத்தின் எல்லை,பூர்வகுடி விவசாயிகள் வாழ்ந்த இடம், அவர்களின் குல தெய்வ கோவில்,காவல் தெய்வத்தின் கோவில்,இந்த ஊரில் உள்ள "காலாங்கரை" மற்றும் கண்மாய்களை இந்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றேன்.
எமது கிராமத்தின் எல்லை சாமியான அய்யனார் 





இன்று அவனியாபுரத்தின் எல்லையாகவும் அயன்பாப்பாக்குடியின் ஆரம்பமாக திகழும் "அய்யனார் கோவில்" எமது முன்னோர்கள் உருவாக்கிய வழிபாட்டு தளம் இருந்துள்ளது. ஆகையால் தான், அக்குதுரையில் இருக்கும் அய்யனார். அவனியாபுரத்தில் நாங்கள் வசிக்கும் தந்தை பெரியார் நகர் நோக்கி இருக்கின்றது, என்று எங்களின் முதாதையர் தங்களின் வாரிசுகளுக்கு சொல்லி வைத்துள்ளனர். 

அய்யனாரை எங்களின் காவல் தெய்வமாக வணங்க சொல்லப்பட்டு வந்த பேய் கதைகள்: 

இந்த அய்யனார் எங்களின் காவல் தெய்வம் என்றும், எந்த பேய்களையும் எங்கள் ஊருக்குள் அண்டவிடாமல் பாதுகாக்கவே. இரவு ஒரு குதிரை சப்தம் கேட்கும், அந்த குதுரையில் நாம் ஊர்களில் பதுங்கி இருக்கும் (பேய்களை) திருடனை புடிக்க அய்யனார் வருகின்றார்.
ஆகையல் அய்யனார் நமது தெருக்களில் இரவு நேரம் பயணிக்கும் போது, வீதியில் யாரும் தங்களது கால்களை நீட்டி உறங்கக்ககூடாது, அப்படி உறங்கினால் அடுத்தநாள் காலையில், இவர்களின் தலைவைத்த பக்கம்நோக்கி, இவர்களின் கால்கள் திருப்பிப் போடப்பட்டு இருக்கும் என்று எங்கள் கிழவன் / கிழவிகள் சொல்லி வருவார்கள். நானும் அதை கேட்டு நடுங்கி இரவு 12மணிக்கு முன்னரே கண்முடி துங்கிய காலங்கள் இருக்கின்றது. இதுவே என்று எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு காவல் தெய்வமான அய்யனாரை தெய்விக கதாநாயகனாக பார்க்கவைத்து பேய் கதைகள்

எங்கள் கிராமத்தின் நுழைவாயில் மற்றும் அதன் எல்லை: 

பழங்காலத்தில் எமது கிராமத்தில் இருந்து அய்யனார் கோவிலுக்கு எடுக்கப்படும் முளைப்பாரிகள் எங்கள் கிராம நுழைவாயில் இருக்கும் வாய்களில் கரைக்கப்பட்டது வந்துள்ளது. இன்று நாங்கள் அதை "காலாங்கரை" என்று சொல்லிவருகின்றோம்.அதை நீகழ்காலத்தோடு பொருத்தி பார்க்கும்போது,
எங்கள் கிராமத்தின் ஆரம்பம் இந்த "காலாங்கரை" வாய்க்காலும், கிராமத்திற்கான முடிவை அதாவது எல்லையை தேடிவரும் சமயத்தில் தான் எமது மூதாதையர்கள் அங்கே அய்யனார் என்ற காவல் தெய்வத்தை நிறுவி வாங்கியுள்ளனர் என்பது தெரியவருகின்றது.

குறிப்பு

*காலாங்கரை-ஏரிக்கு நீர் கொண்டு வருங்கால்வாய்.

*எங்கள் மூன்னோர்கள் என்றுமே சிவனை வாங்கியவர்கள் இல்லை என்பதை பல சான்றுகள் வைத்து நிரூபிக்க முடிகின்றது.

*பூர்வகுடி விவசாயிகளான எங்கள் வீடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மொட்டை இன்று வரை
அழகர் கோவிலில் எடுத்து வருகின்றோம் என்பது தொண்டுதொட்டு வரும் நடைமுறை.




மதுரையின் பூர்வகுடிகளும். மதுரை மண்னை வளமடைய செய்த விவசாய பழங்குடிகள் என்பதற்கு பல ஆதாரங்கள் இன்றுவரை நடைமுறை யில் உள்ளது.எனது முப்பாட்டனுக்கு நான்கு வாரிசுகள். அவர்களின் பெயர் பூச்சி, கேசவன், குள்ளன்,முத்து (குடும்பர்கள்).  எனது பாட்டனாரின் பெயர் பூச்சி குடும்பன் எனது தாத்தா பெயர் அழகு குடும்பன் . எங்கள் முண்ணோர்கள் சோனை என்ற காவல் தெய்வங்களை வணங்கி வந்துள்ளனர்.

வைகை ஓடிய மாமதுரையின் வீடியோ 



ஊர் குறிப்பு சொன்னவர்கள் 


எங்கள் ஊரில் ஆனிச்சி கிழவி பாடும் நடுவத்தோழி பாடலில் மழை வருவதாக நாகம்மா கிழவி சொல்கின்றாள்.இந்த பாடலை பாடும் பாட்டி 20 வயது இருக்கும் போது நாகம்மாள் கிழவிக்கு வயது 7. இன்று நாகம்மா கிழவி பாடும் நாட்டுப்புற பாடல் இரண்டு கிழவிகளிடம் இருந்து தான் பெற்றுவந்ததாக செல்கின்றாள் . அவர்கள் பெயர் பந்தி கிழவி,கருத்தமனக்கி இவர்கள் இறக்கும்போது இந்த கிழவியின் வயது 7.



மீண்டும் பயன்ப்படுவேன், என் கிராமத்தின் பெருமயை இந்த உலகம் அறிய.

நான் ஏன் பௌத்த சமண தத்துவத்தை நம்புகின்றேன்.


2015 ஜூன் 15 இருந்து  19 வரை  தொடர் பௌத்த வரலாற்று ஆய்வின் நிமித்தமாக மூன்று பள்ளியம்பதிகளுக்கு (மலைகளுக்கு) பயணித்து வந்தேன். இவ்வகை ஆய்வுகளுக்கு நான் எடுத்துக்கொண்ட செயல்முறை: "ஒருங்கினைந்த கிராம செயலாக்க முறை" (Participatory Rural Appraisal). எனது செயலாக்க முன்னோடியாக (Review of doctorates) ஐயா அயோத்திதாஸ பண்டிதர் அவர்களையும், பேராசிரியர் தருமராஜ் ஆவணங்களை தொடக்க கருவியாக ஏற்றுகொண்டேன்.


‘பள்ளியம்பதிகள்’ என்றால் என்ன.

’பதி’என்றால் குன்று, பள்ளிகள் நடைபெறும் குன்றுகளுக்குப் பெயர் ‘பள்ளியம்பதிகள்!’
- அயோத்திதாஸ பண்டிதர்

பேராசிரியர் தருமராஜ் அவர்களின் ஆய்வில் இருந்து வெளிப்படும் பள்ளியம்பதிகளின் விளக்கம்
விவசாயக் கிராமங்களின் கல்வித் தேவைகளையும் மருத்துவத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள குன்றுகளில் கற்படுக்கைகளைத் தயார் செய்து பௌத்தத் துறவிகள் வந்து தங்கலானார்கள். குழந்தைகளுக்கான கல்வி இங்கு கற்பிக்கப்பட்டது;மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது. இதனால் இக்குன்றுகளுக்குப் பொதுவாகப் ‘பள்ளி’ என்ற பெயர் வழங்கப்பட்டது.இப்படியே தமிழகமெங்கும் வேளாண்மையை மையப்படுத்திய ‘பள்ளியம்பதிகள்’ எராளம் தோன்றின.

இத்தகைய பள்ளியம்பதிகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டபத்துப்பதினைந்து கிராமங்கள் இணைந்து பள்ளியம்பதிகள் உருவகப்பட்டு இருக்கின்றது. இவற்றையெல்லாம் இணைக்கிற கண்ணியாக பௌத்த பள்ளிகள் இருந்திருக்கின்றது.
-பேராசிரியர் தருமராஜ்.


இவ்வகை ஆய்வுகளில் நான் தொகுத்த ஆவணமாக நான் கிளிக் செய்த புகைபடங்களும், அங்கே மக்களிடம் திரட்டிய பேச்சுவழக்கு வரலாறுகளும். இது முதல் ஆரம்ப பயணம், பல இடங்களுக்கு பயணப்பட இருகின்றேன். இந்த ஆய்வில் நான் உணர்துகொண்ட உண்மை "மலைகள் மீது செல்லுங்கள்,உங்கள் வரலாறு உங்களுக்கு புரியும் ".இன்று எனது பயணம், தமிழ் சமூகத்தின் முன்னோடிகளை தேடி. அதில் நான் சொல்ல வருவது, "நாங்கள் பௌத்த-சமண வம்சா வழி விவசாய பழங்குடியினர்" என்ற வரலாற்று உண்மையை உணர்த்த.

நான் ஏன் பௌத்த சமண தத்துவத்தை நம்புகின்றேன்.

தத்துவ மதங்களான பௌத்தமும் சமணமும் தீர்க்கதரிசிகளால் தத்துவத்தையே முன்வைத்தாலும் அவர்களின் பகுப்பாய்வு நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. நமது சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் பௌத்த- சமண தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே முன்வைக்கின்றன. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க தயாரக இருக்கின்றது தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். .பௌத்த சமணர்கள் எந்த எல்லைக்குள் நின்றுகொண்டும் அவர்களின் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.பௌத்தம் –சமணம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம் அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை.

எம்மை யார் என்று அடையாளப்படுத்திய, குலதெய்வங்களை சைவம் என்ற வர்ணத்தில் வைத்து அழித்தொழிந்து போக செய்யாமல். எம் மக்களை பாதுகாத்து, எம் பாரம்பரியத்தை பாதுகாத்து, எம் கலாச்சரத்தை பாதுகாத்து, எம் குலத்தொழிலை பாதுகாத்து, எம் குலதெய்வங்களை பாதுகாத்த காரணத்தினால். எமது வாழ்நாள் நன்றிகடனாக பௌத்த சமண தத்துவத்தை நான் எற்றுகொள்கின்றேன்.


புகைப்படம் : கழகுமலையில் உள்ள பௌத்த சமணர்கள் பள்ளி . எமது மூதாதையர்கள் வாழ்வியில் பாடம் படித்த இடம் .


பௌத்த- சமண வரலாற்று அடையாளம் உள்ள கழுகு மலையில் இருக்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவில் 

வெட்டுவான் கோவில் ஒரே கல்லீல் [MONOLITHIC]
செதுக்கப்பட்டுள்ளது.பெரிய மலைப் பறையில் ஏறக்குறைய 7.50 மீட்டர் அழத்திற்குச் சதுரமாக வெட்டியடுத்து அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியுள்ளனர்.இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கற் கோவிலாகும்.கோயிற்பணி  முற்றுப் பெறவில்லை சிகரம் மட்மே முற்றுப் பெற்றுள்ளது. இதன் காலம் கிபி 8ஆம் நூற்றாண்டாகும்.






குறிப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்த சமண பள்ளிகள்
இங்கே நடத்தப்பட்டுள்ளது இந்த பள்ளிகளில் படித்தவர்களே பள்ளர்கள்(தேவேந்திர குல வேளாளர்கள் * குடும்பர்கள்) என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கழகுமலையை சுற்றி விவசாய பூமி அறுவடை செய்யப்பட்டுள்ளது இங்கே விவசாய குடிகள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பதை இந்த அடையாளத்தை வைத்து சொல்லிவிட முடியும்...





சங்கரன் கோயிலுக்கு வடமேற்கே பத்துமைல் தொலைவில் பூர்விக விவசாயகுடிகள் அதிகம் வாழும் வீரசிகாமணி கிராமத்தில் உள்ள புத்தர் பாதம்.



S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...